திருக்குறள் :
அதிகாரம்: அரசியல்.
குறள் எண்:382.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
பொருள்: துணிவு, இரக்க சிந்தனை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய இவை நான்கும் அரசுக்குரிய இயல்புகள் ஆகும்
பழமொழி :
As is the king, so are subjects.
அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும்.
2. பெரியாரின் மனம் பார்த்து மனம் கோணாமல் நடக்க வேண்டும்.
பொன்மொழி :
அன்புதான் மிகவும் அசாத்தியமான கதவுகளை எல்லாம் அகலத் திறந்து விடுகிறது.....விவேகானந்தர்
பொது அறிவு :
1.தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?
ஆர். என். ரவி
.2.தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15 சரணாலயங்கள்.
English words & meanings :
Bat - a nocturnal flying mammal. வவ்வால்.
Bat - a wooden stick used to hit the ball. பந்தடிக்கும் மட்டை
ஆரோக்ய வாழ்வு :
சருமத்தில் ஏற்படும் அரிப்புக்கு இயற்கையான தீர்வு
துளசி
துளசி இலைகளை நீர் விட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைக்கவும். இதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இதற்கு மாற்றாக துளசி இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டனை நனைத்து ஒற்றி எடுக்கலாம். இவை உலர உலர மீண்டும் மீண்டும் வைத்து சருமத்தில் தேய்ப்பதன் மூலம் சரும அரிப்பு குறையக்கூடும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்ய கூடியது. இது அரிப்புகளையும் குணப்படுத்த செய்கிறது. அரிப்பு போன்று நமைச்சலுக்கும் இவை மிகவும் பயனளிக்க செய்யும். தினமும் வெதுவெதுப்பான நீரில் குளித்த உடன் உடலை துடைத்து உலர விட்டு உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தடவி விட வேண்டும். தினசரி இதை செய்து வந்தால் நாளடைவில் சரும அரிப்பு சரியாக கூடும்
ஓட்ஸ்
சரும அரிப்பு அறிகுறிகளை போக்க குளிக்கும் போது ஓட்ஸ் சேர்க்கலாம். ஓட்ஸில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் இவை சரும அரிப்புக்கு மருந்தாகிறது. ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அரிப்பு உண்டாவதை தடுக்க ஓட்ஸ் சிறந்த தீர்வாக இருக்கும். குளியல் நீரில் ஓட்ஸ் கலக்கவும். பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் தண்ணீரில் அல்லது பாத் டப்பில் உடல் படுபடி வைக்கவும். ஓட்ஸை நமைச்சல் இருக்கும் இடத்தில் மெதுவாக துடைக்கலாம். தினமும் இதை தடவி வந்தால் சரும அரிப்பு குறையக்கூடும்.
கணினி யுகம் :
F3 - Opens the Find All Files dialog box.
F4 - Opens the drop-down list box on the toolbar, if there is one.
செப்டம்பர் 23 :
நவநீதம் பிள்ளை
நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு: செப்டம்பர் 23, 1941) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார். 1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த ஒரு இந்திய குடிவழித் தமிழர்இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்
சிக்மண்ட் பிராய்ட்
சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud, சிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment