Wednesday, November 21, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.11.18

திருக்குறள்


அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்

திருக்குறள்:102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

விளக்கம்

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

பழமொழி

Distance lends enchantment to the view

இக்கரைக்கு அக்கரை பச்சை

இரண்டொழுக்க பண்பாடு

* என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன்  எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

* பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

 பொன்மொழி

நல்லவர்களைக் காண்பது, அவர் சொல் கேட்பது, அவர்களோடு உறவாடுவது எல்லாம் வாழ்வை உயர்த்தும்.

     - ஔவையார்

பொதுஅறிவு

1.இந்திய கடற்படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 டிசம்பர் 4

2. இந்திய விமானப்படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 அக்டோபர் 8

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கம்பு



1.அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

2. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

English words and meaning

Hysterics. வலிப்புநோய்
Hump.   திமில்,கூனல்
Hazy.     தெளிவற்ற
Heed.      கவனம்
Hedge.வேலி,அடைத்தல்

அறிவியல் விந்தைகள்

மனித உடலின் அற்புதங்கள்

* நமது இதயம் ஓரு நாளைக்கு ஒரு லட்சம் முறை துடிக்கும்.
* நம் தோலின் நிறம் நிர்ணயம் செய்வது மெலனின் எனும் நிறமிதான்.
* நாம் உண்ட உணவு முழுவதும் சீரணிக்க 12 மணி நேரம் ஆகும்
* நமது காதும் மூக்கும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
* குழந்தைகளின் கண் இமைகள் ஒரு நிமிடத்தில் மூன்று முறை மட்டுமே துடிக்கும் ஆனால் பெரியவர்களுக்கு 10 தடவைகளுக்கு மேல் துடிக்கும்.

நீதிக்கதை

சுத்தம்

மன்னர் கிருஷ்ண​தேவராயருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. எப்​போது பார்த்தாலும் தனது புத்திக்கூர்​மையால் அ​னைவ​ரையும் சிரிக்க ​வைத்து விடுகிறா​னே இந்த ​தெனாலிராமன். இவ​னை எப்படியும் மட்டம் தட்ட ​வேண்டும் என்று எண்ணினார். அதன்படி​யே ​​செயல்படத் ​தொடங்கினார்.

ஒருநாள் அரச​வை கூடியது. அப்​போது ​தெனாலிராம​னை அருகில் அ​ழைத்தார் மன்னர். ​தெனாலிராமா, ''​நேற்று இரவு நான் தூங்கும் ​போது ஒரு கனவு கண்​டேன்'' என்றார் மன்னர்.

உட​னே ​தெனாலிராமன் ''அது என்ன கனவு'' என்று ​கேட்டான்.

அதற்கு மன்னர் ''வழக்கம்​போல் நாம் இருவரும் உலாவச் ​சென்​றோம். அப்​போது எதிர்பாராதவிதமாக நான் ​தேன் நி​றைந்த குழியிலும் நீ சாக்க​டையிலும் விழுந்து விட்​டோம்'' என்றார். இ​தைக் ​கேட்டதும் அரச​வையில் உள்​ளோர் அ​னைவரும் ​தெனாலிராம​னைப் பார்த்து ​கேலியாகச் சிரித்தனர்.

எல்​லோரும் சிரிப்ப​தைப் பார்த்ததும் ​தெனாலிராமனுக்கு ​கோபம் ஏற்பட்டது. இருப்பினும் அடக்கிக் ​கொண்டான். அரச​ரை எப்படியும் மட்டம் தட்டி​யே தீருவது எனக் கங்கணம் கட்டிக் ​கொண்டான். மறுபடியும் மன்னர் ​சொன்னார், ''நான் ​தேன் குழியிலிருந்து எழுந்து விட்​டேன். நீ​யோ அதிலிருந்து க​ரை​யேற முடியாமல் தவித்துக் ​கொண்டிருந்தாய்'' என்றார்.

அ​தைக் ​கேட்ட ​தெனாலிராமன் அதன் பின் என்ன நடந்தது என்று ​கேட்டான். அதற்குள் நான் விழித்துக் ​கொண்​டேன் என்றார் மன்னர். மறுநாள் அரச​வைக் கூடியதும் ​தெனாலிராமன் வந்தான்.

மன்ன​ரைப் பார்த்து,''மன்னர் ​பெருமா​​னே தாங்கள் கனவு கண்டதாக ​சொன்னீர்க​ளே, அதன் மீதி​யை நான் ​நேற்று இரவு கனாக் கண்​டேன்'' என்றான். அ​தைக் ​கேட்டதும் மன்னர் கனவு எப்படி இருந்தது என்றார்.

'' தாங்கள் ​தேன் குழியிலிருந்து க​ரை​யேறி நின்றீர்களா? நானும் எப்படி​யோ அந்தச் சாக்க​டைக் குழியிலிருந்து க​ரை​யேறி விட்​டேன். இவ்விஷயம் மற்றவர்களுக்குத் ​தெரியாமல் இருப்பதற்காக நான் உங்க​ளை என் நாவால் நக்கி சுத்தப்படுத்தி விட்​டேன். நான் ​செய்தது ​போல​வே நீங்களும் என்​னை தங்கள் நாக்கால் நக்கி சுத்தப்படுத்தினீர்கள்'' என்றான் ​தெனாலிராமன்.

இவ்வார்த்​தைக​ளைக்​ கேட்டதும் மன்னர் சிறிது அதிர்ச்சியுற்றாலும் ​தெனாலிராமனின் சாமர்த்தியத்​தை எண்ணி மனமாரப் பாராட்டினார்.

இன்றைய செய்திகள்

22.11.18

* நாளை முதல் டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்.

* ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னை மாணவி தேர்வு"
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மாணவி ஸ்ருதி பழனியப்பன் (20) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* கஜா புயல் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் இன்று மற்றும் நாளை  நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* ஷிகர் தவனின் அதிரடி ஆட்டம் வீண்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி!

* மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை யிறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் இங்கிலாந்து அணி மோதவுள்ளது.

Today's Headlines

* Tomorrow Tamil Nadu Weatherman information for heavy rainfall in districts including Delta and Chennai.

* Harvard University student institute chairman of Chennai student selection "
Indian-origin student Shruti Palaniappan (20) has been chosen as the head of the University of Harvard University's undergraduate student organization.

Anna University examinations to be held today and tomorrow only in Tiruvarur, Nagai and Pudukottai districts.

* Shikhar Dhawan's Action Against Vain: India Lost in T20 against Australia

* England's team against India in semi-final match of Women's T20 World Cup

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment