Wednesday, August 3, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2022

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நன்றியில் செல்வம்

குறள் : 1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

பொருள்:
பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரும் மேகமே வறுமைப்பட்டது போலாகும்.

பழமொழி :

Everything comes to him who waits.

காக்கத் தெரிந்தவனுக்குக் காரியம் கைகூடும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 

2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்

பொன்மொழி :

மனிதராகப்  பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்....புத்தர்

பொது அறிவு :

1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் யார்? 

பச்சேந்திரி பால். 

2. நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு எது? 

கணையம்

English words & meanings :

lac·er·at·ed - to tear roughly;adjective, வேகமாக கிழித்தல், பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

வைட்டமின் பி6 என்பது கிளை ஆக்சைலேட்டின் வளர்சிதை மாற்றம் உட்பட பல்வேறு வளர்சிதை மாற்றங்களில் பயன்படுகிறது. இதன் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது.
கேரட், பால், ரிக்கோட்டா சீஸ், வெண்ணெய், வாழைப்பழங்கள், சால்மன் மற்றும் கோழி போன்ற உணவுகளில் வைட்டமின் பி6 காணப்படுகிறது.

NMMS Q 39:

33 1/2% இன் தசம வடிவம் _______ 

விடை: 0.36

ஆகஸ்ட்  04


பராக் உசைன் ஒபாமா  அவர்களின் பிறந்தநாள்



பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.[1] அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

நீதிக்கதை

இரண்டு அணில்கள்

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.

அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.

இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.

அதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.

அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.

இன்றைய செய்திகள்

04.08.22

∆ குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள்  இடத்து விலகி இருக்க வேண்டும் - ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

∆ தமிழகத்தில் ஆகஸ்டு 6 வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.--வானிலை மையம் அறிவிப்பு.

∆ CAT தேர்வு ஆன்லைன்னில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13 வரை அவகாசம்

∆ சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏ பிரிவில்  வைசாலி 
  ஹரி கிருஷ்ணா, பி பிரிவில் வீரர் குகேஷ்,  சி  பிரிவில் அபிஜித் குப்தா ஆகியோர் வெற்றி

∆ காமன்வெல்த் போட்டி:பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றார்

Today's Headlines

∆ Stay away from people suffering from monkey measles - Union Health Department advised. 

 ∆ Widespread rain is likely to occur in Tamil Nadu till August 6.
 --Weather Center Announcement.

∆ The last date to apply online for the CAT exam is the 13th of August

 ∆ International Chess Olympiad in A section Vaisali Hari Krishna,  B section player Gukesh and Abhijit Gupta win in the C category

∆ Commonwealth Games: India's Lovepreet Singh wins bronze in 109kg weightlifting event
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, August 2, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2022

   திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நன்றியில் செல்வம்

குறள் : 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

பொருள்:
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை

பழமொழி :

Every bird loves to hear itself singing.
தம் புகழைத் தாமே பாடாதார் இல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 

2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்

பொன்மொழி :

ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்....விவேகானந்தர்

பொது அறிவு :

1. இரத்தம் வடிதல் போன்றவற்றால் குறையும் விட்டமின் எது? 

விட்டமின் கே . 

2.இம்மியூனிட்டி என்றால் என்ன ? 

எதிர்பாற்றல்.

English words & meanings :

kitch·en·ware - utensils like pot and pan used in the kitchen. Noun. சமையலறை பாத்திரங்கள். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

சிவப்பு திராட்சையில் பிளவனாய்டுகள் உள்ளன. இவற்றில் காணப்படும் ரெஸ்வெராட்ரோல் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அடிக்கடி சிவப்பு திராட்சை எடுத்து வருவது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவும்.




NMMS Q 38:

அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 39. அதில் இரண்டாவது எண்_______

 விடை: 13

நீதிக்கதை

முதலையும்,நண்டும்

ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன. அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன. மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.

கோடைகாலம் வந்ததது. நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது. தண்ணீர் குறைந்ததால், முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவதில்லை. உண்ண எதுவும் இல்லா நிலையில், ஒரு நாள், முதலை நண்டிடம், நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.

அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய. நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.

செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து முதலை செத்தது போலத்தெரியவில்லையே! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே என்றது. இதைக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது. அதைப் பார்த்த நரி, நண்டிடம் செத்த முதலை எப்படி வாலை ஆட்டும். நீங்கள் இருவரும் பொய் சொல்கிறீர்கள் என கூறிவிட்டு ஓடியது. அறிவில்லாத முதலையும், நண்டும் ஏமாந்தது.

இன்றைய செய்திகள்

03.08.22


◆ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தால் வட்டார அளவில் புத்தொழில் நிறுவனங்கள் உருவாவதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளது  என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

◆ரெட் அலர்ட்: நீலகிரி, கன்னியாகுமரி விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை.

◆காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்ததும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

◆மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி முகக்கவசம், பிபிஇ கிட் உபகரணங்கள் தயாரிக்க தடை.

◆அல்-காய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

◆திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் என்சிசி வீரர்கள், வீராங்கனைகள் 22 பதக்கங்களை வென்று சாதனை.

◆அண்டோரா நாட்டில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.

◆காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்.

Today's Headlines

◆Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan has said that the start-up Tamil Nadu project is likely to create over 3 lakh jobs by creating a regional level.

◆Red Alert: Nilgiris, Kanyakumari rushed National Disaster Rescue Force.

◆The 2nd airport of Chennai will be built at Paranthur near Kanchipuram. Union Minister of State for Aviation VK Singh said that the Ministry of Civil Aviation will begin the preliminary work.

◆Prohibition of producing facial and PPE kit equipment without the permission of the Central Drug Control Board.

◆It is reported that Ayman al-Zawahiri, the leader of the al-Qaeda organization, was killed. Reuters news agency reported that the US forces in Afghanistan were killed.

◆NCC players won 22 medals in the state-level shooting competition in Trichy.

◆Master Iniyan, Grand Master of Tamil Nadu won in the international chess competition in Andora.

◆Commonwealth Games: One more medal for India - Harjinder Kaur won the bronze medal
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, August 1, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2022

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நன்றியில் செல்வம்

குறள் : 1002
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

பொருள்:
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்

பழமொழி :

Don't bargain for fish that is still in the water.
கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 

2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்

பொன்மொழி :

வாழ்க்கையில் நிறைய
பிரச்சனைகளை சந்தித்த
பின் அறிவையும் சில
இழப்புக்களை பார்த்த
பின் அதிக அடக்கத்தையும்
உணர்கிறோம்..!

பொது அறிவு :

1.மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் என்ன? 

ரிப்ஸ் .

 2.மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை யாது?

1400.

English words & meanings :

jan·gling - to produce a harsh sound. Verb. கடூர சத்தம் உருவாக்குதல். வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

பெரும்பாலான பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் காணப்படுகிறது. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.
சிறுநீரக செல்கள் மீது பாதுகாப்பை வழங்குகிறது. ப்ளூ பெர்ரி பழங்களில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ் பரஸ் போன்ற பண்புகள் உள்ளன. க்ரான் பெர்ரி பழங்கள் சிறுநீர் பாதையை தொற்றுக்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.

NMMS Q 37:

ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கின் நான்கில் ஒரு பங்கின் ஏழில் ஒரு பங்கு 20 எனில் அவ்வெண் _______. 

விடை: 1680

ஆகஸ்ட்  02


ஆபிரகாம் பண்டிதர்    அவர்களின் பிறந்தநாள்





ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.

பிரபுல்லா சந்திர ராய்  அவர்களின் பிறந்தநாள்



பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray -  ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.

பிங்கலி வெங்கைய்யா




பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.

நீதிக்கதை

நான்கு பொம்மைகள்

நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக நான் என்ன சின்னக் குழந்தையா? இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார். சிற்பி இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு. நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன், இதில் என்ன விஷயம் இருக்கிறது என்கிறார்.

முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி. அதனுடன் ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார். சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது. சிற்பி மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித்தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள் என்கிறார்.

இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார். இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது. இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார். பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார். இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.

சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார். அப்போது இதில் யார் தான் சிறந்த மனிதர் என்று அரசன் கேட்கிறார். என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார். அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார். இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.

மூன்றாம் முறை வரவே இல்லை. சிற்பி நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள்". அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி, எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார். நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்கவேண்டும். மற்ற மூன்று பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும்

இன்றைய செய்திகள்

02.08.22

📍மதுரை மண்டல கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்: 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி.

📍நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

📍தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளில் உள்ள 16 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 26-ம்தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

📍இடம்பெயர்ந்த பழங்குடி மக்களுக்களுக்கான நிவாரணம் குறித்த விவரம் மத்திய அரசிடம் இல்லை என்ற தகவலை மத்திய பழங்குடியினர் துறை இணை அமைச்சர் மக்களவையில் வெளியிட்டார்.

📍புவியைக் கண்காணிக்கும் ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள்: எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்த இஸ்ரோ திட்டம்.

📍கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று பூமி 24 மணி நேரத்திற்கு முன்னரே தன்னைத் தானே சுற்றும் ஒருநாள் சுழற்சியை முடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

📍காமன்வெல்த் ஜூடோ போட்டி : சுசிலா தேவி இறுதி சுற்றுக்கு தகுதி - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி.

📍காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதிக்கு முன்னேற்றம்.

📍காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி 313 கிலோ தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

Today's Headlines

📍Madurai Regional Arts, Science Colleges Counseling Begins: 73,260 Candidates for 14,430 Seats

 📍The Madras High Court has warned that if the court order to remove water encroachments is not implemented within 10 days, it will have to order the Chief Secretary to appear in person.

 📍The Tamil Nadu Public Service Commission has announced August 26 as the last day to apply online for the 16 vacant posts of Career Counselor and Social Officer.

 📍Union Minister of State for Tribal Affairs released the information in the Lok Sabha that the central government does not have the details of the relief for the displaced tribal people.

 📍Earth observation satellite 'Microsat-2A': ISRO plan to launch by SSLV rocket.

 📍Last July 29 Scientists reported that the Earth completed its one-day rotation around itself 24 hours earlier on that date.

 📍Commonwealth Judo Tournament: Susila Devi qualifies for finals - India assured of another medal

 📍Commonwealth Boxing Tournament: India's Amit Pangal advances to quarter-finals

 📍India's Achinda Shuli lifted 313 kg and won the gold medal in the Commonwealth Weightlifting Championships.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்