![]() |
அன்னை தெரசா |
Your effort today is your achievement tomorrow.
இன்றைய உழைப்பு, நாளைய சாதனை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அதிகாலை எழுவதே ஆரோக்கியம்.
2. எனவே அதிகாலையில் எழுந்து எனது பணிகளைச் செய்வேன்.
பொன்மொழி :
எழுந்திருங்கள் , விழித்திருங்கள் , குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைத்திருங்கள் - விவேகானந்தர்
பொது அறிவு :
" 01.தமிழ்நாட்டின் கற்பகவிருட்சம் என்று அழைக்கப்படும் மரம் எது?
பனைமரம்- Palm tree
02. "" தமிழ் நாடகத்தின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்த முதலியார்
Pammal Sambandha Mudaliyar"
English words :
ceremony – a formal public or religious event; முறைசார்ந்த பொதுநிகழ்ச்சி அல்லது சமயச் சடங்கு.
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
நாம் நனவு நிலையில் விழித்திருக்கும்போது நம் நிகழ்கால உணர்வுகளை மட்டும் அறிதற்கேற்ப காலப்புலனுணர்வு செங்குத்து நிலையுடையதாயும் நாம் தூங்கும் நிலையில் நம் இறந்தகால எதிர்கால உணர்வுகளில் பயணம் செய்வதற்கேற்பக் காலப் புலனுணர்வு படுக்கை நிலையுடையதாயும் அமையும் என அந்த நிபுணர் டன்னே தன் கருத்தாகக் குறித்துள்ளார். நாம் பகலில் தொழில்பட்டுக் கொண்டிருக்கும் போது பல்வேறு காரணங்களால் நம்மால் செயலுருவாக்க முடியாமல் போனவை நாம் தூங்கும்போது கனாக்களாகக் காணப்படுகின்றன என்றும் பகலில் செயலுருவாக்க இயலாத நம் விருப்பங்கள் தூங்கும்போது நம் கனாக்களில் செயலுருவாக்கம் பெற முயல்கின்றன என்றும் மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆகஸ்ட் 26
நீதிக்கதை
வியாபாரியின் கதை
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது.
ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான்.
மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான்.
அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான்.
அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான்.
குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார்.
நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான்.
குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான்.
நீதி :
அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment