Thursday, November 25, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.11.21

திருக்குறள் :

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 

பொருள் 

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என எண்ணாது உலகு

பழமொழி :

One step forward and two steps backward.


 சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 

2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்

பொன்மொழி :

தனியாக நடக்க தயாராக இருங்கள்..
உங்களுடன் தொடங்கும் பலர்
நீங்கள் முடிக்கும் போது
உங்களுடன் இருக்க மாட்டார்கள்.!.------ மேரி கோம்

பொது அறிவு :

1.நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது? 

கால்பந்து.

2. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம் எது? 

ஐக்கிய அமெரிக்க நாடுகள்.

English words & meanings :

Set off - to explore, வெடிக்க வைத்தல், 

put together - organise an event, ஒரு காரியத்தை ஒழுங்கு செய்தல்

ஆரோக்ய வாழ்வு :

விட்டமின் A - பளபளக்கும் தோல், அழகிய முடி, ஆரோக்கிய நகம், சிறந்த பார்வை, வலுவான எலும்பு. காணப்படும் உணவுப் பொருட்கள் - காரட், மீன் எண்ணெய், கீரை, முட்டை, பாலாடைக் கட்டி, பால், ஈரல்

கணினி யுகம் :

Windows Logo (Display or hide the Start menu)

Windows Logo+BREAK (Display the System Properties dialog box)

நவம்பர் 26

அரசியல் சாசன தினம் (இந்தியா)



இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக [1] அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது. 


வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள்





வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaranநவம்பர் 261954 – மே 17[8] அல்லது மே 18[1] 2009தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்தார்.  மே 51976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. 

நீதிக்கதை

கதிர் செய்த செயல்


கதை :
பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி. 

அவர் தூரமாக வரும்போதே, மாணவன் கதிர், டேய் அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்று விட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது. 

வீட்டில் ஒரே பையன் என்பதால் கதிருக்கு செல்லம் அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும், கதிர் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறையவில்லை. 

ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய கதிர், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். 

பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கதிர் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே முடங்கிவிட்டான். 

ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். 

நீதி :
நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்தால் அந்த துன்பம் நமக்கே வந்தடையும்.

இன்றைய செய்திகள்

26.11.21

★புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஹரிராஜ் என்ற மாணவர்  தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாநில அளவிலான ஓவியப் போட்டியில் சாதித்து வருகிறார்.

★நகர முன்னேற்றத்தை மதிப்பிடும் ‘நிதி ஆயோக்’ திட்ட மதிப்பீட்டில் இந்திய அளவில் கோவைக்கு இரண்டாவது இடம்.

★தமிழகத்துக்கு ஐந்து நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

★75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் நாளை நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படவுள்ளது

★வேளாண்மை, உணவுமுறையில் ஏற்படும் எதிர்கால அதிர்ச்சிகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராகுங்கள்: ஐ.நா. எச்சரிக்கை.

★ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டின் இப்போதைய நிதியமைச்சர் மக்தலீனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

★இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

★சாம்பியன் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி.


Today's Headlines

 🌸 Hariraj, a student from a government school near Aranthangi in Pudukkottai district, has been competing at the state-level painting competition for 3 consecutive years.

 🌸 Coimbatore ranks second in India in the ‘Nithi Ayog’ project evaluation for urban development.

 🌸 Indian metrological center informed Orange Alert for Tamil Nadu for five days.

 🌸  The 75th Independence year will be celebrated as constitution day tomorrow in the Central Hall of the Parliament House with great enthusiasm and joy.


🌸UNO warned that Countries must be prepared for future shocks in agriculture and diet.

 🌸 Sweden's current Finance Minister Magdalena Anderson has been elected as Sweden's first female Prime Minister.

 🌸 India's P V Sindhu and Srikanth qualify for 2nd round of Indonesian Open Badminton Tournament

 🌸 Champions League Football: Manchester City team win the match.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, November 24, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.11.21

திருக்குறள் :

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். 

பொருள் 

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்

பழமொழி :

Hard work can accomplish any task.


 எறும்பு ஊற கல்லும் தேயும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 

2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்

பொன்மொழி :


ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.

பொது அறிவு :

1. உலகின் மிகப் பெரிய மலர் இனம் எது? 

ரப்லேசியா அர்னால்டி. 

2. இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம் எது? 

பெங்களூர்.

English words & meanings :

Give it a shot - try it, முயற்சி செய்து பாருங்கள், 

in rain or shine - no matter what - என்ன நடந்தாலும்

ஆரோக்ய வாழ்வு :

விட்டமின் B - வலுவான நரம்புகள், ஆரோக்கிய இரத்த ஓட்டம். காணப்படும் உணவுப் பொருட்கள் - ஈரல், வாழைப்பழம், முருங்கை கீரை, உலர் பருப்பு, பேரீச்சம் பழம், தானியங்கள் ஆகியவற்றில் காணப்படும்

கணினி யுகம் :

Windows Logo+D (Display the desktop)

Windows Logo+M (Minimize all of the windows)

நவம்பர் 25

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்  




பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz,  ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிக்கதை

கடவுளின் சிறப்பு:

கதை :
ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார். 

ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள் என்றார். 

ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் நிலத்தில் பாடுபட்டது நீ, நெல் விளைவித்தது நீ, என்னை உணவருந்த அழைத்தது நீ, அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை என்றான். 

விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்? என்று கூறினார். 

இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின. 

நீதி :
அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.

இன்றைய செய்திகள்

25.11.21

◆மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கண்மாயில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

◆நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

◆தொலைத்தொடர்பு கருவிகள், ஏவுகணைகளுடன் நவீன தொழில்நுட்பத்தில் ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ போர்க் கப்பல்: சர்வதேச தரத்துக்கு இணையாக உள்நாட்டில் வடிவமைப்பு.

◆நாடு முழுவதும் ரேசன் கடைகளில் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஓப்புதல் வழங்கி உள்ளது.

◆ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் நேற்று தொடங்கியது.

◆சாம்பியன் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி.


Today's Headlines

🌸  A 13th century AD land donation inscription has been found near Perungudi near Madurai Airport.

 🌸  The Minister of Medicine and Public Welfare has said that additional students will be included in the 7.5% reservation for rural students in the current medical student admission.

 🌸  ‘INS Visakhapatnam warship in modern technology with telecommunications equipment and missiles: in-house design in line with international standards.

 🌸  The Union Cabinet has approved the extension of the scheme of providing free food grains to the poor in ration shops across the country for a further 4 months.
 
 🌸 The Junior World Cup kicked off in Odisha yesterday.

 🌸 Champions League Football: Manchester United win.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, November 23, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.11.21

திருக்குறள் :

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. 


ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்

பழமொழி :

Both the child and God are there where they are praised.


 குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 

2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்

பொன்மொழி :

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.------ அப்துல்கலாம்

பொது அறிவு :

1.இந்தியாவில் மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

 ஆந்திரப்பிரதேசம். 

2. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? 

சுப்பீரியர் ஏரி.

English words & meanings :

No clue - no idea, ஒன்றும் தெரியவில்லை, 

I am in - count on me, என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்

ஆரோக்ய வாழ்வு :

விட்டமின் C - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆரோக்கியமான தோல், நகம், முடி இவற்றை தரும். உணவுப் பொருட்கள் - சிட்ரஸ் பழங்கள், கொய்யா, அன்னாசி பழம் ஆகியவற்றில்

கணினி யுகம் :

Windows Logo+SHIFT+M (Restore the minimized windows)

Windows Logo+E (Open My Computer)
நவம்பர் 24

சுசானா அருந்ததி ராய் அவர்களின் பிறந்தநாள்... 




சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 241961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். தன் எழுத்து மக்களைச் சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள் , அரசியல் கட்டுரைகள் , விமர்சனங்களைப் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார். இவரது படைப்புகளின் தன்மை பல நேரம் எதனையும் கருப்பு வெள்ளையென்று பிரித்து அடையாளம் காட்டாது. மனிதர்கள், நாடுகள், கொள்கைகள் என்று அனைத்திலும் உள்ள தீமை மற்றும் நன்மையை உணர்ச்சி நிலையிலிருந்து விலகி படைப்பதால் இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுவருகின்றன.

நீதிக்கதை

DPA story 2
ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் ‘தலை’ கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது ‘உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு’ என்று கட்டளை போட்டது ‘தலை’. ஏனென்று மன்னன் கேட்டான். ‘நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்’ என்று பதில் வந்தது. ‘இதற்குத் தீர்வே இல்லையா?’ என்று மன்னன் முறையிட்டான். ‘தலை’ முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு ‘மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்’ என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் ‘ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?’ என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். ‘வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்’ என்று சொல்லி விட்டார்.
 

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை ‘எனக்குத் தெரியாது. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது’ என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.
 

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே ‘ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன’ என்று சொன்னது. அப்போது மன்னன் ‘நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்’ என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் ‘கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன’ என்றது.
 

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும்.

இன்றைய செய்திகள்

24.11.21

★தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

★பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

★தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 25, 26-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

★நவம்பர் 25-ம் தேதி முதல் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் கட்டணங்களை 25% வரை உயர்த்துவதாக வோடாபோன் ஐடியா அறிவித்துள்ளது.

★குழந்தைகளைத் தாக்கும் கரோனா அலை: 5 முதல் 11 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் இஸ்ரேல்.


★இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி: கோவாவை வீழ்த்தி மும்பை வெற்றி.


Today's Headlines

 * Those who inform about the production of banned plastics will be awarded declared by Tamilnadu Pollution Control Board.

* As the School Syllabus is reduced there definitely will be public exams for the students says Education Minister.

* There is a chance of heavy rain for 4 days. On 25th and 26th the coastal areas will get heavy rain warnings from Chennai Metrological Department.

* From November 25th onwards for all the prepaid schemes Vodafone Idea is going to hike the amount by 25%.

* As the Corona started to affect children Israel is taking measures to vaccinate the children of age 5 to 11.

* In the Indian Super League Bombay won by defeating Goa.
 Prepared by

Covai women ICT_போதிமரம்