திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம் 45: பெரியாரைத் துணைக் கோடல்
குறள் எண் : 443
குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பொருள்:
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.
பழமொழி :
Drawn wells have the sweetest water.
இறைக்கிற கிணறு ஊறும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எப்போதும் நாம் தான் வல்லவன் என்ற
அகந்தையை ஒதுக்கி ..நல்லவனாய் வாழு நாளும் சிறக்கும் நீயும் சிறப்பாய்.
2. எண்ணம் உறுதியாக உன்னதமாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்.
பொன்மொழி :
எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்- அறிஞர் அண்ணா.
பொது அறிவு :
1. சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1862.
2."இந்திய திட்ட நேரம் "(IST) எந்த மாநிலத்தின் நேரத்தை குறிக்கின்றது?
அலகாபாத்.
English words & meanings :
Hold your horses - slow down, எதாவது வேகமாக செய்யும் போது வேகம் குறைத்தல்,
lend an ear - listening others talk patiently, பொறுமையாக கவனித்தல்
ஆரோக்ய வாழ்வு :
முளை கட்டுதல் - ஊட்டச்சத்துக்களின் அளவுகளை அதிகமாக்குதல்
முளை கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.
- உயிர்ச்சத்து முளைக்கட்டுவதனால் கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது.
- ரைபோஃபிளேவின், நயாசின், கோலின் மற்றும் பையோட்டின் அளவுகள் அதிகரிக்கப்படுகிறது. மாவுச்சத்தானது சர்க்கரைப் பொருட்களாக மாற்றப்படுகிறது.
- பயறுகளில் நச்சுத்தன்மை உண்டாக்கும் பொருட்களையும், நல்ல ஊட்டத்திற்கு எதிராக செயல்படும் காரணிகளையும் குறைக்கிறது.
- திட்ட உணவில், உணவு வகைகளை அதிகரிக்கலாம். ஏனெனில், முளைக்க வைக்கப்பட்ட பயறுகளை, சாலட் மற்றும் பச்சடி போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம்.
- இயங்காத நிலையில் உள்ள நொதிகளை செயல் புரிய வைத்து, சீரணித்தலும் நன்கு நடைபெற்று, உடலிற்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.
- கூட்டு நிலையில் இருக்கும் கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற தாது வெளியிடப்படுகின்றன. முளை கட்டப்பட்ட பயறுகளை சமைக்காமல் உண்ணலாம். ஏனெனில், முளை கட்டுதலினால் பயற்றின் சுவை மற்றும் தன்மை கூட்டப்படுகிறது.
கணினி யுகம் :
Shift + B - Add box,
Shift + C - Add circle
அக்டோபர் 28
பில் கேட்ஸ் அவர்களின் பிறந்தநாள்
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
நீதிக்கதை
யானையின் திறமை
ஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் அந்த காட்டில் நண்பர்களை தேடிச் சென்றது. யானை முதலில் மரத்தில் ஒரு குரங்கை பார்த்தது. அந்த குரங்கிடம் சென்று நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த குரங்கு நீ பெரிய உடம்பினைக் கொண்டுள்ளாய். அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது. ஆகவே உன்னை நண்பனாக ஏற்று கொள்ள முடியாது என்று குரங்கு சொன்னது.
அடுத்ததாக யானை, முயல் ஒன்றை பார்த்தது. அந்த முயலிடம் சென்று என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த முயல் நீ பெரிய உடம்பினை கொண்டுள்ளாய் அதனால் உன்னால் என்னை போல் வேகமாக ஓடமுடியாது என்று சொன்னது. அடுத்ததாக யானை, தவளை ஒன்றை பார்த்தது. அந்த தவளையிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்று கொள்வாயா என்று கேட்டது. அதற்கு தவளை என்னை போல் உன்னால் தாவ முடியாது. ஆதலால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.
கடைசியாக யானை, நரி ஒன்றை பார்த்தது. அதனிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. நரியும் நீ உடம்பளவில் பெரியவனாக உள்ளாய். ஆதலால் உன்னை நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது. யானை கவலையில் தனது இடத்திற்குச் சென்றது.
அடுத்த நாள் காலையில் விலங்குகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடி கொண்டிருந்த கரடியிடம் ஏன் ஓடுகிறீர்கள்? என்று யானை கேட்டது. அதற்க்கு கரடி இங்கு உள்ள விலங்குகளை ஒன்று ஒன்றாக புலி கொன்று சாப்பிட்டு வருகிறது. அதனால்தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது.
யானை இதற்கு ஒரு வழி கொண்டு வரணும் என்று நினைத்து புலியிடம் சென்றது. புலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டது. அதற்கு அந்த புலி, இது உனக்கு தேவையில்லாத விஷயம் என்று சொன்னது. யானை அதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் அதனை தனது காலால் உதைத்து தள்ளியது. காயத்துடன் அந்த புலி அந்த காட்டை விட்டு தலை தெரிக்க ஓடியது.
இதனை கண்ட அங்கு உள்ள விலங்குகள் நீ உடம்பில் பெரியவன் அல்ல நீ இனி எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்று கொண்டன.
இன்றைய செய்திகள்
28.10.21
★செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: சத்துணவுத் தயாரிப்பையும் சரிபார்த்தார்.
★பி.ஆர்க். படிப்புக்கான கலந்தாய்வில் ஜெஇஇ எழுதியவர்களையும் அனுமதிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
★மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய ரூ.200 கோடியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடக்கம்.
★வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கடலோர மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.
★இருசக்கர வாகன பயணத்தில், 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம், குழந்தைகளை அழைத்துசெல்லும்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
★கனடாவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
★கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி இல்லை, கூடுதல் தரவுகளை கோரும் உலக சுகாதர அமைப்பு.
★கேரபாவோ கோப்பை கால்பந்து தொடரில் அர்செணல், செல்ஸியா மற்றும் சண்டெர்லேண்ட் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
★டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை 124 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து.
Today's Headlines
★ Chief Minister Stalin gave a surprise visit and inspection at a government school near Chengalpattu: He also checked the noon meal's preparation.
★ For the B.Arch. counseling JEE participants also should be allowed: High Court ordered Anna University.
★ Launch of Rs. 200 crores ‘Home-based Education’ project to balance the students' learning gap.
★ New Depression in the Bay of Bengal: Chennai Meteorological Department warns of heavy rains in coastal districts.
★Various restrictions have been announced including Helmets are mandatory for children between the ages of 9 months and 4 years on a two-wheeler and also there should be a speed limit of 40 km / h only while taking children on the bike.
★ Anita Anand, a native of Tamil Nadu, has been appointed as the new Minister of Defense of Canada.
★ The covaccine is not accepted by the World Health Organization- asking for more details.
★ Arsenal, Chelsea, and Sunderland are advancing to the quarterfinals of the Carabao Cup football series.
★ T20 World Cup: England beat Bangladesh by 124 runs.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment