திருக்குறள்
அதிகாரம்:துறவு
திருக்குறள்:346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.
விளக்கம்:
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.
பழமொழி
Change is the law of nature .
மாற்றமே இயற்கையின் நியதி.
இரண்டொழுக்க பண்புகள்
1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.
2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.
பொன்மொழி
எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக மாற்றுகின்றன..
--- கெம்பில்.
பொது அறிவு
1.நாணயங்கள் செய்ய பயன்படும் உலோகம் எது?
நிக்கல்
2.ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் எரிப்பொருள் எது?
மண்ணெண்ணெய்
English words & meanings
Hematology – study of blood. இரத்தம் குறித்த படிப்பு மற்றும் அறிவியல்.
Habitable - suitable to be lived in. வசிக்க தகுந்த
ஆரோக்ய வாழ்வு
துளசி சாற்றையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி சிறிது தேன் கலந்து தினமும் உணவுக்குப் பின்பு உட்கொண்டு வந்தால் உடல் எடை படிப்படியாக குறையும்.
Some important abbreviations for students
c/o - care of
CCTV - closed-circuit television
நீதிக்கதை
பிறர் துன்பத்தில் இன்பம் காணாதே
ஒரு பணக்கார மாணவன் காலையில் நடைப்பயணம் செய்துக் கொண்டிருக்கும்பொழுது வழியில் அவனுடைய ஆசிரியரை கண்டான். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்களுடைய நடை பயணத்தை தொடர்ந்தனர். செல்லும் வழியில் ஒரு பழைய சட்டையும், காலனியும் மற்ற துணிகளையும் கண்டனர். அந்த மாணவன் ஆசிரியரிடம் அந்த ஆடைகள் இங்குள்ள வயல்வெளியில் வேலை செய்பவர்களுடையதாக இருக்கும் என்றான்.
அந்த சிறுவன் அந்த ஆடைகளை ஒளித்து வைத்து விளையாட முடிவெடுத்து ஆசிரியரிடம் கூறினான். அதற்கு ஆசிரியார் மற்றவர்களை துன்பப்படுத்தி அதில் நீ சந்தோஷம் காண்பது ஒரு நல்ல மனிதனுக்கு அழகல்ல. விளையாடிற்கு கூட மற்றவர்கள் நம்மால் துன்பப்படக்கூடாது என்று ஆசிரியர் கூறினார். நீ அவர்களிடம் விளையாடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டாய். எனவே நான் சொல்வதைபோல் விளையாடு என்று கூறினார்.
நீ பணக்கார மாணவன் தானே உண் கைகளில் அணிந்திருக்கும் இந்த மோதிரத்தை நீ அவர்களுக்கு கொடுக்க மனம் இருந்தால் அந்த விவசாயின் பழைய சட்டை பையில் இந்த மோதிரத்தை வைத்துவிட்டு ஒளிந்திருந்து நடப்பவற்றை பார் என்றார். அந்த மாணவனும் அவ்வாறே செய்தான். ஒரு வயதான விவசாயி அவருடைய ஆடையை எடுத்து அணியும் போது, அவருடைய சட்டை பையில் இருந்த மோதிரத்தை கண்டார். பிறகு சுற்றி சுற்றி பார்த்தார்.
அவர் கண்களுக்கு யாருமே தென்படவில்லை. உடனே, கதரி அழ ஆரம்பித்தார். இறைவனே என் மனைவி நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருக்கிறாள் அவளை குணப்படுத்த என்ன வழி என்று உண்னிடம் புலம்பினேன். யாரோ ஒரு நல்லவர் மூலமாக இந்த தங்க மோதிரத்தை எனக்கு அனுப்பி வைத்துவிட்டாய். உனக்கும் இந்த மோதிரத்தை வைத்துவிட்டு சென்ற அந்த நல்ல மனிதருக்கும் நன்றி என்று கூறிவிட்டு, என் மனைவியை குணப்படுத்த இது போதும் இறைவா என்று அந்த முதியவர் அழுதார். அதை பார்த்த அந்த மாணவன் மெய்சிலிர்த்து, அவன் கண்களில் நீர் ஒடியது. ஆசிரியர் மாணவனை பார்த்து நீ சொல்வதுபோல் செய்திருந்தால் மனவருத்தம்தான் மிஞ்சியிருக்கும். இந்த விளையாட்டால் உன் மனம் பேரானந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த மாணவனும் இனி என்மனதால் கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கமாட்டேன் என்று உறுதி கூறினான்.
புதன்
கணக்கு
நேரம் மாறிப் போச்சு
*மணிகண்டன்*:
நான் என் பாட்டி வீட்டிலிருந்து எனது வீட்டிற்கு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும்.
வீணா:
என் மாமா வீட்டிலிருந்து என் தாத்தா வீட்டிற்கு செல்ல 90 நிமிடங்கள் ஆகும் ..
கேள்வி : மணிகண்டன் ,வீணா குறிப்பிட்ட நேர அளவுகள் ஒன்றே ,எப்படி???
விடை:
1 மணி = 60 நிமிடங்கள்
1.30 மணி என்பது 60 + 30 = 90 நிமிடங்கள்
எனவே இருவரும் கூறிய நேர அளவும் ஒன்றே...
இன்றைய செய்திகள்
18.12.19
◆ டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதை ஒட்டி 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் 2,98,335 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
◆ டெல்லியில் மீண்டும் வன்முறை: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோதல், கல்வீச்சு, போலீஸ் தடியடி.
◆ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 10 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
◆ இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்க அணியில் 6 புதுமுக வீரர்கள்.
◆ ஐசிசியின் மகளிருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா உள்பட 6 வீராங்கனைகள் தேர்வு.
Today's Headlines
*2, 98, 335 candidates from 27 districts have filed their nominations as local body elections are going to be conducted on 27th and 30th of this month.
*In protests against citizenship amendment act, violence bursts out in Delhi again as clash, brickbat and also thwack by the police.
*In two bomb blasts that took place in Afghanistan, 10 lost their lives and 17 got injured.
*To play in a test series against England, 6 new players are introduced in SouthAfrican team.
*For ICCI women one day and T20 team, 6 indian players including Smrithi Mandhana are selected.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment