Thursday, September 16, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.09.21

 திருக்குறள் :

அதிகாரம் : தீவினையச்சம்

குறள் 204:


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

பொருள்:  

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

பழமொழி :

A little string will tie a little bird

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

 2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை

பொன்மொழி :

அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞன் ஆகி விட மாட்டான் - புத்தர்

பொது அறிவு :

1.தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 

1968.

2.இந்திரா காந்தி தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? 

கோயம்புத்தூர்.


English words & meanings :

Bull in a China shop - a clumsy person who always breaks things

Rolling stone - a person who doesn't stay in a place or job

ஆரோக்ய வாழ்வு :

*தேனின் மருத்துவ குணங்கள் சில*


1)விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.


2)குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.


3)இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.


4)தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.


5)தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.


கணினி யுகம் :

Ctrl + G - Find and replace options. 

Ctrl + J - Justify paragraph alignment


செப்டம்பர் 17:

ஈ. வெ. இராமசாமி அவர்களின் பிந்தநாள் 






பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamyசெப்டம்பர் 171879 - திசம்பர் 241973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.[2] இவருடைய சுயமரியாதை இயக்கமும்பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. சாதிக் கொடுமை, தீண்டாமைமூடநம்பிக்கைவர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இவரின் பிறந்த தினம் இந்த வருடம் முதல் சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படுகிறது

நீதிக்கதை

நரியின் தந்திரம்

ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது. 

சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது. 

சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது. 

நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது. 

நீதி :
நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

17.09.21

◆மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

◆பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இதன்படி சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17ஆம் தேதி அன்று தொடங்குவதாக புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

◆தமிழ்நாட்டில் சமூக நீதி செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர்  அறிவித்துள்ளார்.

◆நாடுமுழுவதும் கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் வரவிருக்கும் இரண்டு, மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

◆ஜுராசிக் காலத்துக்கு முந்தைய  ஏறத்தாழ 160-168 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுறா மீனின் பற்கள் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

◆அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்  விண்வெளி சுற்றுலாவுக்கு 4 பேருடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

◆சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

◆பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனை கவுரவிக்கும் வகையில் சேலம் மேற்கு கோட்ட அஞ்சல்துறை சார்பில் மாரியப்பனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ‘மை ஸ்டாம்ப்’ வெளியிடப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டது.

◆ஆசிய போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து மனிகா பத்ரா நீக்கம்.

Today's Headlines

📃 Chennai High Court has adjourned  the final hearing of cases against 7.5 per cent reservation for government school students in medical studies till October 21

  📃 The date for the Engineering Student Admission Consultation has been abruptly changed.  Accordingly, the new schedule has been announced that the special section consultation will start on September 17.

 📃 The Chief Minister has announced that a committee will be set up to monitor the implementation of social justice in Tamil Nadu.

 📃 The federal government has warned that the next two to three months will be crucial, though it seems like corona spreads across the country is under control.

 📃 The teeth of a shark dating back to 160-168 million years old  of the Jurassic period have been found in Rajasthan.
                                              
📃 US billionaire Elon Musk's SpaceX company's rocket successfully travels with 4 people on a rocket space tour.

 📃 3 people were killed in a powerful earthquake in China.  Many have been injured.

 📃 In honour of Tamil Nadu athlete Mariappan, who won a silver medal in the Paralympic Games, a ‘My Stamp’ with a photograph of Mariappan was released by the Salem West Divisional Post Office and presented to him.

 📃 Manika Bhadra removed from Indian table tennis team for Asian Championship.


Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment