திருக்குறள்
அதிகாரம்:வான்சிறப்பு
திருக்குறள்:19
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
விளக்கம்:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
பழமொழி
Nothing can bring you but yourself
மனம் போல மார்க்கம்
இரண்டொழுக்க பண்பாடு
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி
எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.
- ஆப்ரகாம் லிங்கன்
பொது அறிவு
1. பாண்டிச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
ஆந்திர பிரதேசம்
2. இந்தியாவில் பரப்பளவில் மிகப்பெரிய மாநிலம் எது?
ராஜஸ்தான்
தினம் ஒரு நறுமண பொருளின் மகத்துவம்
கருஞ்சீரகம்
1. உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
2. மரணத்தைத் தவிர அனைத்து வகை நோய்களையும் குணப்படுத்தக் கூடியது.
3.நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு உகந்தது.
English words and meaning
Limpid தெளிவான
Lysol. கிருமிநாசினி
Luminous ஒளிரும்
Loyalty. தேசபக்தி
Linger. தயங்குதல்
அறிவியல் விந்தைகள்
* எலிகள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்ய கூடியவை. 18 மாதங்களில் ஒரு இலட்சம் எலிகளை உற்பத்தி பண்ணக் கூடியவை
* விலங்குகளிலே பெரிதான நீல திமிங்கிலம் விலங்கு மிக அதிகமாக சத்தம் போடக் கூடியது. இதன் சத்தம் 800 கி. மீ களுக்கு அப்பாலும் கேட்கும்.
* குதிரைகளும் மாடுகளும் நிற்கும் போதே உறங்கும்
* தேனீ, கொசு போன்ற பூச்சியினங்கள் தங்கள் இறக்கைகளை வேகமாக ஒன்றொடொன்று உரசுவதன் மூலம் ரீங்கார சத்தத்தை உருவாக்குகின்றன.
*நீதிக்கதை*
பெரிய பரிசு
மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.
மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.
பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.
மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.
அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.
அவையினர் கேலியாகச் சிரித்தனர்.
அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.
""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.
""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.
அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.
""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.
தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.
அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.
இன்றைய செய்திகள்
22.10.18
* வரும் 26-ந்தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
* சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா ஞாயிற்றுக்கிழமை முதல் (அக்.21) பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டுள்ளது.
* எல்லையில் பாதுகாப்பு படை வீரா்களுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
* இலங்கையுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றியது இங்கிலாந்து.
Today's Headlines
🌻The Indian Meteorological Center has reported that it is favourable to start Northeast monsoon rains from 26th October
🌻Butterfly park, which is set up in Zoological Garden,Chennai is to be open to the public from Sunday (Oct. 21).
🌻 Rajnath Singh, Union Home Secretary, said that modern technologies would be used instead of security personnel.
🌻In the Asian Champions Cup hockey series, India beat Pakistan by 3-1.🤝
🌻 England won the one-day cricket series with Sri Lanka 3-0.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment