Monday, August 10, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -11.08.2026




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:469

குறள்:

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

பொருள்:

அவரவரது இயல்புகளைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்.

பழமொழி :

Live not to eat, but eat to live

உண்பதற்காக வாழாதே, வாழ்வதற்காக உண்

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

ஒவ்வொரு மழைத்துளியும் நாளைய வாழ்வின் விதை.

Thought for the Day :

Rain teaches us that even the darkest clouds bring life.

பொது அறிவு : 

1. காந்திஜி அவர்களை" மகாத்மா" என்றழைத்தவர் யார்? 

இரபீந்திரநாத் தாகூர். 

2. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களை "இரும்பு மனிதர் " என்றழைத்தவர் யார்? 

மகாத்மா காந்தி.

English words :

Confident – Believes in oneself, தன்னம்பிக்கையுள்ளவர். 

 Optimistic – Always sees the positive, நம்பிக்கையுள்ளவர்

புவியியலும் சுற்றுசூழலும் :


இந்தியா ஆசியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது.
வடக்கில் இமயமலை, தெற்கில் இந்தியப் பெருங்கடல்.
இந்தியாவின் மொத்த பரப்பளவு – 32,87,263 சதுர கிலோமீட்டர்.
உலகின் 7-வது மிகப்பெரிய நாடு.
பரப்பளவில் ஆசியாவில் 3-வது இடம் (ரஷ்யா, சீனாவிற்கு அடுத்து).

NMMS :

MAT 

ஒரு சங்கேத மொழியில் "WHO" என்பதை "16" எனவும், "HOW" என்பதை "0" எனவும் குறிக்கப்பட்டால் "WHY" என்பதன் குறியீடு________________________ 

 (1) 70. 

 (2) 5. 

 (3) 6.

 (4) 56. 

 விடை: (3) 6   

நீதிக்கதை

 🌳 உதவும் கரங்கள்

ஒரு பெரிய காட்டில் பல விலங்குகள் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டில் ஒரு சிறிய அணிலும் வாழ்ந்து வந்தது. அது மிகவும் சுறுசுறுப்பானதும், அன்பானதுமாக இருந்தது. யாருக்காவது உதவி தேவைப்பட்டால், தன்னால் முடிந்த அளவு உதவி செய்வது அதன் வழக்கம்.

ஒருநாள் அணில் உணவு தேடி காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு சிறிய முயல் ஒரு பள்ளத்தில் தவறி விழுந்திருப்பதைப் பார்த்தது. முயல் மேலே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.

அணில் உடனே அருகில் கிடந்த ஒரு நீண்ட கொடியை எடுத்துக்கொண்டு பள்ளத்திற்குள் இறக்கியது. முயல் அந்தக் கொடியைப் பிடித்துக் கொண்டது. பின்னர் அணில் அருகில் இருந்த மானையும் குருவியையும் அழைத்து வந்தது. அனைவரும் சேர்ந்து கொடியை இழுத்து முயலைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

முயல் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. தன்னுடைய சிறிய உதவிக்காக அணிலுக்கு நன்றி கூறியது.

சில நாட்களுக்குப் பிறகு அணில் ஒரு மரக்கிளையில் இருந்து கீழே விழுந்து அதன் காலில் காயம் ஏற்பட்டது. அப்போது அதற்கு உதவியது அந்த முயல்தான். முயல் மற்ற விலங்குகளை அழைத்து வந்து அணிலுக்கு தேவையான உதவிகளைச் செய்தது.

அப்போது அணில், தான் பிறருக்கு செய்த உதவி தன்னிடமே திரும்பி வந்ததை நினைத்து மகிழ்ந்தது. அந்த நாளிலிருந்து காட்டில் வாழ்ந்த அனைத்து விலங்குகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து அன்புடன் வாழத் தொடங்கின.

🌟 நீதி:

“மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மனம், ஒருநாள் நமக்கும் உதவியாகத் திரும்பி வரும்.”

இன்றைய செய்திகள்

11.08.2026

🗒️அரசு விழாக்களில் முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என்ற தீர்மானத்தை ஆதரித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நன்றி கூறினார்.

🗒️இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது என மத்திய மந்திரி தகவல்.

🗒️கொலம்பியாவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவு ஆகியுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது   அயர்லாந்து  .

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay thanked everyone who supported the decision to sing the Tamil Thai Vazhthu first at government functions.

🗒️ The Union Minister has informed that the number of Asiatic lions in India has increased to 891.

🗒️ A powerful earthquake struck Colombia, measuring 7.4 on the Richter scale.

Sports News

🏀 3rd ODI: Ireland set a target of 207 runs for Afghanistan.

Covai women ICT_போதிமரம்

 

Sunday, August 9, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -10.08.2026

காவல‌ர் வைணு பாப்பு வானாய்வகம்




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:468

குறள்:

 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.   

பொருள்:

ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.  

பழமொழி :

Like priest : like people.

