Sunday, July 7, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.07.19

திருக்குறள்


அதிகாரம்:புகழ்

திருக்குறள்:233

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

விளக்கம்:

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

பழமொழி

Failures are stepping stones to success

தோல்வியே வெற்றிக்கு முதற்படி

இரண்டொழுக்க பண்புகள்

1. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளார் எனவே அதை கருத்தாக படிப்பேன்.

2. என் ஆசிரியர்கள் எனக்கு சொல்லி தருவதும் என்னை கண்டிப்பதும் என் வாழ்வின் நலன் கருதி எனவே அவர்களுக்கு கீழ் படிந்து நடப்பேன்.

பொன்மொழி

வாழ்வில் வெற்றி என்ற மகிழ்ச்சிக் கனியை சுவைக்க   தொடக்கத்திலேயே   தன்னம்பிக்கை மற்றும் முயற்சி எனும் நல்ல உரமிடல் வேண்டும் ...

--- ஹென்றி ஃபோர்ட்

 பொது அறிவு

* பூமி சூரியனை சுற்றி வரும் வேகம் என்ன?

   1700 கி.மீ/ மணி

* அதிகளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

இரண்டாமிடம்

English words & meanings

* Urn - a big vessel with foot at the bottom, தாழி
* Utensils - vessels in kitchen, பாத்திரங்கள்

ஆரோக்ய வாழ்வு

காலையில்  வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை   இலைகளை சாப்பிட்டு வந்தால்  வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான   காெழுப்பைக் கரைக்கிறது.

Some important  abbreviations for students

* MB - Mega byte

* GB - Giga byte

நீதிக்கதை

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?” என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

நீதி : ஆபத்தில் இருக்கும் போது பயப்படுவதை விட காப்பாற்றிக் கொள்ள சிந்திப்பதே சிறந்தது.

திங்கள்

தமிழ்&பாடல்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

ஐதீகம்  -  சடங்கு ,  நம்பிக்கை
கல்யாணம்  - மணவினை , திருமணம்
கீதம்  -  பாட்டு , இசை
கீர்த்தி  -  புகழ்
கீர்த்தனை  -  பாமாலை , பாடல்

பாடல் - இறகு (2-ஆம் வகுப்பு)

பாடலை காண இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய செய்திகள்

08.07.2019

* சிவகங்கை மாவட்டம் கிழடியில் அகழ்வு ஆய்வின் போது கண்டறியப்பட்ட இரட்டைச்சுவரின் தொடர்ச்சி நவீன கருவி மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜி.பி.ஆர். கருவி மூலம் இரட்டைச் சுவரின் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதியில் 25 மீட்டர் தூரத்திற்கு ஆய்வு பணி நடந்து வருகிறது.

* யுனெஸ்கோவின் பாரம்பரியம் மிகுந்த நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரும் இடம்பிடித்துள்ளது.

* நெதர்லாந்தில் எதிர்கால உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உலகின் முதல் மிதக்கும்  மாட்டுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

* 29-வது சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த முகமது சலாவுதீன்

* விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 4 - வது சுற்றில் விளையாட செரீனா வில்லியம்ஸ், ஆஷ்லி பார்தி, ரபேல் நடால், நிஷிகோரி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

Today's Headlines

🌸The continuation of the double wall found during the excavation work in the kizhadi of Sivaganga District is being investigated with modern equipment, GPR.  Inspection work is being carried out on the north, west and south sides of the double wall with the instrument for a distance of 25 meters.

 🌸Jaipur in the state of Rajasthan is  listed in UNESCO's Heritage Cities list.

 🌸The world's first floating cow farm to meet future food needs was created in the Netherlands.

 🌸Mohammed Salahudeen from Tamil Nadu won gold at the 29th International Athletics Championship

 🌸 Serena Williams, Ashley Bharti, Rafael Nadal and Nishikori were qualified for the 4th round of the Wimbledon Tennis Series.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment