செப்டம்பர் 17 - இன்று தந்தைப் பெரியாரின் 140- வது பிறந்த நாள்
திருக்குறள்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்.
விளக்கம்:
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ.
பழமொழி
All is fair in love and war
ஆபத்துக்குப் பாவம் இல்லை
இரண்டொழுக்க பண்பாடு
1. நான் எப்பொழுதும் சாலை விதிகளை பின்பற்றி நடப்பேன்.
2. நான் என்றும் பொதுசொத்துகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பேன்.
பொன்மொழி
உண்பதற்காக வாழாதே. உயிர் வாழ்வதற்காக உண்.
- சாக்ரடீஸ்
பொது அறிவு
1.ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சாமுல் ஹானிமன்(Samuel Hahnemann)
2. நுண்ணுயிர்களை காண உதவும் கருவி எது?
நுண்ணோக்கி( microscope)
English words and Meanings
Energy. ஆற்றல்
Enumerate. கணக்கில்
Excrete. வெளியேற்றம்
Except. தவிர
Example. எடுத்துக்காட்டு
தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்
*முருங்கைக் கீரை*
1. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
2. இரத்தத்தில் ஏற்படும் உயரழுத்தத்தை தடுத்து சமச்சீராக செய்கிறது.
நீதிக்கதை
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.
ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
"முயலே நில்!'' என்றது ஆமை.
முயல் நின்றது.
"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.
"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.
"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''
"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.
ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.
ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.
சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.
ஓநாய் முயலைப் பிடித்தது.
சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.
தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.
இன்றைய செய்திகள்
17.09.18
*2 செயற்கை கோள்களுடன் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., சி-42 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
* 2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சிபிஎஸ்இ உடன் தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
* தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்டோபர் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில் மொத்தம் 13,500 கிராமங்களில் பள்ளிகளே கிடையாது என்கிற அதிர்ச்சித் தகவலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
* போலந்து குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.
Today's Headlines
🌸India's PSLV, C-42,rocket successfully launched with 2 satellites⭐
🌸Justice Kripakaran has ordered that no homework up to Class II will apply to the CBSE and Tamil Nadu State board curriculum also⭐
🌸 Second phase of 197 co-operative societies election will be held on October 11th⭐
🌸The Department of Rural Development has released the shocking information that there are no schools in 13,500 villages, in all over India⭐
🌸 Indian boxer Saritha Devi won bronze medal in Polish boxing tourney🤝🎖
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment