பங்கிம் சந்திர சட்டர்ஜி |
"பால்: பொருட்பால். இயல்: அரசியல்.
அதிகாரம்: கல்வி
குறள்:392
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.
Still waters run deep
நிறை குடம் தளும்பாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
கோபத்தின் ஒரு நொடியில் பொறுமையாக இருந்தால், நூறு நாள் துன்பத்திலிருந்து தப்பிக்கலாம்_____ சீனப் பழமொழி
பொது அறிவு :
1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எது?
2. “மலை பிஞ்சி” என்பது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும்போது உடலில் சில அறிகுறிகள் நமக்குத் தோன்றும்.
அதிகப்படியான சோர்வு,
உடல் அசௌகரியம்,
சருமம் வெளிறிப்போய் மஞ்சள் நிறமாக மாறதல்,
கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,
ஞாபகத்திறன் பிரச்சினை,
நடக்கும்போது, பேசும்போது தடுமாற்றங்கள் ஏற்படுவது
போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
ஏப்ரல் 08
நீதிக்கதை
குறை இல்லாதவர் இல்லை
ஒருநாள் மயில் ஒன்று கடவுளை வேண்டித் தவம் செய்தது. மயிலின் கடுமையான தவம் கண்டு மெச்சிய கடவுள். அதற்கு முன் தோன்றி காட்சி தந்தார்.
"அழகிய மயிலே, உன் தவத்தைக் கண்ட உள்ளம் குளிர்ந்தோம். உன் தவத்தின் நோக்கம் என்ன சொல்," எனக் கேட்டார் கடவுள்.
"கடவுளே தங்களை வணங்குகிறேன். எனக்கு நீண்ட நாள் ஒரு கவலை மனதுக்குள் இருந்து வாட்டுகிறது."
"சொல் கேட்கிறேன்" ஆதரவாகப் பேசினார் கடவுள். "என் குரலே எனக்குப் பிடிக்கவில்லை. கருப்பாய் பிறந்துள்ள குயிலுக்கு மட்டும் குரல் இனிமையாக இருக்கிறதே" என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.
"அழகு மயிலே உனக்கென்ன குறைச்சல். நீ தான் பறவைகளில் அழகானவன். உன் கழுத்து அழகும், தோகையின் அழகும் வேறு எந்த பறவைகளுக்காவது படைக்கப்பட்டுள்ளதா? நீ தோகை விரித்து ஆடும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா!" என கடவுள் சொன்னாலும், மயில் சமாதானம் அடையவில்லை.
"நீங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான். இருப்பினும் என் குரல் இன்னும் அழகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பறவைகளில் எல்லாவற்றிலும் நானே முதன்மையாய் இருந்திருப்பேன் அல்லவா" என்றது.
"எல்லா குணங்களும் ஒருவருக்கே அமைந்து விடாது. குறை நிறை இருக்கத்தான் செய்யும். நிறையை கண்டு மனம் மகிழ வேண்டியதுதானே. கழுகு வலிமையானது. குயில் பாடும் திறன் பெற்றது. கிளி பேசும் ஆற்றல் கொண்டது. உனக்குத் தான் அதிகம் தகுதிகள் உள்ளன. எனவே அதை எண்ணிப் பெருமைப்படு" என்று மறைந்தார் கடவுள்.
நீதி : குறைகளையே காலம் முழுவதும் நினைத்துக் கொண்டு இருக்காமல், தன் நிறைகளை அறிந்து, அதை மேலும் நன்கு வளர்த்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே இனிய வாழ்க்கை ஆகும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment