![]() |
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் |
Time is your greatest asset.
நேரமே உன்னுடைய மிகப்பெரிய சொத்து.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.
2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.
பொன்மொழி :
எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும் ஒதுக்காதே ; உன் பணியை ஊக்கத்துடன் செய்! - அரவிந்தர்
பொது அறிவு :
01.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் நகரம் எது?
02. இந்திய தொல்லியல் துறை எந்த நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது?
English words :
spotlight – a single ray of bright light onto a small area; the centre of public attention or interest.வட்டொளி தெறிவிளக்கு; மக்கள் கவன அல்லது ஆர்வ மையம்.
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள்.
ஆகஸ்ட் 18
- நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
- 1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
- செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ்.
- விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
நீதிக்கதை
சிட்டுக்குருவியின் ஆசை
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment