Friday, October 8, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கேள்வி

குறள் : 419

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

பொருள்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

பழமொழி :

Discretion is better than valor.


விவேகம் வீரத்தினும் சிறப்பு .

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

*உலகின் மாமேதகள் எல்லோரும் மற்றவரின் வாழ்வை வளம் பெறச் செயல்பட வேண்டும் என்ற உள்ளக்கிடக்கினால் தூண்டப்பட்ட வரே ஆவார்*

_ ராபின் சர்மா.

பொது அறிவு :

1.ஆந்தை தனது கழுத்தை எத்தனை டிகிரி அளவுக்கு சுழற்றும் தன்மை கொண்டது?

 359 டிகிரி.

2.உலகம் முழுவதும் பயணம் செய்த முதல் கப்பலின் பெயர் என்ன?

விக்டோரியா கப்பல்.

English words & meanings :

Eat like a bird (Idioms) - to eat very little. 

Easy as pie - very easy

ஆரோக்ய வாழ்வு :

தினசரி இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்...!


தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

 

இதில் முழு அளவு ஊட்டச்சத்து  இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற  பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. இதைத் தவிர  வைட்டமின் , வைட்டமின் சி அதிக  அளவில் உண்டு.

 

அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது


கணினி யுகம் :

F7 - Spell check

F8 - Extend mode


அக்டோபர் 9

சே குவேரா அவர்களின் நினைவுநாள்




சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (சூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதிகியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.

எம். பக்தவத்சலம் அவர்களின்  பிந்தநாள் 




எம். பக்தவத்சலம் (9 அக்டோபர் 1897 –13 பிப்ரவரி 1987) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர்.

உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Dayஅக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது.அக்டோபர் 91874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது

நீதிக்கதை

முனிவர் காட்டிய வழி

முன்னொரு காலத்தில் அந்தபுரத்தை ஆண்டு வந்த அரசனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விக்ரம் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். 

விக்ரம் சிறு வயதிலிருந்தே யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது ஆனதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்பதற்கு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர். 

அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்காமல் குருவையும் மதிக்காமல் இருந்தான். அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனுக்கு புத்தி புகட்டுவதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார். 

ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி செய்தார் குரு. 

சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், அய்யோ! என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடினான். 

இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறிக்கொண்டான். துரத்தி வந்த சிறுத்தை அவனைக் காணாமல் சென்றுவிட்டது. பசி வயிற்றைக் கிள்ள, களைப்பில் தூங்கி போனான். தூங்கி எழுந்ததும் சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று தெரியவில்லை. 

சிறு வயதிலிருந்தே யாரையும் மதிக்காமல் தவறாக நடந்துகொண்டதை நினைத்து மிகவும் வருந்தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந்தினான். 

உடனே குருவை மனதில் நினைத்து குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக்கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. யானையைப் பார்த்த இளவரசன் யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப்பட்டிருக்கிறான். யானை தண்ணீர்ருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் இளவரசன் நடக்க ஆரம்பித்தான். 

வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்தது. அதன்பின், மகிழ்ச்சியடைந்த இளவரசன் தன் குருவிடம் சென்று அவர் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான். 

நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இந்த நாடகம் நடத்த வேண்டியிருந்ததை நினைத்த குரு, அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார். 

நீதி :
வயதில் மூத்தோரை மதித்து நடத்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

09.10.21

◆கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு `கன்னியாகுமரி கிராம்பு’ என புவிசார் குறையீடு வழங்கப்பட்டுள்ளது.

◆2021- 2022ஆம் ஆண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.


◆இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் 6பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.

◆2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

◆தெற்காசிய கால்பந்து போட்டியில், இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.

◆மகளிர் ஹாக்கி புரோ லீக் :இந்தியா - ஸ்பெயின் அணிகள் தேர்வு.

Today's Headlines

 🌸 The clove growing in the hills of Kanyakumari district has been given a geographical reference as `Kanyakumari clove '.

 🌸 The first term CBSE general examination for 2021-2022 is scheduled to start next month.  The timetable for this is coming out soon.

🌸 Forbes Magazine publishes the list of India's top 100 billionaires. Among them six are women.

🌸 The Nobel Peace Prize for 2021 has been announced for journalists Maria Ressa and Dimitry Muradov.

 🌸The match between India and Sri Lanka in the South Asian Football Championship was a draw.

 🌸Women's Hockey Pro League: India - Spain teams selected.
 Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment