Tuesday, October 11, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2022

  திருக்குறள் :





பொருள் :

பழமொழி :

Never cast the oar till you are out

கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.

பொன்மொழி :

கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.

பொது அறிவு :

1. இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர் எது ? 

நெல் . 

2.இந்தியாவில் எந்த ஆண்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது ? 

1953 ஆம் ஆண்டு.

English words & meanings :

Catenation - bonding of atoms of the same elements to form a chain. Carbon atoms tend to form catenation. சங்கிலியாக்கம். சங்கிலி இணைப்பு

ஆரோக்ய வாழ்வு :

கேரட் வேர் காய்கறியை சார்ந்ததாகும், அவை எண்டோடாக்சின்கள், பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்ரோஜனுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் தனித்துவமான இழைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு சில நாட்களுக்கு கேரட்டை பச்சையாக சாப்பிட்டால், உயர் எண்டோடாக்சின்கள், உயர் கார்டிசோல் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்லலாம். உடலில் உள்ள எண்டோடாக்சின்களை நச்சு நீக்க இது ஒரு சிறந்த வழியாகும்.




நீதிக்கதை

குகையுடன் பேசிய நரி

ஒரு காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் இரை தேடி காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்தும் அதற்கு ஒரு சிறிய இரைகூடக் கிடைக்கவில்லை. வழியில் ஒரு பெரிய குகையினைக் கண்டது. உடனே, சிங்கத்திற்கு ஒரு யோசனை பேசாமல் நாம் இந்தக் குகைக்குள் ஒளிந்து கொண்டால், இந்த குகையில் இருக்கும் விலங்குகள் இரை தேடிவிட்டுத் திரும்பி மீண்டும் இங்கேதானே வரும். அப்படி வரும் விலங்குகளை பிடித்து உண்டுவிடலாம் என்று நினைத்து அந்தக் குகைக்குள் சென்று படுத்துக் கொண்டது. 

அந்தக் குகையில் அவிபுச்சன் என்கிற ஒரு புத்திசாலியான நரி வசித்து வந்தது. தன் குகைக்குத் திரும்பி வந்து தன் குகைக்குள் நுழைய முனைந்தப்போது குகையின் வாசலில் சிங்கத்தின் காலடித் தடங்கள் இருப்பதனைப் பார்த்து குகைக்குச் சிங்கம் ஒன்று வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டது. ஆனால் நரிக்கு ஒரு சந்தேகம்?. சிங்கம் உள்ளே இருக்கிறதா? அல்லது சென்று விட்டதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக குகைக்கு வெளியே நின்று கொண்ட நரி, ஏய், குகையே! ஏய், குகையே! என்று அழைத்தது. சிங்கம் எழுந்தது. வெளியே ஒரு நரி இருப்பதனை அறிந்து கொண்டது. அது யாரிடம் பேசுகிறது என்று கவனித்தது. 

நரி, மீண்டும், ஏய், குகையே ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்றது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த நரி குகையிடம் பேசுகிறது? என்று யோசித்தது. நரி, குகையே என் மீது ஏதும் கோபமா? நீ தினமும் என்னிடம் பேசுவாயே? இன்று ஏன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்? என்று கேட்டது. அப்போதுதான் சிங்கத்திற்குப் புரிந்தது. அடடா! இந்தக் குகை தினமும் நரியுடன் பேசக்கூடியது போலும். ஆனால், இன்று ஏனோ இது பேசவில்லை என்று நினைத்தது. நரி, ஏய், குகையே! நீ பேசிய பின்னர்தானே நான் உன்னுள் நுழைவேன். இன்று நீ பேசாமல் இருந்தால் நான் எப்படி உன்னுள் நுழைவேன்? என்றது. 

சிங்கம் பதறிப் போனது. அடடா! குகை பேசினால்தான் நரி குகைக்குள் வருமாமே! நரி குகைக்குள் வராவிட்டால் நமக்கு இரை கிடைக்காதே! என்று நினைத்த சிங்கம் குகைபோலப் பேசினால், அந்த நரி குகைக்குள் வந்துவிடும். நாமும் அதை அடித்துச் சாப்பிட்டு விடலாம்! என்று நினைத்து, ஏ நரியே! நான் வேறு சிந்தனையில் இருந்ததால் உன்னிடம் பேசவில்லை. தவறாக நினைக்காதே. வா உள்ளே! என்று குகை பேசுவது போல பேசி குரல் எழுப்பியது. அவ்வளவுதான், குகைக்குள் இருந்து சிங்கத்தின் குரல் வெளிவந்ததும் சுதாரித்துக் கொண்ட நரி, தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தலைதெறிக்க ஓடிப் போனது. 

நீதி :
எதனையும் செய்வதற்கு முன்பு ஆலோசித்துச் செய்யவேண்டும்.

இன்றைய செய்திகள்

12.10.22

* அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.

* வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்கள் சேதமடைவதைத் தவிர்க்க கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 * 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது  என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடைபெற்றது.

* ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அஸ்டம் ஓரானின் குடும்பத்திற்கு ஜார்க்கண்ட் அரசு, டிவியும் இன்வெட்டரும் வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்தக் குடும்பமும் கிராமத்தினரும் முதல் முறையாக தங்கள் வீட்டுப் பெண் ஆடுகளத்தில் விளையாடுவதை பார்க்க இருக்கின்றனர்.

* பூமியில் இருந்து விண்ணில் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய நெபுலா புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.

* ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தில் ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உக்ரைன்.

* தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

* 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது.

* மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியது தாய்லாந்து அணி.

Today's Headlines

*  Even if there is heavy rain, the power supply will not be affected: Minister Senthilbalaji assures.

*  17 instructions have been issued to the ration shops on behalf of the Cooperative Department to avoid damage to the products during the Northeast Monsoon season.

  * After 5 years, Tamil Nadu has received permission to set up 25 primary health centers and 25 urban health centers, Minister M. Subramanian said.

 * Higher Education Minister Ponmudi has said that the number of students enrolling in engineering courses has increased this year.

*  Chennai Meteorological Department has informed that 16 districts of Tamil Nadu are likely to receive heavy rain today.

* National Vocational Training Mela was held yesterday at 280 locations across the country under Prime Minister Narendra Modi's Skill India program.

*  The Jharkhand government has provided a TV and inverter to the family of India captain Astam Oran in the FIFA U-17 World Cup football tournament.  With this, the family and the villagers are witnessing their daughter playing on the field for the first time.

 * NASA has released a photo of the eye-catching bubble-covered nebula 7,100 light-years away from Earth.

* UN  In an emergency session of the General Assembly, Ukraine has registered its strong condemnation, criticizing Russia as a terrorist state.

* Tamil Nadu is ranked 5th in the medal list in the national sports competition.

 * The 16-team Junior Women's World Cup started in India yesterday.

* Women's Asia Cup Cricket: The Thailand team made surprising progress to the semi-finals for the first time.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, October 10, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.10.2022

 திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: வான் சிறப்பு

குறள் : 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

பொருள்:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

பழமொழி :

Whatever you do, do it properly.
செய்வன திருந்தச் செய்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்

பொன்மொழி :

எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால் பிறரை அவமதிக்கிறானோ, அவன் மந்த புத்தியுடையவன்!

பொது அறிவு :

1. உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் இடம் எது? 

கிழக்கு சகாரா பாலைவனம். 

2. உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு எது? 

ஜெர்மனி.

English words & meanings :

bio-ly-sis - the death and disintegration of living organisms. Noun. Banana peels take more time for biolysis. உயிரியல் சிதைவு. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

துளசி இலைகளை எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம் .இதனால் சொறி சிரங்கு போன்றவை முற்றிலும் குணமாகும்.

NMMS Q 72 :

விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 9, 30, 51, 72, _________ 

விடை : 93. விளக்கம்: 9+21 = 30; 30+21 = 51; 51*21 = 72; 72+21= 93;

அக்டோபர் 11


பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்




பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child, Day of the Girl, International Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.[1][2] இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.


நீதிக்கதை

உண்மைக்குக் கிடைத்தப் பரிசு

ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர். 

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். 

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள். 

அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். 

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். 

அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீர்ரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார். 

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார். 

ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். 

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தர். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. 

ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான். 

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். 

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன். 

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது. 

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம். 

பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. 

பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார். 

நீதி :
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.

இன்றைய செய்திகள்

11.10.22

* சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.

* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் வரும் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

* சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.

* 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடக்கம்.

* 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாகே, டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டிப்விக் ஆகிய மூன்று அறிஞர்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

* ரஷ்யா - உக்ரைன் போர்: கீவ் உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்.

* பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் மீண்டும் 'சாம்பியன்'.

* தேசிய விளையாட்டுப் போட்டி: டிரையத்லானில் தமிழக வீராங்கனை ஆர்த்திக்கு வெண்கலம்.

* டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.


Today's Headlines

* Southern Railway has ordered to increase in the speed of 86 express trains from Chennai to Kudur from 110 to 130 mph.

 * Weather forecast: Hefty rain warning for 9 districts in Tamil Nadu today.

 * Union Minister of State for Health Bharati Praveen Pawar has said that AIIMS Hospital in Madurai will be completed by 2026.

 * The Tamil Nadu Welfare and Rehabilitation Department Commissioner have warned that strict action will be taken against agents who illegally send youth abroad.

 * Preparation of budget for the financial year 2023-24 begins.

 * The 2022 Nobel Prize in Economics has been announced.  The Nobel Prize is shared by three American scholars, Ben Bernaghe, Douglas Diamond, and Philip Dibwig.

* Russia-Ukraine war: Bombing hits cities including Kiev again

* Formula 1: Dutchman Verstappen is 'Champion' again.

 * National Games: Tamil Nadu's Aarti wins bronze in the triathlon.

 * T20 World Cup practice match: Team India beat Western Australia and won the match
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, October 9, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.10.2022

 திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் : 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பொருள்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், இறைவனின் திருவடிகளை தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

பழமொழி :

Diligence is the mother of good fortune

முயற்சி திருவினையாக்கும். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன். 

பொன்மொழி :

உலகின் எந்த கோடீஸ்வரனாலும் தன் கடந்த காலத்தை வாங்க முடியாது. எனவே ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் சந்தோசமாக இருங்கள் ...அன்னை தெரேசா

பொது அறிவு :

1. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது?

 ஜூன் 5 .

 2. பப்பாளி பழத்தின் தாயகம் எது?

 மெக்சிகோ.

English words & meanings :

acou-stic - relating to sound or the sense of hearing. dogs have a much greater acoustic range than humans". Adjective. செவிப்புலன் சார்ந்த. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு :


கேரட்டை பச்சையாக சாப்பிடும்போது, அதன் நார்ச்சத்து அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனுடன் பிணைக்கிறது மற்றும் உடலில் இருந்து அதை இழுக்க உதவுகிறது. இது முக்கியமானது, ஏனெனில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் முகப்பரு, மனநிலை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல்வேறு ஹார்மோன் இடையூறுகளுக்கு வழிவகுக்கும்


அக்டோபர் 10


உலக மனநல நாள்

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.[1] இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.[2][3] ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.[4]

நீதிக்கதை


முரசு சத்தம்

ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியோடு இருந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ஏதோ ஒரு பெரிய விலங்கிற்கு நாம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணி பயந்து கொண்டிருந்தது. ஆனால் சற்று நேரம் கழித்து அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது. 

பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது. 

நீதி :
ஆசையே துன்பத்திற்குக் காரணம்.

இன்றைய செய்திகள்

10.10.22

* சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

* குறைந்த நீர்வரத்து: வைகை, முல்லைபெரியாறு அணைகளில் நீர் திறப்பு குறைப்பு.

* மது அருந்திய நிலையில் ஓட்டுநர் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

* டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதை அடுத்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

* இந்திய விமானப்படைக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆரம்பக்கட்ட பயிற்சி அளிக்கப்படும் என்று விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.

* கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு.

* குண்டுவீச்சு காரணமாக ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் சேதம்.

* பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து இந்திய அணி 4-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதிக்கும் தகுதி பெற்றது.

* உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி வெற்றி.

Today's Headlines

* Minister KN Nehru has said that 85 percent of the rainwater drainage works in Chennai have been completed.

*  Low water flow: Reduction of water opening in Vaigai and Mullaperiyar dams.

 * Rapid Transport Corporation Managing Director K. Ilangovan has warned that strict disciplinary action will be taken if drivers and other employees are found to be working under the influence of alcohol.

 * Due to unprecedented rains in Delhi, people are suffering due to waterlogged roads.

 * Air Chief Marshal VR Chaudhary has said that 3,000 Agni soldiers will be selected for the Indian Air Force by December and they will be given initial training.

 * Earthquake in Greece: 5.1 on the Richter scale.

 * Damage to bridge connecting Russia to Crimea due to bombing.

 * Team India tasted their 4th win and qualified for the semi-finals of the Women's Asia Cup cricket tournament after defeating Bangladesh in the league match.

* Indian player Pankaj Advani won the title of 'Champion' in the World Billiards Tournament.

* ISL  Bengaluru team won the football match.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்