சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லா தினம் |
பால் :பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
குறள்எண்: 409
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
பொருள்: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும்
கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
Distance lends enchantment to the view.
இக்கரைக்கு அக்கரைப் பச்சை.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
" நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும் "-----ஹெலன் கெல்லர்
பொது அறிவு :
1. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?
2. மீன்கள் இல்லாத ஆறு?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
இவை மனிதர்களின் உடலை தாக்குவதோடு சுற்றுப்புற சூழலையும் மாசடைய செய்கின்றன. செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் செடிகளுக்கு விஷ தன்மையை கொடுக்கிறது.
ஜூலை 03
சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
- 2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.
நீதிக்கதை
வருத்தம்
ஒரு காட்டு வழியே இரண்டு நண்பர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர், ஒரு மரத்தில் இருந்த தேனை எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த ஒரு நண்பர்,
" தேனி எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த தேனை சேகரித்து வைத்திருக்கும் . ஆனால் இந்த மனிதர்கள், வெகு சுலபமாக அதனுடைய தேனை திருடி செல்கின்றனர்.இதை நினைத்து அந்தத் தேனீ எவ்வளவு வருத்தப்படும்" என்று கூறினார்
அதுக்கு மற்றொரு நண்பர் "கண்டிப்பாக அந்த தேனி அவ்வாறெல்லாம் வருத்தப்படாது. ஏனென்றால் மனிதர்களால் அந்த தேனை மட்டுமே திருட முடியும். ஆனால் அந்த தேனை உருவாக்கும் கலையை தேனீயிடம் இருந்து திருட முடியாது. திரும்பவும் தன்னால் தேனை உருவாக்க இயலும் திறமையுள்ள தேனீ, ஒரு நாளும் வருத்தப்படாது என்று கூறினார்.
அதுபோல்தான், உங்களிடம் உள்ள செல்வத்தையோ, உழைப்பையோ எவராலும் திருட முடியும். ஆனால் உங்களிடம் திறமையும், வெற்றி பெறும் திறனும் இருந்தால் எதையும் சாதிக்க இயலும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment