Monday, November 25, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.11.2024

  

இந்திய அரசியல் சாசன தினம்




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்:841

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு.

பொருள்:அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம்
அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

பழமொழி :

சாது மிரண்டால் காடு இடம் கொள்ளாது. 

Even a forest will not hold their wrath when the meek are enraged.

இரண்டொழுக்க பண்புகள் :  

  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                       

  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.

பொன்மொழி :

படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு அடிப்படை கருவியாகும்

–ஜோசப் அடிசன்

பொது அறிவு : 

1. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

விடை: பன்னா. 

2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

விடை: ஜவஹர்லால் நேரு


English words & meanings :

 Grief - துக்கம்,

 Guilty - குற்ற உணர்ச்சி

வேளாண்மையும் வாழ்வும் : 

கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகளை சமாளிக்க ஒரு வழி தாவரத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதாகும். காரணம், ஆரோக்கியமான தாவரங்கள் தமது இலைப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி அரிப்புக்கு உள்ளானாலும், அவற்றால் சமாளித்துக் கொள்ள முடியும்.

நவம்பர் 26

இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக  அனுசரிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும்   இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 பெற்றோர்


ரப்பரை பார்த்து பென்சில், "ஒவ்வொரு முறையும் நான் செய்த தவறுக்கு என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய். ஆனால் என்னை சுத்தப்படுத்தும் பொழுது நீ குறைந்து கொண்டே செல்கிறாய். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று கூறியது.


 அதற்கு ரப்பர், "அது என் கடமை நான் படைக்கப்பட்டதே அதற்காகத்தான். என்னைக் கண்டு நீ வருத்தப்பட வேண்டாம். இதில் எனக்கு மிக மகிழ்ச்சியே. என்னால் உன் தவறுகள் அளிக்கப்பட்டு நீ முன்னேறிச் சென்றால்  அதுவே என் வெற்றி. நான் கரைவதை பற்றி எனக்கு கவலை இல்லை" என்று கூறியது.


அந்த ரப்பர் வேறு யாரும் இல்லை நமது பெற்றோர் தான். அவர்கள் தான் ஆயுள் முடியும் வரை நமது தவற்றை திருத்திக் கொண்டே இருப்பார்கள்.நம் மீது பொறாமை படாத உள்ளங்கள் நம் பெற்றோர்களே.

இன்றைய செய்திகள்

26.11.2024

*தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ல் கூடுகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு.

 *நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்குஇன்று ‘ரெட் அலர்ட்’: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

* எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.

* 2023-ல் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா அதிர்ச்சி அறிக்கை.

* உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆண்கள் பிரிவில் நெதர்லாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Today's Headlines

* Tamil Nadu Assembly to meet on December 9: Speaker Appavu announces.

* ‘Red alert’ for Delta districts, including Nagapattinam and Tiruvarur, was announced today by the Meteorological Department.

* Opposition parties in turmoil: Both houses of Parliament adjourned for the whole day.

* On average, 140 women and girls murdered per day in 2023: UN report in shock.

* World Chess Championship - began in Singapore yesterday.

* Italy defeated the Netherlands in the men's Davis Cup tennis category to win the championship.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, November 24, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2024

 

பிடல் காஸ்ட்ரோ

 




திருக்குறள்: 

"பால் :பொருட்பால்

 அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண் :820

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
 மன்றில் பழிப்பார் தொடர்பு.

பொருள்:
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து ,பலர் கூடிய  மன்றத்தில் பழித்துப்
 பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்."

பழமொழி :

The fearless goes into the assembly.

அச்சம் இல்லாதவர்கள் அரங்கத்தில் ஏறுவார்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :  

  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                       

  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.

பொன்மொழி :

முயற்சி என்பது விதை போல.... அதை விதைத்துக் கொண்டே இரு... முளைத்தால் மரம் இல்லையேல் அது மண்ணிற்கு உரம். - கோ.நம்மாழ்வார்.

பொது அறிவு : 

1. வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?

விடை : ரிபோபிளேவின்.        

2. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?

விடை:  ஜான் டால்டன்

English words & meanings :

 Foolishமுட்டாள்தனமான

 Gladமகிழ்ச்சி

வேளாண்மையும் வாழ்வும் : 

தீமைபயக்கும் பூச்சிகளை அழிக்க உபயோகப் படுத்த படும் கரிம மற்றும் கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் ஆகிய இரண்டுமே, அவை சுற்றுப் புறச் சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதிப்புக்களால் சர்ச்சைக்குள்ளாகின்றன.

நவம்பர் 25

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்




பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிக்கதை

 முதல் நிலை.


பேராசிரியர் ஒருவர் மூன்று கேள்விகளை கொடுத்து அதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் எழுதுமாறு மாணவர்களிடம் கூறினார். 


அதில் மிகக் கடினமான கேள்விக்கு 100 மதிப்பெண்களும், கொஞ்சம் கடினமான கேள்விக்கு 80 மதிப்பெண்களும், எளிதான கேள்விக்கு 60 மதிப்பெண்களும் தருவதாக கூறினார்.


மாணவர்களை ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து  பதில் அளிக்கக் கூறினார். தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்களில் உள்ள விடைகளை பார்க்காமல் கடினமான கேள்விகளை தேர்ந்தெடுவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தடுத்த கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை  தந்தார்.


மாணவர்களோ, "பதில்களையே பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே!  கடினமான கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்கள் சரியாக பதில் எழுதி உள்ளார்களா? என நீங்கள் பார்க்க வேண்டும் அல்லவா?"என்று கேட்டனர். 


அதற்கு அவர் "உங்கள் பதிலுக்காக நான் இந்த தேர்வை வைக்கவில்லை. உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறினார்.


 மேலும்,"கடினமாக உழைப்பவர்களே எப்பொழுதும் முதல் நிலையை அடைவார்கள் என்பதை  நீங்கள் அறியவே நான் இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறி முடித்தார்.


நீதி: விடாமுயற்சியுடன் கடின உழைப்பும் இருந்தால் எந்த கடினமான செயல்களையும் எளிதாக செய்ய இயலும்.

இன்றைய செய்திகள்

25.11.2024

* நவம்பர் 26ல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க வேண்டும்: தமிழக முதல்வர் உத்தரவு.

* குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தகவல்.

* அசாமில்   லேசான நிலநடுக்கம்: 3.8 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை.

* ஐ.எஸ்.எல். கால்பந்து; இன்றைய லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மோகன் பகான் அணி.

* ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனை படைத்தார் விராட் கோலி.

Today's Headlines

* The preamble to the Constitution must be read in government offices, schools and colleges on November 26: Tamil Nadu Chief Minister's order.

* Minister Durai Murugan informed that funds will be allocated in the upcoming budget to make the Mordhana Dam near to Gudiyatham a tourist destination.

* Mild earthquake in Assam: The National Geological Survey has reported that it has been recorded at a magnitude of 3.8Richter .

* Russian President Putin warns that countries that supply missiles to Ukraine will also be attacked.

* ISL Football; Mohun Bagan team won a huge victory by defeating Jamshedpur in today's league match.

* Virat Kohli set a world record for the foreign player who scored the most centuries on Australian soil.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, November 21, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.11.2024

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்

 




திருக்குறள்: 

"பால் :பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண்: 819

 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

பொருள்:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும்  உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் களவிலும் துன்பம் தருவதாகும்."

பழமொழி :

சத்துருக்களையும் சித்தமாய் நேசி.

  Love even your enemies heartily.

இரண்டொழுக்க பண்புகள் :  

  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  

*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.

பொன்மொழி :

முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல,  நீ நினைத்ததை முடிக்கும் வரை.

பொது அறிவு : 

1. இந்தியாவில் இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடம்

   விடை: பெரம்பூர்
             
 2.தமிழ்நாட்டில் பழுப்புநிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம் 

விடை:  நெய்வேலி 

English words & meanings :

 Energetic. -   துடிப்புள்ள,

Envy.    -     பொறாமை

வேளாண்மையும் வாழ்வும் : 

மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, தாவரத்திற்கு துணைத் தாவரங்களையும் நட்டு அவற்றின் மூலம் நோயைக் கட்டுப் படுத்தலாம்.

நீதிக்கதை

 நமது எண்ணம் 


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்  குடிக்க தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்குச் சென்றார் .


தாகத்தினால் உயிர் போய்விடுமோ என்று  நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போன்ற வீடு இருப்பதை கண்டார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த இடத்திற்கு சென்று விட்டார்.


அங்கே கையால் அடிக்கும் பம்பும், அதன் அருகில் ஒரு குவளையில் தண்ணீரும் வைக்கப்பட்டு இருந்தது. அருகே இருந்த சிறிய அட்டையில் யாரோ எதையோ எழுதி வைத்திருந்தார்கள். அதை அவர் படித்துப் பார்த்தார். அதில், குவளையில் உள்ள தண்ணீரை பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்.குடித்துவிட்டு மீண்டும் குவளையில் நீரை நிரப்பி வைத்து செல்லவும் என்று எழுதி இருந்தது.


அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா? அதிலிருந்து தண்ணீர் வருமா? என்று சந்தேகமாக இருந்தது.

அந்தப் பம்பு இயங்காவிட்டால் இந்த தண்ணீர் வீணாகி விடுமே என்றும் அவர் மனதில் நினைத்தார்.


அதுக்கு பதிலாக இந்த தண்ணீரை நாம் குடித்து விட்டால் தாகமும் தீரும். உயிர்பிழைக்கவும் உத்தரவாதம் உண்டு.அவன் யோசித்தான். தண்ணீரை குடித்து விடுவது புத்திசாலித்தனம் என்று ஒரு கணம் நினைத்தாலும், ஒருவேளை அதில் எழுதி இருந்ததைப் போல இந்த பம்ப் இயங்கும் நிலையில் இருந்து,  பம்ப் இயங்க தேவையான இந்த தண்ணீரை குடித்து விட்டால் இனி நம்மை போல தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவதற்கு தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.


அதற்கு மேல் அவர் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்த குவளையில் உள்ள தண்ணீரை பம்ப் செட்டினுள் ஊற்றி அடிக்க ஆரம்பித்தார். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர தண்ணீரை குடித்துவிட்டு அந்த குவளையையும்  நீரால் நிரப்பி வைத்த போது அவரது மனம் நிறைந்து இருந்தது.


 நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல் பயன்படும்படி விட்டுச் செல்ல வேண்டும்.எந்த நன்மையும் நம்முடன் நின்று போக விடக்கூடாது.

இன்றைய செய்திகள்

22.11.2024

* ராமேசுவரத்தில் ஒரேநாளில் 41 செ.மீ. மழை: நவம்பர் 25, 26-ல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

* சுற்றுலா மேம்பாட்டில் சிறந்த மாவட்டமாக திருச்சி தேர்வு செய்யப்பட்டு சென்னையில் ஆட்சியருக்கு விருது வழங்கப்பட்டது.

* இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பிரிவு சார்பில், நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, நாடு தழுவிய கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியான `சி-விஜில்' நேற்று தொடங்கியது.

* காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணிபுரிய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

* உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் - 1,000+ நாட்களில் இதுவே முதல் முறை.

* இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில்  வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் தொடங்கி நடைபெறுகிறது.

Today's Headlines

* 41 cm rain in one day in Rameswaram. Rain: Chances of heavy rain in Delta and Southern districts on November 25, 26.

* Trichy was selected as the best district in tourism development and the collector was awarded in Chennai.

* On behalf of the Tamil Nadu and Puducherry Naval Divisions of the Indian Navy, ``C-Vigil'', a nationwide maritime security exercise, started yesterday to strengthen the country's maritime security.

* Delhi government has ordered 50 percent of the government employees to work from home as a precautionary measure after the air pollution level crossed the dangerous level.

* Russia strikes Ukraine with ICBM - first time in 1,000+ days.

* The first Test match between India and Australia teams will be held in Perth from today (November 22)
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, November 20, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2024

  

சர்.சி.வி. இராமன்




திருக்குறள்: 

"பால் :பொருட்பால் 

அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண்:818
 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
 சொல்ஆடார் சோர விடல்.

பொருள்:
முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை , அவர் அறியுமாறு
 ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்."

பழமொழி :

சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்.

 He who has a brother does not fear to fight.

இரண்டொழுக்க பண்புகள் :  

  *என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.                  

*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.

பொன்மொழி :

பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை, தட்டிக்கொடுப்பது மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் - விவேகானந்தர்..

பொது அறிவு : 

1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 

 1914 ஆம் ஆண்டு . 

 2. உலக சமாதான சின்னம் எது ?

 ஒலிவ் மரத்தின் கிளை.


English words & meanings :

 Confusedகுழப்பமான,

 Curiousஆர்வமாக

வேளாண்மையும் வாழ்வும் : 

நோயை ஒழிக்க பூச்சிக் கொல்லிகள் உபயோகப் படுத்துவதை விட இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

நவம்பர் 21

சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

உலகத் தொலைக்காட்சி நாள் 

உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

 போட்டி


ஒரு அரசருக்கு மூன்று மகன்கள். அவர்களில் யார் கையில் அரச பதவியை கொடுப்பது என்று முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். ஆகவே அரசர் அவர்கள் மூவருக்கும் போட்டி ஒன்றை வைத்தார். 


 காட்டுக்குச் சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவினை எடுத்து வந்து  ஆளுக்கொரு ஏழைக்கு அவ்வுணவை கொடுக்க வேண்டும் என்றார் அரசர்.


 மகன்கள் மூவரும் காட்டிற்குச் சென்றனர். முதலாமவன் மரத்தின் மீது  சிரமப்பட்டு ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டையாக கட்டினான்.


 இரண்டாமவன் மரத்தின் மீது ஏற கஷ்டப்பட்டு கீழே கிடந்த அழுகிய பழங்களை  எடுத்து மூட்டையாக கட்டினான்.


மூன்றாமவன் ஏழை தானே சாப்பிட போகிறார்  என்று அலட்சியத்துடன் நினைத்து வெறும் குப்பைகளை மூட்டையாக கட்டினான்.


 மூவரும் அரசரிடம் வந்தனர். பின்பு அரசர் மூவரையும் பார்த்து, "நான் சொன்ன ஏழைகள் வேறு எவரும் இல்லை நீங்கள்தான்.

நீங்கள் கொண்டு வந்ததை இரண்டு வாரங்களுக்கு நீங்களே சாப்பிடுங்கள்" என்று கூறினார். 


நல்ல பழங்களை கொண்டு வந்த முதலாமவனே நன்றாக சாப்பிட்டு  நலமுடன் திரும்பினார். பின்னர் அரச பதவியையும் ஏற்றார்.


நீதி :  நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்

இன்றைய செய்திகள்

21.11.2024

* அரசுப் பள்ளியில் ஆசிரியர் ரமணி கொலை: சட்ட நடவடிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி.

* மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது: இதனால் மின்கட்டண செலவு குறையும்.

* இந்தியா​விலேயே காப்பு​ரிமை பதிவில் தமிழகம் முதலிடத்​தில் இருப்​பதாக தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்ற உறுப்​பினர்- செயலர் தகவல்.

* ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இஸ்ரோ செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்: குக்கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும்.

* டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரபேல் நடால்.

* புரோ கபடி லீக்; பெங்களூருவை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அபார வெற்றி.

Today's Headlines

* Govt school teacher Ramani murder: Minister Anbil Mahes promised to take legal action.

* 15,000 households have been set up with solar power plants under the central government scheme: this will reduce electricity bill costs.

* According to the member - secretary of the Tamil Nadu State Council of Science and Technology, Tamil Nadu ranks first in patent registration in India.

* ISRO satellite launch by SpaceX rocket: Villages will also get Internet facility.

* Rafael Nadal has retired from tennis.

* Pro Kabaddi League; Patna Pirates beat Bengaluru with a huge win.

 Prepared by

Covai women ICT_போதிமரம்