Tuesday, April 5, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.04. 22

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்

குறள் : 872

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

பொருள்:
படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது

பழமொழி :

A tree is known by its fruit

நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நடை, ஆடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன். 

2. ஆசிரியர்கள் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் ஆக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

உங்கள் மகனுக்கு 1,000 தங்கக் காசுகளைக் கொடுப்பதை விட திறமையைக் கொடுப்பது சிறந்தது___ சீனப் பழமொழி

பொது அறிவு :

1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது 

- வேளாண்மை
2.மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது? 

- ஆந்திரப்பிரதேசம்

English words & meanings :

Consumers - a person buys things and uses it, நுகர்வோர், 

cycle - bicycle a mode of transport, மிதிவண்டி, cycle - facts of events happens repeatedly, நிகழ்வு சுழற்சி

ஆரோக்ய வாழ்வு :

பாசிப்பயறில் நிறைந்துள்ள பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், மற்றும் இரும்புச்சத்து ஆகியவை ரத்தசோகையை சமாளிக்க பெருமளவில் உதவி புரிகிறது. எனவே பாசிப்பயிறு பெண்களுக்கு மிகச் சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. பாசிப்பருப்பு ஆன்டிஆக்சிடன்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச்சென்று வைக்க உதவுகிறது. பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி ,சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதில் 24 சதவீத புரோட்டின் உள்ளது.




கணினி யுகம் :

Ctrl + O - Open options. 

Ctrl + P - Open the print window.

நீதிக்கதை

முட்டாள் தவளையும், புத்திசாலி தவளையும்

ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரியின் நீர் குளிர்ச்சியை தாங்க முடியாத ஒரு தவளை, மழை நின்றதும் கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. 

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை கண்டு மகிழ்ந்து வரவேற்றது. பின் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. 

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. புதிய தவளையை துரத்திவிட முடிவு செய்தன. 

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்? எனக் கேட்டது. 

நான் ஏரியில் தங்கி இருந்தேன் அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி என்றது, ஏரித் தவளை. 

கிணற்றுத் தவளை நம்பவில்லை. நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை. 

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து நீ பொய்யன் என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கினாள் அதனுள் ஏரித் தவளை, தாவிக்குதித்து தோண்டித் தண்ணீர்ருடன் மேலே சென்று ஏரியை நோக்கிச் சென்றது. 

நீதி :
முட்டாள்களிடம் இருப்பதை விட தனியே செல்வதே சிறந்தது.

இன்றைய செய்திகள்

06.04.22

🍁மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழு அமைப்பு

🍁விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் அடங்கிய குழு ஓராண்டு காலத்துக்குள் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும். 

🍁சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் நவீன தொழில் நுட்ப சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். 

🍁பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் புதிய செயல்திட்டம் -  அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. 

🍁டேபிள் டென்னிஸ் தரவரிசை : இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா- அர்ச்சனா காமத் ஜோடி முன்னேற்றம்.

🍁 கொரியாவில் நடந்து வரும்  கொரியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் , கொரியாவின் சோய் ஜி ஹூன் மோதினர் 
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில்  21-16,21-18 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார் .

Today's Headlines

 🍁A 13-member panel headed by retired Justice Murugesan to formulate state education policy is formed 

🍁 A committee including Viswanathan Anand and DM Krishna will formulate the state education policy within a year.

 🍁Hitech CCTV cameras will soon be installed in 2000 state government buses in Chennai.

🍁 For the safety of female passengers - a new scheme will be implemented soon says Minister Sivasankar's announcement.

 🍁Table tennis rankings: India's Manika Bhadra-Archana Kamath pair advance in doubles.

🍁 Laxia Sen and Choi Ji Hoon of Korea clash in the first round of the men's singles at the Korea Open Badminton Tournament in Korea. Lakshaya Sen won the set 21-16, 21-18 in a thrilling match. 
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, April 4, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.04.22

 திருக்குறள் :

பால்: பொருட்பால்
,
:இயல் :நட்பியல், 

அதிகாரம் :பகைமாட்சி, குறள் :866, காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

பொருள்
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.


பழமொழி :

A rolling stone gathers no moss

அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நடை, ஆடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன். 

2. ஆசிரியர்கள் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் ஆக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

ஒரு குழந்தையின் வாழ்க்கை ஒவ்வொரு நபரும் ஒரு அடையாளத்தை விட்டுச்செல்லும் ஒரு துண்டு காகிதத்தைப் போன்றது____ சீனப் பழமொழி

பொது அறிவு :

1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது? 

 மலேசியா 

 2. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது? 

இரும்பு

English words & meanings :

Bio degradable - can be decomposed, உயிரின சிதைவிற்கு உள்ளாகும் பொருள், 

bio - fuel - fuel obtained from living things, உயிரி எரி பொருள்

ஆரோக்ய வாழ்வு :

தேங்காயில் உள்ள மருத்துவ குணங்கள் புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்பு உள்ளிட்ட தாது பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தேங்காய்ப்பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. இவை உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.




கணினி யுகம் :

F7 - Spell check selected text. 

F11 - Create a chart

நீதிக்கதை

என் அடிமைகளுக்கு நீ அடிமை

மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.

அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும்படி ஆணையிட்டான்.

முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப்படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.

முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து கொல்ல வரும் நபரைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா? என்று கேட்டான்.

அதற்கு முனிவர் மன்னா... நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது! என்றார்.

அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக முடியும்? என்று முனிவரிடம் கேட்டான். அவர் அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன் என்றார். மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.

இன்றைய செய்திகள்

05.04.22

🌸திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடல் நீர் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள சிறிய பாறைகள், மணல் திட்டுகள் தெரிந்தது.

🌸சென்னை: தமிழ்நாட்டில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களில் 700 ஹெக்டேர் பரப்பளவு அடையாளம் காணப்பட்டு வெட்டும் பணி தொடங்கிவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

🌸சென்னை: காவல் உதவி செயலியை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி டயல் 112, 100, 101 ஆகிய எண்கள் மூலம் பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்கும் பொருட்டு டயல் 100 செயலியானது காவல் உதவி செயலியின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

🌸இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அமைந்திருக்கும் பள்ளியில், தனது சகோதரியை மடியில் வைத்துக் கொண்டு பாடங்களை கவனித்து எழுதிக் கொண்டிருக்கும் சிறுமியின் புகைப்படம் பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

Today's Headlines

🌸Thiruchendur: Seawater infiltrated 100 meters in Thiruchendur.  Thus the small rocks and sand dunes in the sea became visible.

 🌸Chennai: The Tamil Nadu government has informed the High Court that 700 hectares of sessile oak trees growing in Tamil Nadu have been identified and the cutting work will start soon. 

 🌸Chennai: Chief Minister MK Stalin has initiated the Kaval Uthavi App for public use.  Through Emergency Mobile Call Facility Dial numbers 112, 100 and 101 users can directly complain for that 100 is sync with Kaval Uthavi App. 

🌸 Imbal: At a school in a small village near Imphal, Manipur, a photo of a little girl holding her sister in her lap and writing lessons touched the heart of many viewers.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, April 3, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.04.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: பகைமாட்சி

குறள் : 865

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.

பொருள்:
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்

பழமொழி :

who sows thorns will never reap grapes.


விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?


இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நடை, ஆடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன். 

2. ஆசிரியர்கள் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் ஆக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

ஒருவர் தனது அறிவின் வரம்புகளை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு." ___ சீனப் பழமொழி

பொது அறிவு :

1. நதிகள் இல்லாத நாடு எது? 

ஓமன். 

2. தோல் மூலம் வியர்வையினை வெளியிடாத விலங்கு எது? 

நாய்.

English words & meanings :

Artificial - which is not natural, செயற்கையான, 

adhesives - objects used for sticking, ஓட்டும் பொருள்.

ஆரோக்ய வாழ்வு :

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.பார்வைக்கு மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய், நீரிழிவு, இதய நோய் உடல் பலவீனம்,ஆகியவற்றை சரிசெய்யும்.நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.

கணினி யுகம் :

F2 - Edit the selected cell. 

F5 - Go to the specific cell

ஏப்ரல் 04


மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களின் பிறந்தநாள்

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranar, ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது.[4] சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.  மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.



மார்டின் லூதர் கிங் அவர்களின் நினைவுநாள்





மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968)[1] ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.[2] பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நீதிக்கதை

நரியின் தேடுதல்

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஒரே குஷி... நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்! என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது. பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது. ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்.... சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி.

இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது. அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை. ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ? என்று பயந்தது. பிறகு, இல்லை.. இல்லை.. நான் உயிரோடு தான் இருக்கிறேன். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும் என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது. இந்த நரியின் கற்பனை மாதிரி தான். சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக்கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா? என்று ஏங்கி வாடுகின்றனர். காலை நரி போல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம். மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம்.

இன்றைய செய்திகள்

04.04.22

* நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை வரும் 6ம் தேதி முதல் தொடங்குகிறது. முன்னதாக, இன்று முதல் ஆன்லைனில்  விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 6ம் தேதிக்கு மாற்றப்ப்பட்டுள்ளது.

* யுனிசெப் போன்ற ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் பாரத்
பயொடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளது. மேலும், கோவக்சின் தடுப்பூசி பெற்ற நாடுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

*வரும் 7ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

*1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளதால், 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாயத்தேர்ச்சி செய்யப்படுவார்கள் 
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
* மகளிர் உலகக் கோப்பையை 7வது முறையாக ஆஸ்திரேலியா தட்டிச்சென்றுள்ளது.


Today's Headlines

* The application process for the Common Entrance Test (CUET) for admission of undergraduate students in Central Universities in the country will start on the 6th of this month. Earlier, it was announced that applications will be accepted online from today.  But, it has now been shifted to the 6th.

 * United Nations organizations like UNICEF Bharat Biotech have stopped purchasing the Kovac vaccine.  It also called on countries vaccinated against coxsackie to take appropriate action.

 * Chennai Meteorological department warns of possible low pressure in the Bay of Bengal on the 7th.

 * It has been informed that the final examination of the year will be held from 1st to 9th class.  Also, as the Right to Compulsory Education Act is in force, everyone will be compulsory up to 8th standard
 As reported.
  
 * Australia wins the Women's World Cup for the 7th time.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்