அன்பர் எப்படியோ , தொண்டரும் அப்படியே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி  -நெல்சன் மண்டேலா

Thought for the Day :

Hard work today brings success tomorrow.

பொது அறிவு : 

1. மனித உடலில் உள்ள இரத்தத்தின் pH மதிப்பு என்ன? 

7.35-7.45. 

2. தூய மழை நீரின் pH மதிப்பு என்ன? 

5.6

English words :

1. Ambitious – Has strong goals, இலட்சியமுள்ளவர்.


2. Adaptable – Adjusts to change, மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இந்திய துணைக்கண்டத்தின் முக்கியத்துவம்
வளமான விவசாய நிலங்கள்.
பல்வேறு காலநிலைகள் மற்றும் இயற்கை வளங்கள்.
உலகின் பழமையான நாகரிகங்கள் வளர்ந்த பகுதி.
பல மொழிகள், பண்பாடுகள் மற்றும் மதங்கள் இணைந்து வாழும் நிலம்.

NMMS :

MAT 

ஆப்பிள் "தக்காளி " எனவும், தக்காளி "சோப்" எனவும், சோப் "தேன்" எனவும், தேன் "மை" எனவும் அழைக்கப்பட்டால் பின்வருவனவற்றுள் குளிப்பதற்கு பயன்படுத்துவது எது?

 (1) தேன் 

 (2) தக்காளி

 (3) சோப்பு

 (4) மை 

 விடை: (1) தேன்

ஆகஸ்ட் 10

மணாலி கல்லாட் வைணு பாப்பு (Manali Kallat Vainu Bappu, ஆகஸ்ட் 10, 1927 - ஆகஸ்ட் 19, 1982) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம்-வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தை நிறுவுவதற்கு முக்கியக் காரணமாவார்.

வைணு பாப்பு


நீதிக்கதை

 விட்டுக்கொடுப்பதே வெற்றியின் வழி

ஒரு சிறிய குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன் அருண், மகள் காவ்யா ஆகியோர் வசித்து வந்தனர்.

ஒரு நாள் மாலை , அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது, குழந்தைகள் இருவருக்கும் பிடித்தமான ஒரு பெரிய கேக் வாங்கி வந்தார்.

“இதை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு அப்பா வெளியே சென்றார்.

அருணுக்கும் காவ்யாவுக்கும் கேக்கின் பெரிய துண்டு வேண்டும் என்று ஆசை . இருவரும் ஒரே துண்டை எடுத்துக்கொள்ள முயன்றதால், சிறிய சண்டை ஏற்பட்டது.

அதைப் பார்த்த அம்மா,

“நீங்கள் இருவரும் விட்டுக்கொடுத்தால் இந்தப் பிரச்சினை உடனே தீர்ந்துவிடும்”என்றார். ஆனால் இருவரும் கேட்கவில்லை .

சிறிது நேரம் கழித்து, காவ்யா யோசித்தாள். “நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் என்ன? என் தம்பியும் சந்தோஷமாக இருப்பானே !” என்று நினைத்து, பெரிய துண்டை அருணிடம் கொடுத்தாள். அதைப் பார்த்த அருணுக்கு மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

“நீ எனக்காக விட்டுக்கொடுத்தாய். எனக்கும் உனக்காக விட்டுக்கொடுக்கத் தெரியும்” என்று கூறி, அந்தப் பெரிய துண்டை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை காவ்யாவிடம் கொடுத்தான்.

இருவரும் சேர்ந்து கேக்கை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

அதைப் பார்த்த அம்மா சிரித்துக்கொண்டே ,

“விட்டுக்கொடுப்பதால் நாம் எதையும் இழப்பதில்லை . மாறாக, அன்பையும் மகிழ்ச்சியையும் பெறுகிறோம்” என்றார். அன்று முதல் அருணும் காவ்யாவும் சிறிய விஷயங்களுக்காக சண்டையிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழத் தொடங்கினர்.

அவர்களின் வீடு எப்போதும் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறியது.

நீதி:

விட்டுக்கொடுப்பது தோல்வி அல்ல; அது உறவுகளை வலுப்படுத்தும் வெற்றியின் அடையாளம்.

இன்றைய செய்திகள்

10.08.2026

🗒️கபினி அணையில் நீர்மட்டம் உயர்வு காரணமாக தமிழகத்திற்கு  காவிரி நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

🗒️மக்களுக்கு சேவை செய்வதில்  முதலிடம் பிடித்த புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருதை மத்திய மந்திரி அமித்ஷா வழங்கினார்.

 🗒️இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப் பட்டது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀கொரிய பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் சாலிஹா வென்றார்.

🏀உலக ஜூனியர் தடகளம்: 
இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Today's Headlines

🗒️ Due to the rise in water level at the Kabini Dam, the release of Cauvery water to Tamil Nadu has been increased to 12,000 cubic feet per second (cusecs).

🗒️ Union Minister Amit Shah presented the President’s Colours Award to the Puducherry Police for their excellent service to the people.

🗒️ The US Senate passed a bill to impose a 100% tax on India.

🏀 Sports News

🏀 Korea Badminton Final: Indian player Saleha won the championship title.

🏀 World Junior Athletics: Indian athlete Ashish Yadav won the silver medal.

Covai women ICT_போதிமரம்

Thursday, August 6, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -07.08.2026

கலைஞர் மு. கருணாநிதி

 




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:467

குறள்:

 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்:

செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.  

பழமொழி :

Penny wise, pound foolish.

சிறியதை காக்கப் பெரியதை இழக்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.

 2.என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

பொன்மொழி : 

மழை பொழியும் போது பூமி சிரிக்கிறது.

Thought for the Day :

Save every drop of rain, and you save the future.

பொது அறிவு : 

1. பறவைகள் பற்றி படிக்கும் படிப்பு எது? 

ஆர்னித்தாலஜி

2.இந்தியாவின் பறவை மனிதர் என்றழைக்கப்படுபவர் யார்? 

டாக்டர். சலீம் அலி.

English words :

Insightful – Understands deeply, ஆழ்ந்த புரிதல் உடையவர். 

 versatile - Multi -Skilled.பல்திறமைசாலி.

புவியியலும் சுற்றுசூழலும் :

சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்

தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணுதல்

மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல்

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை பராமரித்தல்

அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகும்


NMMS :

SAT 

ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் ________________________ முட்டைகள் இடும் . 

 (1) 600. 

 (2) 500. 

 (3) 5000. 

 (4) 6000. 

 விடை: (2) 500

ஆகஸ்ட் 07

இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்

இரவீந்தரநாத் தாகூர்



இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார்.  இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவி வகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.

இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

நீதிக்கதை

 ராணுவ வீரரின் பார்வையில், தாய்நாட்டுப் பற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதை :

"என் உயிரை விட உயர்ந்தது என் தாய்நாடு"

நான் அரவிந்த். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரன். பல மாதங்களாக என் குடும்பத்தைப் பார்க்காமல், நாட்டின் எல்லையில் காவல் காத்துக் கொண்டிருந்தேன். கடும் பனியிலும், மழையிலும், வெயிலிலும் எங்கள் கடமையை ஒருநாளும் தவறவிடவில்லை .

ஒருநாள் இரவு, எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான அசைவு தெரிந்தது.

உடனே நானும் என் நண்பர்களும் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம். எங்கள் விழிப்புணர்வால் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றவர்களை தடுத்து நிறுத்த முடிந்தது.

அன்று என் தாயின் பிறந்தநாள். அவரிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நாட்டின் பாதுகாப்பே என் முதல் கடமை என்பதால், என் ஆசையை ஒதுக்கிவைத்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு விடுமுறையில் வீட்டிற்குச் சென்றேன். என் தாய் என்னைப் பார்த்து, "மகனே , எங்களை விட இந்த நாட்டை நீ அதிகமாக நேசிக்கிறாய் அல்லவா?" என்று கேட்டார்.

நான் புன்னகையுடன், "அம்மா, நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தீர்கள். ஆனால் இந்தத் தாய்நாடுதான் அந்த உயிருக்கு அர்த்தம் கொடுத்தது. நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நம் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும்," என்றேன். என் தாய் பெருமையுடன் என் தோளில் கை வைத்து, "உன்னைப் போன்ற வீரர்கள் இருப்பதால்தான் நாங்கள் அமைதியாக வாழ்கிறோம்," என்றார்.

நீதி:

தாய்நாட்டைப் நேசிப்பதும், அதன் பாதுகாப்பிற்காகத் தன் கடமையை நேர்மையாகச் செய்வதும் ஒவ்வொரு குடிமகனின் உயர்ந்த பொறுப்பாகும்.

இன்றைய செய்திகள்

07.08.2026

🗒️கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

🗒️'AC' பெட்டிகளில், பயணிக்கும் .R.A.C, பயணிகளுக்கும்  போர்வை, கம்பளி வழங்க  ரெயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

🗒️11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவ படகு மீட்பு நடவடிக்கையில்  இலங்கை கடற்படையும் இணைந்து செயல்பட்டுள்ளது.
 
 *விளையாட்டுச் செய்திகள்*

🏀கிராண்ட் செஸ் தொடர்: 
நெதர்லாந்து வீரர் ஜோர்டான் வான் பாரஸ்டிடம் உடன் மோதியதில் பிரக்ஞானந்தா முன்னிலையில் உள்ளார்.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay has written a letter to the Prime Minister, requesting action to implement the Godavari–Cauvery–Gundar river linking project.

🗒️ The Railway Board has instructed that blankets and bed sheets should also be provided to RAC passengers travelling in AC coaches.

🗒️ The Sri Lankan Navy also joined the rescue operation after an Indian fishing boat carrying 11 fishermen met with an accident.

🏀 Sports News

🗒️ Grand Chess Tournament: Praggnanandhaa is in the lead after his match against Dutch player Jorden van Foreest.

Covai women ICT_போதிமரம்