Sunday, January 26, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2025

 


  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

குறள் எண்:956

அதிகாரம்: குடிமை

சலம்பற்றிச் சால்புஇல செய்யார்மாக அற்ற 
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

பொருள்:
நற்குடி ஒழுக்கத்திற்கேற்ப வாழ்வோம் என்போர், பகை அல்லது வஞ்சனையின் பொருட்டு இழி செயல் செய்யார்.

பழமொழி :

சூரியன் எழு முன் காரியம் ஆடு.   

Form your plans before sunrise.

இரண்டொழுக்க பண்புகள் :   

 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

பிரியமான வேலை எதுவும் கஷ்டமானதே அல்ல -- ஹென்றி போர்ட்

பொது அறிவு : 

1. இந்தியாவில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

 பஞ்சாப்.

2.குருதிக் கொடை தருபவர்களுக்கு அக்குருதி மீண்டும் சுரக்க எத்தனை நாட்கள் ஆகும்?

 21 நாட்கள்.

English words & meanings :

 Cave.   -     குகை
 
Coast.    -   கடற்கரை

ஜனவரி 27

பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day

நீதிக்கதை

 விருப்பப் பட்டியல்


பேரரசன் நெப்போலியன் பெருங்களிப்பில் இருந்தார். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவரது நான்கு தளபதிகளையும் அழைத்து "உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினார் .

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! எனக்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றார்  நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடுசெய்வதாகக் கூறினார்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் "தனக்கு திராட்சை  தோட்டம்வேண்டும்" என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னார் .

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்றுகேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றார் .

அவன்  வெளியே வந்தவுடன், தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப்பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலைமதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்றுஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறார்.இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவர்  கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல்படுத்த அவருக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவரது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறார். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ்வேலை செய்பவர்களுக்குததான் இந்த வேலைகளைக்கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின்முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவர்  கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவர் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. 

ஆனால் நான் கேட்ட பரிசோஇப்போது என் கையில்"இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.


நீதி:அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

இன்றைய செய்திகள்

27.01.2025

* சிறப்பாக பணியாற்றிய 2 ஐஜி-க்கள் உட்பட தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

   
* பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


* உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலியின் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

* 23 people from the Tamil Nadu Police Department, including 2 IGs, have been awarded the President's Medal for their outstanding service.

* Tamil Nadu has emerged as the second-largest economic state in India, says Tamil Nadu Chief Minister M.K. Stalin.

* Indonesian President meets Prime Minister Modi: Various agreements including maritime security signed.

* The US government has decided to suspend funding for global aid programs.

* Australian Open Tennis: Italy's Gianni Cener wins the championship.

Covai women ICT_போதிமரம்

Saturday, January 25, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.01.2025

 


       






திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:342

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

விளக்கம்:

 பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்ள வேண்டும்.

பழமொழி :

சுதந்திரமே வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை .

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான் - அன்னை தெரசா

பொது அறிவு : 

1. உலகில் அதிக விலை கொண்ட விலங்கு எது? 

விடை: பந்தய குதிரை

English words & meanings :

 Beach.  -    கடற்கரை
 
 Bridge.    -     பாலம்

ஜனவரி 26

இந்தியக் குடியரசு நாள் 

* 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்

"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."

    * 12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியலமைப்பு சட்டவரைவை மக்களவையில் சமர்ப்பித்தது.

     * 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

     * அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது

இன்றைய செய்திகள்

26.01.2025

🌸நமது இந்திய திருநாட்டில் 76 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.   

🌸93 ஆயுதப்படை வீரர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இன்று வீரதீர விருதுகள் வழங்குகிறார்.  


🌸தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு 
மையம் தகவல். 


🌸சர்வதேச T20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை  அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.

Today's Headlines

🌸 The 76th Republic Day is celebrated today in our country.

🌸President Draupadi Murmu presents the Veerathira awards today to the 93  Armed Forces.  


🌸The weather forecast for two days in Tamil Nadu and Puducherry 
Center information. 


🌸Arshdeep Singh holds the record for the highest wicket -taker for India in T20 cricket.

Covai women ICT_போதிமரம்

Friday, January 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.01.2025

 

தேசிய வாக்காளர் தினம்

      






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்:955

வழங்குவது உள்விழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

பொருள்:
கொடுப்பதற்கு செல்வம் வற்றிய காலத்தும் நற்குடியில் பிறந்த பழங்குடி மக்கள் கொடைத்தன்மையை விடார்.

பழமொழி :

The bearer knows the burden.

சுமப்பவனுக்கு தெரியும் பாரம்.

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

கல்வியின் வேர்களோ கசப்பானவை, ஆனால் கனியோ இனிப்பானது-- அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

1. பறவை தீவு என அழைக்கப்படுவது எது? 

விடை: நியூசிலாந்து. 

2. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது? 

விடை :மீன்

English words & meanings :

 Air     -       காற்று
 
Bay       -     விரிகுடா

ஜனவரி 25

தேசிய வாக்காளர் தினம்

இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.

நீதிக்கதை

 மகிழ்ச்சியான பணி 


ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.


குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான்.


குயவன் "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக்கொண்டு கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போலவெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான்.


அதற்கு வைர வியாபாரி சொன்னான் "உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப்படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்..." என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.


எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.


ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.


பெரியவர் புன்னகைத்துக் கொண்டே "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார்.


அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.


"உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார்.


"எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!" பயத்துடன் பதில் சொன்னார்கள்.


"அப்படியானால், உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறைவு செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும்மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை" என்று முடித்தார்.

இன்றைய செய்திகள்

25.01.2025

* குடியரசு தின விழா: சென்னை​யில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை.

* இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்றும் நீட்டிக்கப்பட உள்ளது.

* இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியது. மத்திய தேர்தல் ஆணையம் தகவல்.

* அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராக உள்ளதாக  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

* ஹாக்கி இந்தியா லீக்: ஐதராபாத் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீரர்  ஜானிக் சினெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Republic Day: Drones banned in Chennai for 2 days

* For the convenience of the spectators coming to watch the India-England cricket match, the metro train service in Chennai will also be extended today.

* The number of voters in India is nearing 100 crores. Central Election Commission Information.

* Russian President Vladimir Putin is ready to talk to US President Donald Trump on the phone, the country's government has said.

* Hockey India League: Tamil Nadu Dragons beat Hyderabad.

* Australian Open Tennis: Italian Janic Ciner advances to final

Covai women ICT_போதிமரம்

Thursday, January 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.01.2025

 

தேசிய பெண் குழந்தை தினம்

     






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம் :குடிமை 

குறள் எண்:954

 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
 குன்றுவ செய்தல் இலர்.

பொருள்:
கோடி கோடி பொருளைப் பெற்றாலும் நற்குடியில் பிறந்தவர் இழிவான சிறுசெயல்களை செய்யார்.

பழமொழி :

சிறு வயதில் கல்வி, சிலையில் எழுத்து. 

  Learning acquired in youth , is an inscription on stone.

இரண்டொழுக்க பண்புகள் :   

*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    

*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.

பொன்மொழி :

என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள்; என் நம்பிக்கை மட்டும் எனக்குப் போதும் நான் வெற்றியடைய-- நெப்போலியன்

பொது அறிவு : 

1. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது?

 விடை:  அரேபியா.       

  2. எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது? 

விடை:  பிளாட்டினம் 

English words & meanings :

 Voice.     -    குரல்

 Whistle.      -    சீட்டி

வேளாண்மையும் வாழ்வும் : 

வேளாண் துறைக்கும் தொழில் மற்றும் நகர்ப்புற நுகர்வோருக்கும் இடையிலான நீர்வள ஆதாரங்களுக்கான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.  

ஜனவரி 24

தேசிய பெண் குழந்தை தினம்


தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.

நீதிக்கதை

 வித்தியாசமான உதவி


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டு இருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக்கண்டான். மரத்தின் மேல் சரசரவென்றுஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.


சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.


தற்செயலாக அப்போது அந்தப்பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.


பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.


பெரியவர் மேலும் ஒரு கல்லைஅவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான்.விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான்."ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.


பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.


பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்.உன் மூளை வேலை செய்யவில்லை. நான்கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.


அவனும் அவர் செய்த வித்தியாசமான உதவியை நினைத்து, ஆச்சரியப்பட்டான்.

இன்றைய செய்திகள்

24.01.2025

* மயிலாடும்பாறை அகழ்வாய்வில் தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு என்பது 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டறியப்பட்ட ஆய்வு அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

* பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் அறிவிப்பு.

* பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்.

* தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்தது.

* உலகப் பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டம்: ஏஐ சீர்திருத்தங்களுக்கு நாடுகளின் தலைவர்கள் அழைப்பு.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: லட்சயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Chief Minister Stalin released a research report that found that the use of iron in Tamil Nadu dates back 4,200 years in the Mayiladumbarai excavations

* Considering the importance of the biodiversity heritage site and the commitment of the Central Government under the leadership of Prime Minister Modi to protect traditional rights, the Union Ministry of Mines announced the cancellation of the tungsten mining auction.

* Strict punishment for sexual offences: Governor Ravi approves the amendment bill.

* The Union Cabinet meeting yesterday approved the continuation of the National Health Scheme for another 5 years and an increase in the minimum support price for jute.

* World Economic Forum Annual Meeting: Leaders call for AI reforms.

* Australian Open Tennis Tournament: Aryna Sabalenka advances to the final.

* Indonesia Masters Badminton Tournament: Lakshya Sen wins and advances to the next round.

Covai women ICT_போதிமரம்