Thursday, March 24, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.03.22

திருக்குறள் :

பால் : பொருட்பால் 

இயல் - நட்பியல் 

அதிகாரம் - இகல் 

குறள் - 852 

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. 

பொருள்
வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.

பழமொழி :

It is difficult to change one's nature.

நாய் வாலை நிமிர்த்த முடியாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே ஊக்கமுடன் எனது வேலைகளைச் செய்வேன் 

2. முயன்றால் பட்டாம் பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்

பொன்மொழி :

குழந்தை போல மனமிருந்தால் ௭தற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை! உலகம் ௭ன்பது ௭ன்னவென்று தெரியாத வயது தான்! உண்மையில் மகிழ்ச்சி நிறைந்தாக இருக்கிறது.____அன்னை தெரேசா

பொது அறிவு :

1. இசைக்கருவிகளின் இராணி என்றழைக்கப்படும் இசைக்கருவி எது? 

வயலின். 

2. இசைக்கருவி வீணையில் எத்தனை தந்திக் கம்பிகள் உள்ளன? 

ஏழு கம்பிகள்.

English words & meanings :

Soar - rise or fly high in the air, காற்றில் மேலே எழும்பி பறப்பது. 

Commander - a person in authority especially in military, படைத் தலைவர், முடிவு எடுக்கும் முக்கிய நபர்

ஆரோக்ய வாழ்வு :

தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப்படுத்துகிறது. சாதாரணமாக சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது. தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களையும் பெறுவதற்கு உதவுகிறது. குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாலைக்கண் வியாதியையும் தடுக்கும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு. வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவுகிறது. ஆண்டியோ போரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையிரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் புற்று நோய் ஆகியவை வராமல் காக்கிறது.

கணினி யுகம் :

Ctrl + Esc - Bring up the start menu. 

Alt + Esc - Switch between applications on the taskbar

மார்ச் 25


வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்





வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.

நீதிக்கதை


நூலும் பட்டமும்

அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், கண்ணா! நூலினுடைய வேலை என்ன என்று சொல்லு பார்க்கலாம்? பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு. அப்பா சொன்னார், இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு. பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது. ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே! 

அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே என்றார்.

இன்றைய செய்திகள்

25.03.22

◆தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்.

◆ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித் தொகை: நிதியமைச்சர் தகவல்.

◆ பதிவுத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.13,218கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ள தாகவும், பதிவுத் துறை அலுவலகங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வருவதாகவும் பதிவுத்துறை  அமைச்சர் தகவல்.

◆மாணவர்களுக்கான தேசிய மதிய உணவுத் திட்டத்தில் காலை உணவு சேர்க்கப்படவில்லை என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

◆பிஎச்டி படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயமாகிறது; ஆய்வுகளில் தரத்தை உருவாக்க யுஜிசி முயற்சி.

◆உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

◆ரஷ்ய தாக்குதல்: ஒரு மாதம் கடந்தது; உக்ரைனிலிருந்து ஒரு கோடி மக்கள் வெளியேறினர்.

◆சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி வி சிந்து வெற்றி.

◆பெண்கள் உலகக்கோப்பை: மழையால் கைவிடப்பட்ட போட்டியால் அரையிறுதிக்கு தகுதிபெற்ற தென் ஆப்பிரிக்கா.


Today's Headlines

◆ Chance of rain in Tamil Nadu for next 5 days: Chennai Meteorological Center.

 ◆ Rs.1000 / - for Government School students joining ITIs and Polytechnics: Information from the Minister of Finance.

 ◆ According to the Minister of Registration, the revenue earned by the Registrar's Office is unprecedented at Rs.

 ◆ The Union Minister of Education has said that breakfast is not included in the National Lunch Program for students.

 ◆ An entrance examination is compulsory to join Ph.D. course;  UGC attempts to improve the quality of studies.

 ◆ North Korea tests new missile amid world protests  This has been confirmed by the South Korean government.

  Russian offensive: One month has passed;  One crore people fled Ukraine.

 Swiss Open Badminton: PV Sindhu wins first round.

 ◆ Women's World Cup: South Africa qualifies for semifinals due to rain abandoned match.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment