Monday, October 15, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.10.2018

அக்டோபர் 16


உலக உணவு தினம்

திருக்குறள்

அதிகாரம்: நிலையாமை

திருக்குறள்:339

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

விளக்கம்:

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

பழமொழி

Knock and it shall be opened

தட்டுங்கள் திறக்கப்படும்.

இரண்டொழுக்க பண்பாடு

1. அனுதினமும் வாசிப்பை கடைபிடிக்க முயற்சிப்பேன்.

 2.ஒழுக்கத்தை, அறிவை போதிக்கும் புத்தகங்களை வாசிப்பேன்.

 பொன்மொழி

நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது கையில் உள்ள வீணை.

- அப்துல்கலாம்

பொது அறிவு

1. இந்தியாவில் செயல்படும் எரிமலை எங்கு உள்ளது?

 பாரன் தீவு (அந்தமான் நிக்கோபர் தீவுகள்)

2. ஓசோன் படலம் புவியின்  எந்த அடுக்கில் உள்ளது?

 ஸ்ட்ராட்டோஸ்பியர்

தினம் ஒரு மூலிகைகளின் மகத்துவம்

செம்பருத்தி பூ





1. கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கிறது.

2. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

3. இதனைத் தேநீராக அருந்தினால் இரத்த அழுத்தம் சீராகும்.

4. இதனை உணவுடன் சேர்த்து உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

5.இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.

English words and meaning

Jealous.   பொறாமை
Jovial.      மகிழ்ச்சியான
Juggle.    ஏமாற்று
Jettison. விட்டெறிதல்
Jabber.   பிதற்றல்

அறிவியல் விந்தைகள்

1. நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து பின் உறைய வையுங்கள் கண்ணாடி போன்ற ஐஸ்கட்டி கிடைக்கும் ஆனால் சாதாரண நீர் வெண்மையாக உறையும். காரணம் இதில் இருக்கும் ஆக்ஸிஜன் தான்.

2. ஆக்ஸிஜன் வாயு நிலையில் நிறமற்றது. ஆனால் இதை குளிர வைத்து உறைய வைத்து திடநிலைக்கு கொண்டு செல்லும் போது அது வெளிர் நீல நிறத்தில் இருக்கும்.

நீதிக்கதை

சுத்தம்

மன்னர் கிருஷ்ண​தேவராயருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. எப்​போது பார்த்தா லும் தனது புத்திக்கூர்​மையால் அ​னைவ​ரையும் சிரிக்க ​வைத்து விடுகிறா​னே இந்த ​தெனாலிராமன். இவ​னை எப்படியும் மட்டம் தட்ட ​வேண்டும் என்று எண்ணினார். அதன்படி​யே ​​செயல்படத் ​தொடங்கினார்.

ஒருநாள் அரச​வை கூடியது. அப்​போது ​தெனாலிராம​னை அருகில் அ​ழைத்தார் மன்னர். ​தெனாலிராமா, ''​நேற்று இரவு நான் தூங்கும் ​போது ஒரு கனவு கண்​டேன்'' என்றார் மன்னர்.

உட​னே ​தெனாலிராமன் ''அது என்ன கனவு'' என்று ​கேட்டான்.

அதற்கு மன்னர் ''வழக்கம்​போல் நாம் இருவரும் உலாவச் ​சென்​றோம். அப்​போது எதிர்பாராதவிதமாக நான் ​தேன் நி​றைந்த குழியிலும் நீ சாக்க​டையிலும் விழுந்து விட்​டோம்'' என்றார். இ​தைக் ​கேட்டதும் அரச​வையில் உள்​ளோர் அ​னைவரும் ​தெனாலிராம​னைப் பார்த்து ​கேலியாகச் சிரித்தனர்.

எல்​லோரும் சிரிப்ப​தைப் பார்த்ததும் ​தெனாலிராமனுக்கு ​கோபம் ஏற்பட்டது. இருப்பினும் அடக்கிக் ​கொண்டான். அரச​ரை எப்படியும் மட்டம் தட்டி​யே தீருவது எனக் கங்கணம் கட்டிக் ​கொண்டான். மறுபடியும் மன்னர் ​சொன்னார், ''நான் ​தேன் குழியிலிருந்து எழுந்து விட்​டேன். நீ​யோ அதிலிருந்து க​ரை​யேற முடியாமல் தவித்துக் ​கொண்டிருந்தாய்'' என்றார்.

அ​தைக் ​கேட்ட ​தெனாலிராமன் அதன் பின் என்ன நடந்தது என்று ​கேட்டான். அதற்குள் நான் விழித்துக் ​கொண்​டேன் என்றார் மன்னர். மறுநாள் அரச​வைக் கூடியதும் ​தெனாலிராமன் வந்தான்.

மன்ன​ரைப் பார்த்து,''மன்னர் ​பெருமா​​னே தாங்கள் கனவு கண்டதாக ​சொன்னீர்க​ளே, அதன் மீதி​யை நான் ​நேற்று இரவு கனாக் கண்​டேன்'' என்றான். அ​தைக் ​கேட்டதும் மன்னர் கனவு எப்படி இருந்தது என்றார்.

'' தாங்கள் ​தேன் குழியிலிருந்து க​ரை​யேறி நின்றீர்களா? நானும் எப்படி​யோ அந்தச் சாக்க​டைக் குழியிலிருந்து க​ரை​யேறி விட்​டேன். இவ்விஷயம் மற்றவர்களுக்குத் ​தெரியாமல் இருப்பதற்காக நான் உங்க​ளை என் நாவால் நக்கி சுத்தப்படுத்தி விட்​டேன். நான் ​செய்தது ​போல​வே நீங்களும் என்​னை தங்கள் நாக்கால் நக்கி சுத்தப்படுத்தினீர்கள்'' என்றான் ​தெனாலிராமன்.

இவ்வார்த்​தைக​ளைக்​ கேட்டதும் மன்னர் சிறிது அதிர்ச்சியுற்றாலும் ​தெனாலிராமனின் சாமர்த்தியத்​தை எண்ணி மனமாரப் பாராட்டினார்.

இன்றைய செய்திகள்

16.10.18

* இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

* வைகை அணை நீர்மட்டம் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக 66 அடியை எட்டியதை தொடர்ந்து 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

* யூத் ஒலிம்பிக் ஹாக்கி 5 இறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Today's Headlines

🌻 School Education Minister Mr. Chengottaiyan said that the date of qualification examination for secondary teachers and graduate teachers will be announced within a week.

🌻The first  Flood warning had given for 5 district people who live near the bank of Vaigai river since the Vaigai dam water level reached 66 feet for the second time this year.

🌻The government has  released the order for issuing  a smart card for school students.

🌻In the second Test against West Indies, India won by 10 wickets and won the test series by  2-0

🌻 Indian women's and men's teams qualify for the final round of the youth Olympic Hockey 5.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment