Thursday, March 31, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.04.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: பகைமாட்சி

குறள் : 864

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

பொருள்:
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்

பழமொழி :

Against God's wrath, no castle is proof.


அலை கடலுக்கு அணை போடலாமா?


இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன். 

2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.

பொன்மொழி :

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. ___அப்துல் கலாம்

பொது அறிவு :

1. வைரத்தில் மொத்தம் எத்தனை முனைகள் உள்ளன? 

ஆறு. 

2. "சிவப்பு கிரகம்" என்றழைக்கப்படும் கோள் எது? 

செவ்வாய்.

English words & meanings :

Bail - bucket handle வாளி கைப்பிடி, 

bale - a bundle of hay, வைக்கோல் கட்டு

ஆரோக்ய வாழ்வு :

அகத்திக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால், பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சி ஆகும். சிறுநீர், மலம் தாராளமாக வெளியேறும். அகத்திக் கீரையில் 8 . 4 விழுக்காடு புரதமும் 1. 4 விழுக்காடு கொழுப்பும், 3. 1 விழுக்காடு தாது உப்புக்களும் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக் கீரையில் மாவுச்சத்து,, வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.

கணினி யுகம் :

Ctrl + A - Select all contents of the page. 

Ctrl + B - Bold highlighted selection

ஏப்ரல் 01


வாங்கரி மாத்தாய்




வாங்கரி மாத்தாய் (Wangari Maathaiஏப்ரல் 11940 - செப்டம்பர் 252011கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.   ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.

நீதிக்கதை

காக்கா ஏன் கறுப்பாச்சு?

ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சாம். அப்ப எல்லா காக்காவும் ரொம்ப தூரமா சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம். 

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்களாம். குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வராம பெரியவங்களாகி வெளிய விளையாட வந்தாங்களாம். அவங்க பேரு அற்புதா. 

அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். இரண்டுபேரும் எப்பயும் பேசிட்டே இருபாங்களாம், ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம். 

சூரியன் கிட்ட வரைக்கும் பறக்கிற காக்காவை கூப்பிட்டு பையில சந்தனம், வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசி கிட்ட கொடுக்க சொல்லுச்சாம். 

காக்கா அந்த பைய தூக்கிக்கிட்டு இளவரசி இருந்த அரண்மனையை நோக்கி பறந்து போகும் வழியில் திருமண ஊர்வலம் போயிட்டு இருந்தது. அதில் நிறைய பழங்கள், உணவுப்பொருட்கள் எடுத்துக்கிட்டு போனாங்க. காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசைப்பட்டு, பையை ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். 

மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் பையைப் பார்த்து மரத்துல ஏறி பைக்குள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பார்த்து சொக்கி போயிட்டானாம். உடனே எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான். 

காக்கா நல்லா சாப்பிட்டு வந்து, பையை எடுத்துக்கிட்டு இளவரசி கிட்ட சூரியன் கொடுத்த பையை கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்புனு சொல்லிட்டு பையை தூக்கிப்போட்டுச்சாம். 

மறுநாள் காலை, சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியன் அந்த பை கீழ கிடந்ததைப் பார்த்து ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம். பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனுக்கும் கோபம் வந்து பூமி மேல தூரமா போயிடுச்சாம். 

நீதி :
கொடுக்கும் வேலையை சரியாக செய்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

01.04.22

 * கொரோனா உயிரிழப்பிற்கான நிவாரணம் பெற உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் - 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு  மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வரு வது குறிப்பிடத்தக்கது. 


* நெல்லை மாவட்டத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை திருநங்கையர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். திருநங்கையர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொடர் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் படித்த திருநங்கையர்களுக்கான அரசு பணிகளுக்கான பயிற்சிகள் வேலைவாய்ப்பு துறை மூலம் அளிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

* கொரோனா பாதிப்பால் யுபிஎஸ்சி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 வாரங்களுக்குள் பரிசீலிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

* இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

* மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன.


Today's Headlines

* The Supreme Court has issued new guidelines for seeking relief for corona deaths.  Govt - 19 It is noteworthy that petitions have been received through the website www.tn.gov.in to provide money on compassionate grounds to the heirs of the victims of the epidemic and are being considered by the Death Confirmation Committee set up in the districts.

 * Collector Vishnu has said that a transgender grievance meeting will be held once in 3 months in the Nellai district.  The District Collector said that a series of training will be given to improve the livelihood of transgender people and training for educated transgender people for government jobs will be given by the Department of Employment.

 * A case has been filed in the Supreme Court seeking to give a second chance to students who did not write the UPSC exam due to corona.  The Supreme Court judges who heard the case have ordered the Union Government government to consider it within 2 weeks.

 * The NEET entrance test for undergraduate medical courses will be held on July 17, according to the National Examinations Agency.

 * Women's World Cup Cricket: England - Australia qualify for the final.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, March 30, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.03.22

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்:பகைமாட்சி

குறள் : 863

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

பொருள்:
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்

பழமொழி :

All are not hunters that blow the horn.


துப்பாக்கி எடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள் அல்ல.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன். 

2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.

பொன்மொழி :

துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும். ___கலாம்

பொது அறிவு :

1. உலோகங்களின் இராஜா என்றழைக்கப்படும் உலோகம் எது? 

இரும்பு. 

2. எந்த ஒரு அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது? 

பிளாட்டினம்.

English words & meanings :

Aural - of hearing, செவி வழி கேட்டல், 

oral - of mouth, வாய் வழி

ஆரோக்ய வாழ்வு :

நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும்.

கணினி யுகம் :

Ctrl + <--- - Move one word to the left. 

Ctrl + ----> - Move one word to right

மார்ச் 31


 "ஜெசி" ஓவென்ஸ்  




ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 121913-மார்ச் 311980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ்.

நீதிக்கதை

சிங்கத்தின் வீரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது.

இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது. 

ஏய்.... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும். சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன.

இதைப் பார்த்துக் கத்தியது ஈ அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன். பிறகு ஈ பறந்து சென்றது. இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம். தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.

இன்றைய செய்திகள்

31.03.22

பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் வரை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
🌸 விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்க இருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
🌸 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் கொண்டுசெல்ல வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. 
🌸 பாரத் நெட் திட்டம் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இ-சேவை மையங்கள் இல்லாத இடங்களில் விரைவில் இ-சேவை மையம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 🌸இன்று வெற்றியை தொடர கொல்கத்தா அணியும் முதல் வெற்றியை பெற பெங்களுரு அணியும் களமிறங்குகின்றன. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

🌸 தற்போது ஜோர்டன் செல்லவுள்ள இந்திய அணி, எகிப்து (ஏப். 5), ஜோர்டன் (ஏப். 8) அணிகளுக்கு எதிராக நட்பு கால்பந்தில் பங்கேற்க உள்ளது. இதற்காக 30 பேர் கொண்ட இந்திய வீராங்கனைகள் அடங்கிய அணி, பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பை தலைமையில் கோவாவில் நேற்று முதல் பயிற்சியை துவங்கியது.


Today's Headlines

🌸 Students have to be under the supervision of the school team till they reach the classroom from the bus - order from the School Education Department.

🌸 Farmers will be supplied with spray watering tools for crops says Nilgiris Collector. 
🌸 For 10th and 12th students, the exam question papers should reach the centers before the 6th order by the Department of Exams. 
🌸Through Bharath Net Scheme 12,525 villages will have net connections within a year says Minister Mano Thangaraj. He also said in Tamil Nade E Sevai will be started soon in places where there are no E Sevai centers. 
🌸 To continue their win Calcutta team and to get their first victory Bangalore team both are playing. Bangalore team selected bowling, Calcutta team bating. 
🌸The Indian hockey team is going to play against Egypt on April 5th and Jordan on 8th in a friendly football match. For this, a team of 30 women players is selected and coach Thomas Tennerby gives them coaching at Goa.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 29, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.03.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: இகல்

குறள் : 860

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு

பொருள்:
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்

பழமொழி :

The worth of the thing is best known by the want

உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன். 

2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.

பொன்மொழி :

கங்கையில் குப்பைகளையும் அசுத்தங்களையும் எறிந்தாலும் அதன் பவித்ரம் குறைவதில்லை. அதுபோல் குருவின் மகிமை மாறுவதில்லை.____ ராமகிருஷ்ண பரமஹம்சர்

பொது அறிவு :

1. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது? 

ஜப்பான். 

2. ஆயிரம் ஏரிகள் உடைய நாடு எது? 

பின்லாந்து.

English words & meanings :

Arc - portion of a circle, வட்டத்தின் ஆரம், 

ark - vessel or boat, பேழை படகு

ஆரோக்ய வாழ்வு :

தினை அரிசி புரதச் சத்து அதிகம்நிறைந்த உணவாகும். தினை தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமைத் தன்மையை காக்க உதவுகிறது. கண்களுக்கு நன்மை அளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் உண்டு. இதயத்துக்கு பலம் சேர்க்கும் b1 வைட்டமின் தினையில் உண்டு. நினைவுத்திறன் அதிகரிக்கும். முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளைத் தடுக்கும்.தினையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சரி செய்ய உதவுகிறது.

கணினி யுகம் :

Ctrl + [ - Decrease selected font -1. 

 Ctrl + ] - Increase selected font +1

மார்ச் 30





வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx] (About this soundகேட்க); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..

இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.

நீதிக்கதை

கல்வியின் பெருமை

பண்ணையார் ஒருவர் தன் ஆறு வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். இவன் என் ஒரே மகன். இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத்தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு ஆசிரியர், நூறு பணம் தாருங்கள். நன்றாக கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான் என்றார் ஆசிரியர்.

ஆ! இருநூறு பணமா? அந்தப் பணத்திற்கு நல்ல ஒரு எருமை மாடு வாங்கலாமே என்றார் பண்ணையார். வாங்குங்கள். உங்கள் பண்ணையில் ஐம்பத்து இரண்டு எருமை மாடுகள் உள்ளன. இப்படி மற்றவரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்றார். 

ஆசிரியரான உங்களுக்குக் கணக்கு தெரியாதா? என்னிடம் ஐம்பது மாடுகள் உள்ளன. ஒரு மாடு சேர்ந்தால், ஐம்பத்து ஒன்று தானே ஆகும். எப்படி ஐம்பத்து இரண்டு வரும்? மாடுகள் கணக்கில் உங்கள் மகனைச் சேர்க்கவில்லையே அவனையும் சேர்த்தால் ஐம்பத்து இரண்டு ஆகும். 

என் மகனை மாடுகள் கணக்கில் சேர்க்க அவன் என்ன மாடா? இப்படி பேச உங்களுக்கு என்ன துணிச்சல்? என்று கோபத்துடன் கேட்டார் பண்ணையார். கல்வி கற்றவன் மனிதன். படிக்காதவன் மாடு, மரம் போன்றவன். இது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார் ஆசிரியர்.

என்னை மன்னியுங்கள். கல்வியின் பெருமையை உங்களால் தெரிந்து கொண்டேன். நீங்கள் கேட்ட பணம் தருகிறேன். இவனுக்கு நன்றாக கல்வி கற்றுத் தாருங்கள். சிறந்த மனிதனாக இவனை மாற்றுங்கள் என்றார் பண்ணையார். அப்படியே செய்கிறேன் என்றார் ஆசிரியர்.

நீதி :
மனிதனுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.

இன்றைய செய்திகள்

30.03.22

🐣நீர் மேலாண்மையில் தேசிய அளவில் 3-வது இடம் பிடித்த தமிழகத்திறகு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நீர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழக நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா பெற்றுக்கொண்டார்.

🐣சென்னை: தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

🐣2 நாள் பாரத் பந்த் | போக்குவரத்து, வங்கி சேவை பாதிப்பு: மக்கள் கடும் அவதி.

🐣அஸ்ஸாம்- மேகாலயா இடையே 50 ஆண்டுகளாக நிலவி வரும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

🐣விமானக் கட்டணம் திடீர் உயர்வு: கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை.

🐣உக்ரைனை முழுமையாக கைப்பற்ற வாய்ப்பு இல்லாத நிலையில் ரஷ்ய அதிபர் புதின் புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🐣கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ரெயில்வே நீச்சல் போட்டியில் தென்னக ரெயில்வே வீரர்கள் 15 வருடங்களுக்கு பிறகு பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

🐣'பார்முலா 1' கார் பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

Today's Headlines

 🐣National Water Award was given to Tamil Nadu which is ranked 3rd nationally in water management on behalf of the Central Ministry of Water Resources.  The award was received by Sandeep Saxena, Additional Chief Secretary, Government of Tamil Nadu Water Resources.

  🐣Chennai: DGP Silenthrababu has directed the top police officials to take immediate action to stop the sale of drugs including cannabis near schools and colleges in Tamil Nadu.

  🐣2 Day Bharat Bandh |  Impact on transport and banking services: People are suffering.

  🐣Assessful signing of historic agreement between Assam and Meghalaya to resolve 50 years of border dispute.

  🐣Sudden increase in air fares: Federal action to monitor.

 🐣 It has been reported that Russian President Vladimir Putin has devised a new strategy in the absence of a chance to fully occupy Ukraine.  It has been reported that Russia is planning to divide Ukraine into two parts, like North Korea and South Korea.

 🐣 The Southern Railway won the medal after 15 years at the All India Railway Swimming Championships in Kolkata.

 🐣 In the Formula 1 car race, the Dutchman Verstappen crossed the finish line and took first place.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்