Sunday, September 9, 2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.09.18

திருக்குறள்


அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.

விளக்கம்:

கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.

பழமொழி

Variety is the spice of life

மாற்றம் என்பது மானிடத்தத்துவம்

இரண்டொழுக்க பண்பாடு

1.  நான் எப்பொழுதும் சாலை விதிகளை பின்பற்றி நடப்பேன்.

2.  நான் என்றும் பொதுசொத்துகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பேன்.

 பொன்மொழி

விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல. விழும் ஒவ்வொரு முறையும்  மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை.

          - நெல்சன் மண்டேலா

பொது அறிவு

1. இந்தியாவின் அக்மார்க் தர நிர்ணய ஆராய்ச்சி முதன்மை மையம் எங்குள்ளது?

 நாக்பூர்

2. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு உள்ளது?

 விசாகப்பட்டினம்

English words and. Meanings

Announce.     அறிவித்தல்
Ammunition
வெடிப்பொருட்கள்       
Abundantly.  மிகுதியாக
Access.       அணுகுதல்
Arrear.          நிலுவை

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*துத்தி இலை*

1.  சருமப் பிரச்சனைகளுக்கு  மருந்தாக பயன்படுகிறது.

2. மூல வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

நீதிக்கதை

 மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்…  இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

இன்றைய செய்திகள்

10.09.18

*வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

* உலக சுகாதார நிறுவனம் நடத்திய உலகின்  சுறுசுறுப்பான மக்கள் யார் என்ற ஆய்வில் உகாண்டா முதலிடம் பெற்றது. இந்தியாவுக்கு 117-வது இடம் கிடைத்துள்ளது.

* கோவை நகரில், 700க்கும் அதிகமான பூங்காக்களை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முன் வர வேண்டுமென, மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

* தேசியமய வங்கிகளுக்கு சமூக பொறுப்பு உள்ளது. ஏழை மாணவர்கள் உயர்கல்வி கனவு இலக்கை நிறைவேற வங்கி கல்விக் கடன் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

* யு.எஸ். ஓபன்-2018 டென்னிஸ் தொடரின் மகளிர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜப்பானின் நவோமி ஒசாகா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.


Today's Headlines

🌸Chennai Meteorological Survey says that heavy rainfall is possible in one of the places inTamil Nadu and Puducherry due to convection🌹

🌸Uganda was the first to find out who is the most active people in the world by the World Health Organization. India has been ranked 117th🌹

🌸 In the city of Coimbatore, the Corporation has called for private organizations and volunteers to come forward to improve over 700 parks🌹

🌸National banks have social responsibility. The Supreme Court has ordered the Madurai Branch to provide banking loan for poor students to fulfill their dream🌹

🌸U.S open Tennis-2018 :    Naomi Osaka from Japan defeated Serena Williams in the finals and bags championship trophy🌸🎖🏆

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment