Tuesday, September 24, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2024

 

சதீஷ் தவான்

  




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம் :நட்பு ஆராய்தல்

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு.

பொருள்: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும்.

பழமொழி :

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. 

 A person never loses his/her nature no matter how hard-pressed.

இரண்டொழுக்க பண்புகள் :  

 * தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.                              

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும்.  எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.

பொன்மொழி :

"நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை "-----ஒரிசன் ஸ்வெட் மார்டென்.

பொது அறிவு : 

1. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?

லூயி பாஸ்டியர்

2. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?

தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்

English words & meanings :

 awful-மோசமான,

biting-கடித்தல்

வேளாண்மையும் வாழ்வும் : 

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை.

செப்டம்பர் 25

சதீஷ் தவான் அஙர்களின் பிறந்த நாள்

சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.


நீதிக்கதை

நாக்கு 


பேரரசன் ஒருவரிடம் வலிமைமிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன்  உடல் முழுவதும் வாட்கள்  கொண்ட கவசங்களால்  மூடப்பட்டிருக்கும்.

 அதன் வாலிலும் இரும்பு கொண்டு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். போர்க்களத்தில் அம்பு படாமல் இருக்க தனது தும்பிக்கையை வெளியே நீட்டாமல் நன்றாக உள்ளே சுற்றி  வைத்துக் கொள்வதற்கு பழகி இருப்பார் பாகன்.

 ஒரு நாள் போர்க்களத்தில் எதிரிப்படைக்கு பேரழிவை தந்து கொண்டிருந்தபோது,அதனுடைய  உடலில் பொருத்தப்பட்டுள்ள ஆயுதம் ஒன்று கீழே விழுந்தது. அதை எடுக்க தனது தும்பிக்கையை நீட்டியது யானை. அதைக் கண்ட பாகன் எதிரிகளின் ஈட்டி தும்பிக்கையில் படாமல் இருக்க யானையை விரைவாக போர்க்களத்தில் இருந்து வெளியில் அழைத்து வந்தார்.

 அரண்மனையில் அரசரை சந்தித்த பாகன், "அரசே இன்று போர்க்களத்தில் தான் சுருட்டி வைத்திருந்த தும்பிக்கையை வெளியே நீட்டி விட்டது யானை. எனவே, இனி போருக்கு பயன்படாது" என்று கூறினார்.

தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் வரை தான் யானைக்கு வலிமை மற்றும் பாதுகாப்பு.அதுபோல மனிதர்கள் தங்களுடைய  நாவை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் அவர்களின் சொல்லுக்கு மதிப்பு.

கோபத்திலும், வெறுப்பிலும் ஏன் சந்தோஷத்திலும் கூட வார்த்தைகளை அளந்து தான் பேச வேண்டும்.தேவையில்லாத இடங்களில்  தும்பிக்கையை யானை சுருட்டி வைத்துக் கொள்வது போல, தேவையில்லாத இடங்களில் நாமும் நாவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும். 

இன்றைய செய்திகள்

25.09.2024

* தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் முழுமையாக மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

* எஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் நிறுவன நாளை முன்னிட்டு பொதுமக்கள் அதன் ஆய்வகங்களை இலவசமாக நேரில் பார்வையிடலாம் என அதன் இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.

* மன அழுத்த மேலாண்மை பற்றி சொல்லித் தர வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.

* கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 60 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

* இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்கின்றனர், இது உலகிலேயே அதிகம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

* ஸ்பேஸ் எக்ஸ் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன் அனுப்ப எலான் மஸ்க் திட்டம்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்திய மோகன் பகான் அணி.

* மகளிர் டி20 தொடர்: நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா.

Today's Headlines

 * In all 38 districts of Tamil Nadu, the IAS officers appointed as Vigilance Officers have been completely transferred and new ones have been appointed.

 * As the Nipah virus has been detected in Kerala, the health department is conducting intensive surveillance at the checkpoints along the Kerala border in Coimbatore, Tirupur and Nilgiri districts.

 * On the occasion of the foundation day of SIR – Structural Engineering Research Centre, the director has invited the public to visit its laboratories for free.

* Union Minister Nirmala Sitharaman has urged educational institutions to teach about stress management.

 * The central government has announced that 60 new medical colleges have been set up across the country in the last one year.

*  Indian young female workers work an average of 55 hours per week, the highest in the world, according to an International Labor Organization report.

*  Elon Musk plans to send an unmanned rover to Mars with SpaceX.

 * ISL  Football Series;  Mohan Baghan's team beat Northeast United.

 *Women's T20 series: Australia whitewash New Zealand.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, September 23, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2024

   

அநுர குமார திஸ்ஸநாயக




திருக்குறள்: 

பால் பொருட்பால்

அதிகாரம் :நட்பு ஆராய்தல்

குறள் எண்:792

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

பொருள்: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.

பழமொழி :

தவளையும் தன் வாயால் கெடும். 

 Know when to keep quiet.

இரண்டொழுக்க பண்புகள் :  

 * தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.                              

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும்.  எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.

பொன்மொழி :

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வது தான் உங்கள் வளர்ச்சியின் அடையாளம். ----காமராஜர்

பொது அறிவு : 

1. இலங்கையின் புதிய ஜனாதிபதி யார்?

விடை : அநுர குமார திஸ்ஸநாயக.

2. இந்தியாவின் மிக பெரிய நதி எது.?

விடை : கங்கை 

English words & meanings :

 aching-வழியேற்படுத்தும்,

 arduous- கடினமான

வேளாண்மையும் வாழ்வும் : 

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்.

செப்டம்பர் 24

2014 – மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது

நீதிக்கதை

 கஷ்டம் 


பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா  தன்னுடைய முதுமையின் காரணமாக ஒரு நாள் உடல் வலியால் அவதிப்பட்டபோது தன்னுடைய மருத்துவருக்கு போன் செய்தார்.


 தனக்கு உடலின் வலி மிகவும் அதிகமாக இருப்பதாகவும், விரைவாக தனது வீட்டிற்கு வரும்படியும் அழைத்தார் 


 மருத்துவர், தனது மருத்துவமனையில் நிறைய நோயாளிகள் இருப்பதாகவும் அதனால் தன்னால் தற்போது வர இயலாது என்றும் கூறினார் 

மேலும், பெர்னாட்ஷாவை தன்னுடைய மருத்துவமனைக்கு வருமாறு  கூறினார்


 அதற்கு பெர்னாட்ஷா "தன்னால் எழுந்து நிற்க கூட முடியவில்லை, தனக்கு ஒரு காபி கூட தயாரிக்க இயலவில்லை,  சிறிது தூரம் கூட நடக்க முடியவில்லை" என்று கூறினார்.


 எனவே மருத்துவரும்  வீட்டிற்கு வந்தார். வீட்டின் மேல் மாடியில் இருந்த பெர்னாட்ஷாவை பார்க்க மாடிப்படி ஏறி வந்து சேர்ந்தார். முதியவர் ஆன மருத்துவருக்கு மூச்சிரைக்க,நெஞ்சை பிடித்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.


 அதை பார்த்த பெர்னாட்ஷா உடனடியாக மருத்துவதற்கு காப்பி தயாரித்துக் கொண்டு வந்து பருக கூறினார்.


காபியை பருகிய  மருத்துவர் தன்னுடைய பில் புத்தகத்தை எடுத்து 300 ரூபாய்க்கு பில் எழுதி பெர்னாட்ஷாவிடம் கொடுத்தார்.


 அதைப் பார்த்த பெர்னாட்ஷாவிடம்  "எனக்கு மருத்துவம் பார்க்க வந்த தங்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட நான்தான் பணிவிடை செய்தேன் தற்போது எனக்கே பில்  கொடுக்கிறீர்களா? என்று கேட்டார்.


 அதற்கு மருத்துவர் தங்களுக்கு வைத்தியம் பார்த்ததற்கான தான் இந்த தொகை என்றார்.

மேலும் மருத்துவர் தொடர்ந்து  "போனில் தங்களால் என்னென்ன செய்ய இயலாது என்று கூறினீர்களோ அதெல்லாம் தற்போது செய்தீர்கள் அல்லவா? தங்களால் நடக்க முடியாது என்றீர்கள் எனக்காக நடந்து சென்றீர்கள். தங்களால் காபிக்கு போட்டு குடிக்க  முடியவில்லை என்றீர்கள்.ஆனால் எனக்காக காபி தயாரித்து கொண்டு வந்தீர்கள் மேலும் சிறிது நேரம்  நிற்க முடியவில்லை என்றீர்கள் ஆனால் தற்போது  அரை மணி நேரமாக நின்று கொண்டு தான் இருக்கிறீர்கள் என்று கூறினார்.


மேலும் மருத்துவர்,"அப்போது தங்களுடைய கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள் உங்களால் முடியவில்லை தற்போது என்னுடைய கஷ்டத்தை பார்க்கும் பொழுது உங்களுடைய கஷ்டம் குறைந்து விட்டது" என்றார்.  மேலும் மருத்துவர்

இன்றைய செய்திகள்

24.09.2024

* மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வங்கி சார்பில் ஆயுள் காப்பீட்டுதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

* இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினாவில் அக்டோபர் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச காட்சி நடைபெற உள்ளது.

* பண்டிகைக் காலம் நெருங்கி வருகிற நிலையில், ரயில்களில் டிக்கெட் சோதனைக்கு என்று சிறப்புக் குழுவை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவு.

* இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திஸ்ஸநாயக

* கலப்பு தற்காப்பு கலை போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங்.

* நியூசிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி: பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக புகார்.

Today's Headlines

* The bank has introduced a life insurance scheme for the employees of the Municipal Transport Corporation. 

* Light tremors were felt in Tirunelveli and Tenkasi districts along the Western Ghats. 

* To celebrate the 92nd anniversary of the Indian Air Force, a grand air show will be held at the Chennai Marina on October 6. 

* The festive season is approaching Meanwhile, the Ministry of Railways has ordered the formation of a special committee to check tickets in trains. 

* Anura Kumara Dissanayake was sworn in as the 9th President of Sri Lanka.

 * Sangram Singh is an Indian wrestler who  won the mixed martial arts competition. 

* New Zealand women's team fined by ICC for taking too long to bowl.

 Prepared by

Covai women ICT_போதிமரம்