Tuesday, July 9, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.07.19

திருக்குறள்


அதிகாரம்:புகழ்

திருக்குறள்:235

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

விளக்கம்:

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.

பழமொழி

Good beginning makes a good ending

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளார் எனவே அதை கருத்தாக படிப்பேன்.

2. என் ஆசிரியர்கள் எனக்கு சொல்லி தருவதும் என்னை கண்டிப்பதும் என் வாழ்வின் நலன் கருதி எனவே அவர்களுக்கு கீழ் படிந்து நடப்பேன்.

பொன்மொழி

எந்தச் சூழ்நிலையிலும் எதையும் தாங்கும் சக்தியுடன் செயலாற்றும் ஒருவர் தலைமையேற்று நிர்வகிக்கும் ஒரு செயல் தோல்விகளை புறந்தள்ளும் .....

-----  இந்திராகாந்தி

 பொது அறிவு

1. இந்தியாவின் மான்செஸ்டர் எது?

 மும்பை.

2.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது?

கோவை.

English words & meanings

* Wax - an organic product of bee and some fish, மெழுகு

* Wheel - a circle frame helps to draw the cart or car, சக்கரம்.

ஆரோக்ய வாழ்வு

ரத்த  சாேகை பாதிப்பு உள்ளவர்கள்  தினமும்  காலையில்  ஒரு  பேரீச்சம்பழத்துடன்  சிறிது   கறிவேப்பிலையை சேர்த்துச்  சாப்பிட்டு வந்தால்  ரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து ரத்தசாேகை குணமாகும்.

Some important  abbreviations for students

* KB - Kilo byte

* TB - Tera byte

நீதிக்கதை

சூஃபி ஞானி தங்கியிருந்த ஓர் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவன், தன் வீட்டுக்குப் பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றான். உடனே தன் வீட்டிற்குள் வந்து தன் மனைவி, மகனிடம், ‘‘நான்  மூன்றடி நீளமுள்ள பாம்பைக் கொன்றேன்’’ என்று சொன்னான்.

அதைக் கேட்டு அதிசயித்த மனைவி, பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம், ‘‘என் கணவர் ஐந்தடி நீள பாம்பை தனியொருவராகவே அடித்துக் கொன்றார், தெரியுமா?’’ என்று பெருமையுடன் சொன்னாள். அந்தப் பெண்மணியோ, பக்கத்து தெருவிலுள்ள தன் தோழியிடம், ‘‘எங்கள் தெருவில் ஒருவர் பத்தடி நீள பாம்பைக் கொன்றிருக்கிறார்” என்று தெரிவித்தாள். அதைக் கேட்ட தோழி, பக்கத்து ஊரிலிருந்து வந்த தன் உறவினரிடம், ‘‘எங்கள் ஊர்க்காரர் ஒருவர் முப்பதடி பாம்பை  சாகடித்திருக்கிறார்!’’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாள்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி ‘‘மிகைப்படுத்துவதால் கற்பனை திறன் வேண்டுமானால் வளருமே தவிர, உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்’’ என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைக் கேட்ட விவசாயி, தான் இரண்டை மூன்றாக்கியது, இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான். ஆனாலும் ‘முப்பதடி பாம்பைக் கொன்ற’ பெருமையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனசில்லை. அதனால், தன் வீரம் பற்றி புதிதாக வந்திருக்கும் ஞானிக்கு என்ன தெரியும் என்று அலட்சியமாகக் கேட்டான்.

உடனே ஞானி, விவசாயியின் ஐந்து வயது மகனை அழைத்தார். “உன் அப்பா முப்பதடி பாம்பைக் கொன்றாராமே” என்று கேட்டார். ஆனால், அவனோ அவரை அதிசயமாக பார்த்துவிட்டு, “செத்த பாம்பு வளருமா ஐயா?” என்று கேட்டான்.

அதைக் கேட்டுப் பெரிதாக சிரித்தார் ஞானி. தந்தையார் பாம்பைக் கொன்ற தாக சொன்னவுடனேயே அவன் ஓடிப்போய் பார்த்திருக்கிறான். அது வெறும் இரண்டடி பாம்புதான் என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது. ‘அந்தப் பையனை போல எல்லோரும் உண்மையை ஆராய்ந்திருந்தால் வீண் வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காது இல்லையா?’ என்று அவர் ஊர் மக்களை பார்த்துக் கேட்டார். மக்கள் அனைவரும் தலை குனிந்து கொண்டனர்.

புதன்

கணக்கு&கையெழுத்து

எட்டு 8 ஐ எப்படி  கூட்டினால் 1000 வரும்.? எட்டை எட்டு முறை எப்படி உபயோகப் படுத்த வேண்டும்?

888+88+8+8+8 = 1000

கையெழுத்துப் பயிற்சி - 5





இன்றைய செய்திகள்

10.07.2019

* கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் நீர்திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல்.

* ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரிய www.trb.tn.nic என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

* தேர்வுத்துறை ஆலோசகராக முன்னாள் இயக்குநர் வசுந்தராதேவியை நியமித்து அரசாணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.

* இரட்டைச்சுவர் கண்டறியப்பட்ட கீழடியில் ஜிபிஆர்எஸ் ஸ்கேனர் மூலம் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் பெரு அணியுடன் மோதிய பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 12 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* உலக்கோப்பைக் கிரிக்கெட்: இந்திய நியாசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இன்று அதன் தொடர்ச்சி ஆட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines


🌸 Karnataka Chief Minister Kumaraswamy's approval for releasing water from Kaveri which will be benefit for the farmers of Karnataka and Tamil Nadu.

 🌸Answer key of Teacher Eligibility Test conducted on June 8,9  was realsed.Those  answer keys can be  found at the Teacher Selection Board, www.trb.tn.nic.

 🌸Vasundaradevi was appointed as the Exam departmental  Advisor by school education department.she was a former director

 🌸 Double wall which was discovered in kizhadi  was  inspected by GPRS scanner

 🌸 Brazil beat Peru for 3-1 in the final of the Copa American Football Tournament and won the championship for the first time in 12 years.

 🌸World Cup Cricket:The semifinal match between India and Newzealand is interrupted by rain.Play is suspended for the day. New Zealand will resume their innings on today.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment