Monday, March 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2025

 

வில்லியம் கோல்கேட்

  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:997

அரம்போலும் கூர்மை ரேனும் மரம்போல்வர்
 மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள்:
அரம் போன்ற கூறிய அறிவுடையவராக இருந்தாலும் மனிதத் தன்மை
இல்லாதவர் மரத்திற்கு ஒப்பாவார்.

பழமொழி :

சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.

The spinning world makes every thing rotate.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு  மனிதரும்  அவரது இலட்சியத்தை அடைய முடியாது. ---காமராஜர்

பொது அறிவு : 

1. மண்பானையில் உள்ள நீரை குடித்தால் எவ்வகை நோய் குணமாகும்? 

விடை :  இரத்த அழுத்தம்.          

2. உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்கு உள்ளது? 

விடை : சீனா 

English words & meanings :

 Blood pressure      -   இரத்த அழுத்தம

Blood test     -    இரத்த பரிசோதனை

வேளாண்மையும் வாழ்வும் : 

 * மறக்காமல் பயன்படுத்தியதும் குழாயை நிறுத்துங்கள்.

மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.

நீதிக்கதை

 வானத்தில் வீடு 


அக்பர் ஒருநாள் பீர்பாலிடம், "என்னோட பண்ணையில் ஒரு வீடு கட்டணும் ,ஆனா அந்த வீடு தரையில் கட்ட கூடாது உன்னால் முடியுமா?"என்று கேட்டார்.


 பீர்பால்,அதற்கு நிறைய பணமும் ,மூன்று மாதம் அவகாசமும் வேண்டும், என்றார்.

,உடனே அக்பர் அவருக்கு ஆயிரம் தங்க நாணயங்களும் நேரமும் கொடுத்தார்


வீட்டிற்கு போன பீர்பால் 

வேட்டைகாரர்களிடம்,"எனக்கு 100 பச்சை கிளிகள் வேண்டும் அதை பிடித்துக் கொண்டு வாங்க" என்றார்.


உடனே எல்லா வேட்டைக்காரர்களும் காட்டுக்கு சென்று அதிக பச்சை கிளிகளை பிடித்துக் கொண்டு வந்தனர்.


அவற்றை தன்னுடைய மகளிடம்  ஒப்படைத்த பீர்பால் ,இந்த கிளிகளுக்கு எல்லாம் பேச கற்றுக் கொடுக்க கூறினார்.


சிறிது நாட்கள் கழித்து, 

எல்லா கிளிகளும் பேச ஆரம்பித்தது.உடனே பீர்பால் கட்டடம் கட்டணும் ,கல் எடுத்துட்டு வாங்க  என்று கட்டடம் கட்டும் போது பேசும் எல்லாம்  வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க சொன்னார்.


மூன்று மாதம் கழித்து வீடு கட்ட ஆரம்பித்தாயிற்று வந்து பாருங்க என்று அக்பரை பண்ணைக்கு அழைத்து சென்றார் பீர்பால்.


அங்கு வந்து பார்த்தால் நிறைய கிளிகள் இருந்தன.அவை கட்டடம் கட்டணும் ,மண்ணைபோடுங்க ,

தண்ணீர் ஊற்றுங்க என்று பேசிக் கொண்டே இருந்தன.


இதைப் பார்த்த அக்பருக்கு ஆச்சர்யமாக இருந்தது. "என்ன பீர்பால் இந்த கிளிகளா எனக்கு வீடு கட்டி தர போகுது?" கேட்டார்.


அதற்கு பீர்பால், "ஆமாம் அரசே! காற்றில் வீடுகட்ட ,காற்றில் பறக்கும் பறவைகளால் தான் முடியும்," என்று கூறினார்.


தன்னை பீர்பால் தோற்கடித்து விட்டார்  என்பதை புரிந்து கொண்டார் அரசர்.

இன்றைய செய்திகள்

25.03.2025

* ‘8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி, 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் உள்ளிட்ட அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

* வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் திடீரென்று நிகழும் உயிரிழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

* ஒடிசாவில் தங்க படிமம் கண்டுபிடிப்பு: முதல் முறையாக படிமங்களை தோண்டி எடுக்க தங்க சுரங்கங்களுக்கு ஏலம் விடப்பட உள்ளது.

* திபெத்தில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பார்முலா1 கார்பந்தயம்: 2-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்.

* மியாமி ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Construction of dams in 9 locations across 8 districts at a cost of ₹184.74 crore. Renovation, restoration, and reconstruction of 149 damaged irrigation systems in 35 districts announced byWater Resources Department Minister Duraimurugan

   * Government and private hospitals are instructed to investigate sudden deaths due to increased heat impact and report the details to the government.
 
   * Gold deposits discovered in Odisha: Gold mines will be auctioned for the first time for excavation.

   * The National Center for Seismology reported a 4.5 magnitude earthquake in Tibet.
 
   * Formula 1 car race: Australian driver Oscar Piastri topped the second round.

   * Miami Open Tennis: Serbian player Djokovic advanced to the 4th round.

Covai women ICT_போதிமரம்

Sunday, March 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.03.2025

உலக காசநோய் தினம்

   






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:996

 பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்: அதுஇன்றேல்
 மண்புக்கு மாய்வது மன்.

பொருள்:
உலகம் பண்புடையார் ஒழுக்கத்தால் வாழ்கின்றது. அஃதில்லாவிடின்
அழிந்து போயிருக்கும்.

பழமொழி :

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்

Face the danger boldly than live in fear.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

கட்டளையிட விரும்புவன் முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். ---அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

1. நெடுஞ்சாலையில் அவசர அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைபேசி சாவடி எது?

 விடை:  SOS (save our souls).       

2.  VIVO நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?

 விடை: சீனா

English words & meanings :

 Backache.     -     முதுகுவலி

Blood.    -     இரத்தம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 உங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே தண்ணீரை உபயோகியுங்கள்.

மார்ச் 24

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்

நீதிக்கதை

 யானையும் பலமும் 


ஒரு மிக பெரிய காட்டில் ஒரு பெரிய யானை வாழ்ந்து வந்தது.அந்த யானையோட உருவத்த பார்த்து அந்த காட்டில் வாழ்ந்து வந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்தார்கள்.


யானை வர்ற பக்கம் கூட போகாமல் பயந்து,  அந்த மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளுக்கு யானை ஒரு பெரிய அரக்கன்னு கதை சொல்லி யானை இருக்குற பக்கமே போக விடாமல் செய்தன.


இத எதுவுமே கண்டுக்காத யானை தன்னோட வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்தது.


தன்னோட பழகாம தன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் தன்னை எல்லாரும் உதாசீனப் படுத்துறது யானைக்கு வருத்தமாக இருந்தது.


ஒரு நாள் காட்டுக்குள் பெரிய மழை பெய்து திடீர் வெள்ளம் வர ஆரம்பித்தது.குட்டி குட்டி மிருகங்கள் வாழும் இடத்தை சுற்றி பெரிய ஆறு மாதிரி தண்ணீர் ஓட ஆரம்பித்தது. அதனால் தீவில்   எல்லா மிருகங்களும் உள்ளேயே மாட்டிக்கொண்டன.


வெளிய வந்து உணவு தேட முடியாத நிலை ஏற்பட்டது.

எல்லா மிருகங்களும் தங்களுடைய குட்டிகளுடன் பட்டினி கிடந்தன.


 அந்த பக்கம் வந்த யானை இதை எல்லாம் பார்த்தும் ,ரொம்ப நாளாக  தன்னோட வேலையை மட்டும் பார்த்து வந்த யானை ஒன்றும்  பேசாமல் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தது.



அப்போது,ஒரு குட்டி குரங்கு "யானை மாமா எங்க குடும்பமே பசியில் கிடக்கு எங்களுக்கு உதவ கூடாதான்னு"என்று கேட்டது.

அதை பார்த்து சிரித்த யானை "நான்தான் அரக்கன் மாதிரி இருக்கிறேன் என்னை பார்த்து பயமாக இல்லையா?" என்று கேட்டது. 


 அந்த குட்டி குரங்கு, "எங்க அப்பா அம்மா உங்கள் உருவத்தைப் பார்த்து எங்களுக்கு எதுவும் ஆபத்து வந்திடக் கூடாதுனு அப்படி சொல்லி வளர்த்தாங்க ,ஆனா ஒருத்தரோட உருவத்தை வைத்து அவர்களுடைய குணத்தை எடை போடக் கூடாதுனும் சொல்லி இருக்காங்க ,உங்களுடைய அமைதியான வாழ்க்கை முறையை பார்த்த எனக்கு நீங்க ஆபத்தானவர்னு தோன்றவில்லை" என்று கூறியது.


முதல் முறையாக ஒரு குட்டி மிருகம் தன்னிடம் பேசுவது யானைக்கு ரொம்ப சந்தோசம். உடனே தன்னோட துதிக்கையை கொண்டு எல்லா மிருகங்களையும் காப்பாற்றியது. 

 

அன்றிலிருந்து யானையையும் தங்களில் ஒருத்தராக நினைத்து பழக ஆரம்பித்தார்கள். அந்த குட்டி மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளையும் அந்த யானையுடன் விளையாட அனுமதித்தார்கள்,அதனால் ரொம்ப சந்தோசமாக வாழ ஆரம்பித்தது யானை.

இன்றைய செய்திகள்

24.03.2025

* தமிழகத்தில் 'ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் இன்று கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* லடாக் பகுதியில் சீன சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளதற்கு, தூதரகம் மூலம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

* கியூபா உட்பட 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்க அரசு முடிவு.

* தேசிய மகளிர் ஹாக்கி போட்டி: 4-வது நாள் ஆட்டத்தில் ஒடிசா, ஹரியானா, மிசோரம், மத்திய பிரதேசம் அணிகள் வெற்றி.

* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்க வீராங்கனை கோகோ காப்.

Today's Headlines

* Electricity board officials have stated that in Tamil Nadu, 'hybrid' power plants, combining wind and solar energy, will be established through public-private partnerships.

 * The Chennai Meteorological Department has forecast heavy rainfall in 8 districts of Tamil Nadu today, including Coimbatore and Erode.

 * India has expressed its opposition through diplomatic channels to China's illegal occupation of Ladakh and the creation of two districts, as stated by Minister of State for External Affairs Kirti Vardhan Singh in Parliament.

 * The US government has decided to deport 500,000 people from four countries, including Cuba.

 * National Women's Hockey Competition: Odisha, Haryana, Mizoram, and Madhya Pradesh teams won on the 4th day of the competition.

 * Miami Open Tennis Tournament: American player Coco Gauff advanced to the 4th round.
Covai women ICT_போதிமரம்

Friday, March 21, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.03.2025

 

உலக தண்ணீர் தினம்

  






திருக்குறள்: 

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள்எண்:995

நகையுள்ளும் இன்னாத இகழ்ச்சி: பகையுள்ளும்
 பண்புஉள பாடுஅறிவார் மாட்டு.

பொருள்:
விளையாட்டிற்குங்கூட ஒருவரை இகழ்தல் கூடாது. பகைவரிடத்தும் பாராட்டும் குணமே பண்பாளரிடம் காணப்படும்.

பழமொழி :

Hear more talk less

கேட்பதற்கு தீவிரம் பேசுவதற்கு மந்தமாயும் இருக்க வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.

பொன்மொழி :

நான் மெதுவாக நடப்பவன் தான் ; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.---ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

1. Flipkart நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது? 

விடை:  அமெரிக்கா.     

2. மொபைல் போன் பேட்டரி எதனால் ஆனது? 

விடை :  லித்தியம் அயன்

English words & meanings :

 Tailor.      -      தையல்காரர்

Teacher.   -      ஆசிரியர்

மார்ச் 22

உலக நீர் நாள் (World Water Day),

உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீதிக்கதை

 புத்திசாலி பூனை

 ஒரு பூனை ஒரு பெரிய 

மரத்துக்கு கீழே நின்றுக்

கொண்டு இருந்தது.

அப்போது  வேட்டைநாய்கள் குறைக்கும் சத்தம் தொலைவில் கேட்டது. பூனை அதை உற்றுக் கேட்டது.

அந்த மரத்தடிக்கு ஒரு நரியும் வந்தது.அந்த நரி பூனையிடம் , 

”வேட்டை நாய் சத்தம் கேட்குதே; அதெல்லாம் வந்தால் எப்படி தப்பிப்பாய்? "  என்று கேட்டது.

அதற்கு பூனை,” நான் உன்னை மாதிரி பெரிய அறிவாளியா? எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்.இந்த மரத்தின் மீது 

ஏறி உச்சிக்குப் போய் தப்பிப்பேன். அவைகள் போனதும் மறுபடியும் கீழே இறங்கி வருவேன்” என்று பதில் கூறியது.

“நீ எப்படி தப்பிப்பாய்” என்று பூனை நரியிடம் திருப்பிக் கேட்டது.

அதற்கு நரி,”எனக்கென்ன, எனக்கு ஆயிரம் வழி தெரியும்” என்று பதில் கூறியது.

அப்போது வேட்டைநாய்கள் சத்தம் அருகில் கேட்டதால் பூனை மளமளவென்று மரத்தின்மேல் ஏறியது.

வேட்டைநாய்கள் நரியை சூழ்ந்து கொண்டன.கடைசி நேரத்தில் ஒன்றும் தோன்றாமல் நரி மாட்டிக் கொண்டது

பூனை நரியைப் பார்த்து, “என்ன நரியாரே, ஆயிரம் வழியில் ஒன்று கூட நினைவுக்கு வரவில்லையா”என்று கேட்டது.

நீதி: முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை கஷ்டம்.

இன்றைய செய்திகள்

22.03.2025

* குடிநீர் கேன்களில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து தண்ணீரை நிரப்ப வேண்டும் என, குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

* தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

* கேமரா, எஸ்ஓஎஸ் பட்டன், நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் விரைவு பேருந்துகள் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன என அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியுள்ளார்.

* ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

* அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் திரிஷா- காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.

* தேசிய மகளிர் ஹாக்கி தொடர்: 2-வது நாளில் ஒடிசா, மணிப்பூர், அரியானா, ஜார்கண்ட் அணிகள் வெற்றி.

Today's Headlines

* Food Safety Department Officer Sathishkumar has advised drinking water manufacturing companies to refill water in drinking water cans only up to 30 times.

   * Minister M. Subramanian stated in the Legislative Assembly that snake and dog bite medications are available in all 2,286 government primary health centers in Tamil Nadu.

   * Express buses with features like cameras, SOS buttons, and modern fire suppression systems are expected to be in service by the end of April, according to Santhapriyan Kamaraj, founder of the Government Transport Enthusiasts Association.
 
   * The Cabinet Committee on Security has approved the purchase of modern artillery worth ₹7,000 crore for the military.
   
* President Donald Trump has signed documents to dismantle the US Department of Education.
 
* Swiss Open Badminton Tournament: India's Trisha-Gayatri pair advanced to the quarterfinals.
   
* National Women's Hockey Tournament: Odisha, Manipur, Haryana, and Jharkhand teams won on the 2nd day.

Covai women ICT_போதிமரம்

Thursday, March 20, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.03.2025

   

உலக காடுகள் தினம்






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:994.
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டம் உலகு.

பொருள்: முறையுடன் நன்மையை உலகத்திற்கும், தனக்கும் கருதுவாருடைய குணத்தை உலகம் போற்றும்.

பழமொழி :

Do what you can with what you have where you are.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.

பொன்மொழி :

விதைத்துக் கொண்டே இரு , முளைத்தால் மரம்....இல்லையேல் உரம்....---சே.குவேரா

பொது அறிவு : 

1. கசப்புகளின் அரசன் என்று அழைக்கப்படுவது எது? 

விடை: நிலவேம்பு.


2. நதிகள் இல்லாத நாடு எது? 

விடை :சவுதி அரேபியா

English words & meanings :

Shop keeper    -      கடைக்காரர்
 
Speaker     -         பேச்சாளர் 

வேளாண்மையும் வாழ்வும் : 

 இல்லத்தில் எவ்வாறு நீரை சேமிக்கலாம் என்று பார்ப்போம். சமையலறையிலோ, குளியலறையிலோ தண்ணீர்க் குழாயிலிருந்து நீர் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மார்ச் 21

பன்னாட்டு வன நாள் (International Day of Forests) 

பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012, நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.


உலகக் கவிதை நாள் (World Poetry Day) 

உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) 


உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) 

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.

எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.

நீதிக்கதை

 தன்னம்பிக்கை


ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.


காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.


அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.


ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.


இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.


கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.


விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.


நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும்,  விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.


நீதி :  தன்னம்பிக்கை மற்றும்

விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

21.03.2025

* 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் இல்லாத 375 ஊராட்சிகள் சேர்ப்பு: பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

* ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிராகரிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ரஜாவத் வெற்றி.

Today's Headlines

* Municipal Administration Minister K.N. Nehru informed the Assembly that 375 non-agricultural village panchayats have been included in the 100-day employment scheme.

   * The High Court has ordered that online Patta applications should not be rejected without inquiring with the applicant.

   * The Election Commission has decided to link Voter ID cards with Aadhaar.
 
   * Miami Open Tennis Tournament: Russia's Anna Blinkova has advanced to the next round.

* Swiss Open Badminton Tournament: India's Rajawat won today's match.
Covai women ICT_போதிமரம்