Sunday, October 7, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08.10.2018

அக்டோபர் 8
தேசிய விமானப் படை தினம்

திருக்குறள்

அதிகாரம் : அன்புடைமை

குறள் : 78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

விளக்கம்

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்ககை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

பழமொழி

Do not throw stones from glass house

 கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லை எறியாதே

இரண்டொழுக்க பண்பாடு

1. காலை கடன் கழிக்காமல் மற்றும் தன் சுத்தம் பேணாமல் பள்ளி வர மாட்டேன்.

2. என் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.

 பொன்மொழி

நிம்மதிக்கான இரண்டு வழிகள்:

விட்டுக்கொடுங்கள்  இல்லை விட்டுவிடுங்கள்.

       - புத்தர்

பொது அறிவு

1.எல்லோரா குகைக் கோயில்கள் அமைந்துள்ள  இடம் எது?

 அவுரங்கபாத் (மகாராஷ்டிரா)

2. இந்தியாவின் மிக உயரிய விருது எது?

 பாரத ரத்னா விருது

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

பூலாங்கிழங்கு அல்லது கிச்சிலி கிழங்கு



1. இந்த கிழங்குடன் மஞ்சள் சேர்த்து அரைத்து குளித்தால் உடல் துர்நாற்றம் மற்றும் வியர்வை நாற்றம் இருக்காது.

2. குழந்தைகளுக்கு குளிப்பாட்ட மிகவும் ஏற்றது.

English words and meaning

Distinction தனிச்சிறப்பு
Diplomatic. சாமர்த்தியமான
Decade பத்தாண்டு
Dam அணைக்கட்டு
Delightful மகிழ்ச்சி

அறிவியல் விந்தைகள்

தேன்

* உலகின் மிகச்சிறந்த உணவு தேன் ஆகும்.
*இது கெட்டுப்போவது இல்லை காரணம் இதில் கெடுக்கும் நுண்ணுயிர்கள் வாழத் தேவையான நீர் இருப்பதில்லை
*உலகின் சீரணிக்கப் பட்ட ஒரே உணவு இதுதான்.
* ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு ஓவியத்தின் படி தேன் 8000 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகத்தில் இருந்து உள்ளது.

நீதிக்கதை

விடா முயற்சி ::

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும்  வீரத்துடன்  போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் எதிரி  வெற்றி பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி அரசனைக் கொல்ல திட்டமிட்டான். அதனால் அரசன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தை ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான் .

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியும் தன் எதிரியுடன் போர் புரியத் தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

இன்றைய செய்திகள்

08.10.18

* மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

* ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6-ஆகப் பதிவானது. இது 206 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடி அகழாய்வில் ஏற்கெனவே கிடைத்த உறை கிணற்றின் சம காலத்தை ஒட்டிய சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறை கிணறு என்பது ஆய்வில் தெரியவந்தது.

* முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

*  புது தில்லியில் நடைபெற்ற பெனஸ்டா தேசிய டென்னிஸ் போட்டியில் சித்தார்த் விஸ்வகர்மா புதிய சாம்பியன் ஆனார். மகளிர் பிரிவில் மஹக் ஜெயின் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

Today's Headlines

🌸 The Chennai Meteorological Center warned fishermen not to go to sea for the next 4 days💧

🌸An earthquake was happened at  8.09 am on Sunday in Jammu and Kashmir . It was recorded at 4.6 on the Richter scale. It has been reported at a depth of 206 kilometers⭐

🌸 In the kizhadi Excavation tunnel,they discovered oldest sheath well on Saturday.
The study  about the discovered well revealed that  it was a 2,000-years-old sheath well,which belongs to the same age  to the 2 sheath well which they had already discovered in that place⭐

🌸India won the West Indies by an innings and 272 runs in the first Test🤝

🌸Siddharth Vishwakarma became the new champion in the Benasta National Tennis tournament in New Delhi. Mahak Jain retained his title in the women's section⭐🎖🤝

Prepared by
Covai women ICT_போதிமரம்