திருக்குறள்
அதிகாரம்:துறவு
திருக்குறள்:350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
விளக்கம்:
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
பழமொழி
Fish and guest stink in three days.
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான்.
இரண்டொழுக்க பண்புகள்
1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.
2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.
பொன்மொழி
வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்வது தத்துவம். வாழ்க்கையை சொல்வது,அதன் ரசனையை சொல்வது இலக்கியம்....
----- புதுமைப்பித்தன்
பொது அறிவு
1.சூரியனின் வெப்பத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன?
பைரோமீட்டர்.
2. ஓசோன் படலம் எதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது?
புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.
English words & meanings
Kymatology – study of wave motion. பாய்ம விசையியல்
Kink- a turn or bend. சிறு வளைவு அல்லது கோணல்.
ஆரோக்ய வாழ்வு
துளசி இலையுடன் அம்மான்பச்சரிசி இலையை சம அளவு எடுத்து விழுதாக அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பருக்கள் மறையும்.
Some important abbreviations for students
AIM-Ambition In Mind
PEN- Power Enriched Nib
நீதிக்கதை
மனித மனத்தின் ஆசை
இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.
அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.
குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.
ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.
இன்றைய செய்திகள்
23.12.19
★உள்ளாட்சித் தேர்தல் வரை ஆய்விற்காக தமிழகம் வர வேண்டாம் என நாடாளுமன்ற எம்.பி.க்கள் நிலைக்குழுக்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடம் கோரப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றம் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
★ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை உயர்த்துவதற்கு தற்போது எண்ணம் கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
★ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பமும்,வறட்சியும் நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் அலைபாய்ந்து வரும் நிலையில் 3 லட்சம் லிட்டர் தண்ணீரை யாரோ கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
★கத்தார் சர்வதேச கோப்பை தொடரில் மகளிருக்கான பளுதூக்குதலில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.
★ மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்குட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள். தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.
Today's Headlines
🌸 Parliamentary MPs have been asked by Standing Committees and Union Ministries not to come to Tamil Nadu till the local elections. The Government of Tamil Nadu has written a letter to the Parliament and Union Ministries.
🌸 GST. The federal government has said it has no intention of raising the tax rate.
🌸 Australia has seen unprecedented heat and drought. Someone has plundered 3 lakh liters of water when people are wandering for water.
🌸 Saikom Meerarabai Sanu of India won gold medal in women's weightlifting in Qatar International Cup Series.
🌸 In the 3rd one day against westindies, India won by 4 by wickets. Also won the series by 2-1.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment