Wednesday, April 3, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.04.2024

   

மார்டின் லூதர் கிங் 

 




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

விளக்கம்:
நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும். 

பழமொழி :

Soare the rod and spoil the child

அடியாத மாடு படியாது.

இரண்டொழுக்க பண்புகள் :

 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.

பொன்மொழி :

ஒருவர் தனது அறிவின் வரம்புகளை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு." ___ சீனப் பழமொழி

பொது அறிவு : 

1. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமைந்த நூல் எது?

விடை: அபிதான கோசம் 

2. நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?

விடை: ஜாம்ஷெட்பூர்(jamshedpur)

English words & meanings :

 
Artificial - which is not natural, செயற்கையான, 

adhesives - objects used for sticking, ஓட்டும் பொருள்

ஆரோக்ய வாழ்வு : 

பருப்புகீரை :
மலச்சிக்கலைப் போக்குகிறது, குடற்புழுக்களை அகற்றுகிறது. இரைப்பையில் மிகுதியாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும்  நெஞ்செரிச்சலை போக்குகிறது.

ஏப்ரல் 04

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களின் பிறந்தநாள்

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranarஏப்ரல் 41855 - ஏப்ரல் 261897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது.[4] சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.  மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.


மார்டின் லூதர் கிங் அவர்களின் நினைவுநாள்



மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.ஜனவரி 151929 - ஏப்ரல் 41968)[1] ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.[2] பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நீதிக்கதை

 விதியையும் மதி கொண்டு வெல்லலாம்


பொதுவாகவே வௌவால்கள் இரவில் தான் இரை தேடும். காரணம் அவைகளுக்கு இரவில் தான் நன்றாகக் கண் தெரியும். அதே சமயத்தில் பகலில் அவைகளால் சரியாகப் பார்க்கக் கூட முடியாது. அதனால், பெரும் பாலும் வௌவால்கள் பகலில் நன்றாகத் தூங்கி விடும்.


அப்படித் தான் ஒரு மரத்தில் இருந்த வௌவால் உட்கார்ந்த படி தூங்கிக் கொண்டு இருந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வௌவால் கால்பிடி நழுவி மரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டது. அந்த மரத்தடியில் வாழ்ந்து வந்த கீரி ஒன்று ஓடிச் சென்று அந்த வௌவாலை 'லபக்' என பிடித்துக் கொண்டது.


அந்தக் கீரி வௌவாலை திங்கப் போகும் நேரம். வௌவால் கண் விளித்தது, "கீரியாரே! நான் உங்களை என்ன செய்தேன்? ஏன் என்னைத் தின்னப் பார்க்கின்றீர்!" என்று கேட்டது.


அதற்கு அந்தக் கீரி, "உன்னைப் போன்ற பறவைகள் என்றால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. இன்னும் சொல்லப் போனால்

பறவைகள் தான் எனது முதல் விரோதிகள். அதனால், உன்னைக் கொன்று ஆசை தீர உன்னப் போகிறேன்" என்றது.


"கீரியாரே, தாங்கள் நினைப்பது மிகவும் தவறு. நான் ஒரு பறவையே அல்ல. பறவைகள் என்றால் முட்டை போடும். அடை காக்கும். ஆனால், நானோ குட்டிப் போட்டு பால் கொடுத்து வருகிறேன். அதனால், நான் பறவையும் அல்ல, அதன்படிப் பார்த்தால் உங்கள் எதிரியும் அல்ல. அதனால் தாங்கள் என்னைத் தாரளமாக விட்டு விடலாம்" என்றது.

உடனே அந்தக் கீரி யோசித்தது, "வௌவால் சொல்வது சரி தான். இது ஒரு விலங்கு, நாம் நினைத்தது தான் தவறு" என்ற முடிவுக்கு வந்தது. உடனே வெளவ்வாலை விட்டு விட்டது. அந்த வௌவ்வாலும் நிம்மதியாகச் சென்று பழைய படி மரத்தில் அமர்ந்தது.

பிறகு, சில நாட்கள் மீண்டும் நகர்ந்தது. அன்றும் வௌவால் மரத்தின் மேல் தூங்கிக் கொண்டு இருக்கையில் பிடி தவறிக் கீழே விழுந்து விட்டது. இந்த முறையும் வெளவாலை அந்தக் கீரி பிடித்துக் கொண்டு விட்டது. அந்தக் கீரி வௌவாலை தின்னப் போகும்

நேரத்தில்

 வெளவால்," கீரியாரே! நான் தான் உங்கள் எதிரி இல்லை என்று அன்றே சொன்னனே! பிறகு இன்றும் ஏன் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டீர்கள்" என்று கேட்டது.

அதற்கு அந்தக் கீரி சொன்னது, "வௌவாலே! நான் பறவைகளுடன் ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டேன். இப்போது விலங்குகள் தான் எனக்கு விரோதிகள். அதனால் நான் உன்னைத் தின்னப் போகிறேன்" என்றது.


உடனே அந்த வௌவால் மீண்டும் கீரியிடம், "கீரியாரே! கீரீயாரே! ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள். நான் இது வரையில் என்னை விலங்கு என்று தவறாக நினைத்துக் கொண்டு இருந்தேன். நேற்று தான் எனக்கே தெரிந்தது நான் விலங்கு அல்ல ஒரு பறவை என்று. வேண்டும் என்றால் எனது இறக்கைகளை நீங்களே பாருங்கள். நானும் கூடத் தரையில் இருப்பதைக் காட்டிலும், பறவைகளைப் போல வானத்தில் தான் அதிகம் பறக்கிறேன். அதனால், பறவைகளிடம் தாங்கள் செய்து கொண்ட நட்பு உடன்படிக்கையின் படி நான் உங்கள் நண்பன் அதன் படிப் பார்த்தால் தாங்கள் என்னை தாரளமாக விட்டு விடலாம்" என்றது.

வௌவாலின் வார்த்தைகளைக் கேட்டு அந்தக் கீரி மீண்டும் யோசித்தது. அதற்கு வௌவால் சொல்வது சரி தான் எனப்பட்டது. அதனால், கீரி வௌவாலைப் பார்த்து, "நீ சொல்வது உண்மை தான். பிழைத்துப் போ" என்று கூறி, வௌவாலை விட்டு விட்டது.


நீதி : சிலர் எதற்கு எடுத்தாலும் விதி, விதி என்று நொந்து கொள்வார்கள். ஆனால், அந்த விதியைக் கூட மதியால் வெற்றி கொண்டு விடலாம். அப்படிப் பட்டவனே திறமைசாலி. அவனால் எப்படிப் பட்ட ஆபத்துக்களில் இருந்தும் விடு பட்டு விட முடியும். இதற்கு இந்தக் கதையில் வரும் வௌவால் தான் உதாரணம்.

இன்றைய செய்திகள்

04.04.2024

*வாஷிங்டன் 
போர்ப்சின் நாளிதழ்: கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பெண் ரேணுகா ஜக்தியானி.

*தைவானில் நேற்று 7.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நான்கு பேர் பலி 99 பேர் காயம்.

*கனடாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்கியது.

*கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தியா, வாகனங்களை பழுது பார்க்கும் திறனை பார்த்து வேலைக்கு அழைத்தது சென்னை ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை.

*உலகக்கோப்பை பழுதூக்குதலில் இந்தியாவின் பிந்தியா ராணி வெண்கலம் வென்றார்.

Today's Headlines

*Washington
 Forbes Daily: Indian woman Renuka Jagthiani has made it to the list of billionaires.

 A 7.4-magnitude earthquake hit Taiwan yesterday.  Four killed and 99 injured.

 *School breakfast program started in Canada too.

 *Diya, a college student from Kerala state, was invited to work by the Royal Enfield factory in Chennai due to her ability to repair vehicles.

 * India's Pindia Rani wins bronze in World Cup weightlifting.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment