திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: நட்பியல்
அதிகாரம்: பகைமாட்சி
குறள் : 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
பொருள்:
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்
பழமொழி :
Against God's wrath, no castle is proof.
அலை கடலுக்கு அணை போடலாமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.
2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.
பொன்மொழி :
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. ___அப்துல் கலாம்
பொது அறிவு :
1. வைரத்தில் மொத்தம் எத்தனை முனைகள் உள்ளன?
ஆறு.
2. "சிவப்பு கிரகம்" என்றழைக்கப்படும் கோள் எது?
செவ்வாய்.
English words & meanings :
Bail - bucket handle வாளி கைப்பிடி,
bale - a bundle of hay, வைக்கோல் கட்டு
ஆரோக்ய வாழ்வு :
அகத்திக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால், பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சி ஆகும். சிறுநீர், மலம் தாராளமாக வெளியேறும். அகத்திக் கீரையில் 8 . 4 விழுக்காடு புரதமும் 1. 4 விழுக்காடு கொழுப்பும், 3. 1 விழுக்காடு தாது உப்புக்களும் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக் கீரையில் மாவுச்சத்து,, வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.
கணினி யுகம் :
Ctrl + A - Select all contents of the page.
Ctrl + B - Bold highlighted selection
ஏப்ரல் 01
வாங்கரி மாத்தாய்
வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார். ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.
நீதிக்கதை
காக்கா ஏன் கறுப்பாச்சு?
ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சாம். அப்ப எல்லா காக்காவும் ரொம்ப தூரமா சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.
சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்களாம். குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வராம பெரியவங்களாகி வெளிய விளையாட வந்தாங்களாம். அவங்க பேரு அற்புதா.
அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். இரண்டுபேரும் எப்பயும் பேசிட்டே இருபாங்களாம், ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.
சூரியன் கிட்ட வரைக்கும் பறக்கிற காக்காவை கூப்பிட்டு பையில சந்தனம், வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசி கிட்ட கொடுக்க சொல்லுச்சாம்.
காக்கா அந்த பைய தூக்கிக்கிட்டு இளவரசி இருந்த அரண்மனையை நோக்கி பறந்து போகும் வழியில் திருமண ஊர்வலம் போயிட்டு இருந்தது. அதில் நிறைய பழங்கள், உணவுப்பொருட்கள் எடுத்துக்கிட்டு போனாங்க. காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசைப்பட்டு, பையை ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம்.
மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் பையைப் பார்த்து மரத்துல ஏறி பைக்குள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பார்த்து சொக்கி போயிட்டானாம். உடனே எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.
காக்கா நல்லா சாப்பிட்டு வந்து, பையை எடுத்துக்கிட்டு இளவரசி கிட்ட சூரியன் கொடுத்த பையை கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்புனு சொல்லிட்டு பையை தூக்கிப்போட்டுச்சாம்.
மறுநாள் காலை, சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியன் அந்த பை கீழ கிடந்ததைப் பார்த்து ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம். பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனுக்கும் கோபம் வந்து பூமி மேல தூரமா போயிடுச்சாம்.
நீதி :
கொடுக்கும் வேலையை சரியாக செய்தல் வேண்டும்.
இன்றைய செய்திகள்
01.04.22
* கொரோனா உயிரிழப்பிற்கான நிவாரணம் பெற உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் - 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வரு வது குறிப்பிடத்தக்கது.
* நெல்லை மாவட்டத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை திருநங்கையர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். திருநங்கையர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொடர் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் படித்த திருநங்கையர்களுக்கான அரசு பணிகளுக்கான பயிற்சிகள் வேலைவாய்ப்பு துறை மூலம் அளிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
* கொரோனா பாதிப்பால் யுபிஎஸ்சி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 வாரங்களுக்குள் பரிசீலிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
* இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
* மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன.
Today's Headlines
* The Supreme Court has issued new guidelines for seeking relief for corona deaths. Govt - 19 It is noteworthy that petitions have been received through the website www.tn.gov.in to provide money on compassionate grounds to the heirs of the victims of the epidemic and are being considered by the Death Confirmation Committee set up in the districts.
* Collector Vishnu has said that a transgender grievance meeting will be held once in 3 months in the Nellai district. The District Collector said that a series of training will be given to improve the livelihood of transgender people and training for educated transgender people for government jobs will be given by the Department of Employment.
* A case has been filed in the Supreme Court seeking to give a second chance to students who did not write the UPSC exam due to corona. The Supreme Court judges who heard the case have ordered the Union Government government to consider it within 2 weeks.
* The NEET entrance test for undergraduate medical courses will be held on July 17, according to the National Examinations Agency.
* Women's World Cup Cricket: England - Australia qualify for the final.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment