|
புரூஸ் லீ |
திருக்குறள்:
"பால் :பொருட்பால்
அதிகாரம்: புல்லறிவாண்மை
குறள் எண்:842
அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.
பொருள்:அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை;
அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்."
பழமொழி :
Learning is youth is an engraving on a rock.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
*நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
உன்னால் முடியாது என பலர் என்னிடம் கூறிய வார்த்தைகளை என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது - ஜாக்கிசான்
பொது அறிவு :
1. அணிலின் அறிவியல் பெயர் என்ன ?
ரோடன்ஷியா ஸ்குயிரஸ்.
2. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு என்ன பெயர் ?
வெனம்.(Venom)
English words & meanings :
Happy - மகிழ்ச்சி
Hot - சூடான
வேளாண்மையும் வாழ்வும் :
பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைத் தவிர்ப்பதற்கு, இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
நவம்பர் 27
லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும். இவர் ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர்கள், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.
நீதிக்கதை
முடிவு
ஒரு நாள் ஒரு சிறுத்தை பசியுடன் உணவை தேடியது. அப்போது ஒரு கருப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.
அவை இரண்டும் ஒரு மலை அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகவும் கவனத்துடன் மலை அடிவாரத்திற்கு அருகே சென்றது.
ஆனால் எந்த மானை தாக்குவது என்று அது முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் சிறுத்தையை பார்த்த இரண்டு மான்களும் ஓட துவங்கின. பிறகு அவை இரண்டும் ஓர் இடத்தில் வலதும் இடதுமாக ஓடத் தொடங்கின.
சிறுத்தை அந்த இடத்திற்கு வந்ததும் எதை துரத்தலாம்? என்று யோசித்தது. பின்பு, "கருப்பு மானை துரத்தலாம் கருப்பு மானின் இறைச்சி தான் வெகு ருசியாக இருக்கும்" என்று கூறிக் கொண்டே கருப்பு மானை துரத்தியது.
ஆனால் அதற்குள் கருப்புமான் வெகு தூரம் ஓடிவிட்டது. பின்பு சிறுத்தை, "இது வேகமாக ஓடக்கூடிய மான் இதை நாம் நம்மால் பிடிக்க இயலாது. எனவே, நாம் புள்ளிமானை துரத்துவோம்" என்று திரும்பி வந்து,
எதிர்பாதையில் ஓடத் தொடங்கியது. ஆனால்
புள்ளிமானோ ஏற்கனவே வெகு தூரம் ஓடிவிட்டது.
சிறுத்தை, முடிவெடுப்பதில் சிறிது தயக்கம் காட்டியதால் எந்த மானையும் பிடிக்க இயலவில்லை.
நீதி : எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டாமல், விரைந்து முடிவெடுத்து,எடுத்த முடிவில் நிலையாக இருக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
27.11.2024
* நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு. இன்று 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்.
* சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய உலகின் முதல் இணை செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிசம்பர் 4-ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ.
* மியான்மரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.
* ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கஜகஸ்தானை வீழ்த்தியது இந்தியா.
* ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அல்-நாசர் அணி வெற்றி.
Today's Headlines
* Rajiv Gandhi Government General Hospital, Chennai has been awarded the ‘Eat Right Campus’ certificate by the Food Safety Department for providing quality food to patients.
* Deep depression likely to turn into a cyclone. Very heavy rain warning for 10 districts today: Meteorological Department information.
* ISRO will launch the world’s first co-satellites developed by the European Space Agency to study the Sun on December 4 using PSLV rocket.
* Mild earthquake in Myanmar: 4.4 on the Richter scale.
* Asian Cup basketball qualifiers: India defeats Kazakhstan.
* Al-Nassr team wins today’s match of the Asian Champions League football tournament.
Prepared by
Covai women ICT_போதிமரம்