Sunday, July 28, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2024

  

மனு பாக்கர்




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண்:428

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

பழமொழி :

ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியே

Like God, like worshipper

இரண்டொழுக்க பண்புகள் : 

 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   

 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.

பொன்மொழி :

"முடியாது" என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டிருக்கிறார். ----அப்துல் கலாம்

பொது அறிவு : 

1. உருவத்தில் பெரிய தேனீயாக அழைக்கப்படுவது எது?

விடை: இராணித்தேனீ 

2. இந்தியாவின் மிக உயரமான அருவி எது, எங்கு அமைந்துள்ளது?

விடை: சரவாதி ஆற்றின் (ஜோக் அருவி) கர்நாடகா 

English words & meanings :


retard-தடு,

issue-பிரச்சனை

வேளாண்மையும் வாழ்வும் : 

மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது, சீலியாயிக்,சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது, உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது, ரத்தத்தில் ஹீனமோக்ளோபின் அளவினை அதிகரிக்க உதவும் மேலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

ஜூலை 29

பன்னாட்டுப் புலி நாள்

பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.[1] இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது.[2] இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.

நீதிக்கதை

 ஒருவரை உருவம் பார்த்து எடை போடக்கூடாது

அடர்ந்த காடு ஒன்றில் இருந்த குகையில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது.விலங்குகளை வேட்டையாடி வயிறு நிறைய  இறைச்சியை சாப்பிட்டு விட்டு தன் குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. 

அப்போது அந்த குகையின் ஒரு மூலையில் வசிக்கும் எலி ஒன்று சிங்கத்தின் உடலை ஒரு பாறை என்று எண்ணிக்கொண்டு, அதன் முதுகில் ஓடியாடி விளையாடியது. இதனால் சிங்கத்தின் தூக்கம் கெட்டது. 

அது கண் விழித்து எலியை பிடித்துக் கொண்டது. பிறகு அது எலியை பார்த்து “சிறிய ஏலியே, நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது என் மீது ஏறி விளையாடி என் தூக்கத்தை நீ கலைத்து விட்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார். 

உன்னை என் வாயில் போட்டு மென்று விடுகிறேன்” என்றது. எலிக்கு பயத்தால் உடல் நடுங்கியது. அது தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சிங்கத்தை பார்த்து, “சிங்கராஜா, என்னை எதுவும் செய்து விடாதீர்கள். உங்கள் உடம்பை கல் என்று நினைத்து விளையாடிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என்னை தயவு செய்து மன்னித்தால், நான் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவுகிறேன்.” என்றது. 

எலி பேசுவதை கேட்ட சிங்கம், கடகட என காடே அதிரும்படி சிரித்தது. அது எலியை பார்த்து, “எலியே, நீ பொடிப்பயல். சின்னஞ்சிறிய உடல் கொண்ட உன்னால் மலைபோல் தோற்றமும் கம்பீரமும் கொண்ட எனக்கு என்ன உதவி செய்ய முடியும்?” 

நான் இப்பொழுது வயிறு நிறைய சாப்பிட்டு இருப்பதால், உன்னை ஒன்றும் செய்யாமல் விடுகிறேன். மேலும் அற்ப உருவம் கொண்ட உன்னை நான் சாப்பிடுவதால் எனக்கு தான் அவமானம். பிழைத்துப் போ, என்று கூறிவிட்டு எலியை விட்டது. 

எலி தப்பித்தோம், பிழைத்தோம் என்று அதன் இடத்தில் சென்று புகுந்து கொண்டது. ஒரு நாள் சிங்கம் வழக்கம்போல் வேட்டையாட புறப்பட்டது. நெடு நேரமாகியும் அதற்கு இறை எதுவும் கிடைக்கவில்லை. 

அது சோர்ந்து போனது. அது வேட்டையாடிக்கொண்டே நடுக்காற்றுக்கு வந்து விட்டது. அங்கே ஓரிடத்தில் வேட்டைக்காரர்கள் மிருகங்களை பிடிப்பதற்காக வலை விரித்து வைத்திருந்தனர். 

சிங்கம் அந்த விலைக்குள் சிக்கிக்கொண்டது. காடே அதிரும்படி கர்ஜித்தது, எவ்வளவோ முயன்றும் அதனால் அந்த வலையில் இருந்து வெளியே வர முடியவில்லை. அது மீண்டும் மீண்டும் கோபத்தால் கர்ச்சித்துக் கொண்டே இருந்தது. 

இந்த சத்தம் வலையில் உறங்கிக் கொண்டிருந்த எலியின் காதில் விழுந்தது. அது உடனே விரைந்து ஓடி வந்தது. சிங்கம் சிக்கி இருந்த வலையை தன் கூர்மையான பற்களால் கடித்து சிங்கத்தை விடுவித்தது. 

அப்பொழுது சிங்கம் எலியை பார்த்து, “எலியாரே, அன்று நீ என் தூக்கத்தை கலைத்த போது உன்னை கொல்லாமல் விட்டேன். அப்பொழுது நீ தக்க சமயத்தில் உதவுவதாக வாக்களித்தாய், அப்பொழுது நான் சிறிய உருவம் கொண்ட உன்னால் பெரிய உருவமும், கம்பீரமும் கொண்ட எனக்கு என்ன உதவி செய்துவிட முடியும்?” என்று ஏளனமாக பேசினேன். 

உருவத்தில் மிகவும் சிறியவனான நீதான் இன்று என் உயிரை காப்பாற்றி இருக்கிறாய். உன் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். உன் உதவிக்கு நன்றி என்று கூறியது. 

இன்றைய செய்திகள்

29.07.2024

🌸2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். 22 வயது ஆன மனு பாக்கர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

🌸பாம்பன் செங்குத்து தூக்குப் பாலப் பணிகள் நிறைவு: அக்டோபரில் ரயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை.

🌸மேட்டூர் அணை 100 அடி நிரம்பியதை தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து  நீர் திறப்பு.

🌸பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

🌸ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குஜராத்  உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன.

🌸பழமையான பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்தியா - அமெரிக்கா இடையே கலாச்சார சொத்து ஒப்பந்தம்.

🌸பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் குரூப் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி.

🌸பாரீஸ் ஒலிம்பிக்: நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

Today's Headlines

🌸Shooter Manu Pakar has won India's first medal at the 2024 Paris Olympics. 22-year-old Manu Bhakar has become the first Indian woman to win a medal in the Olympic shooting 10m air pistol category.

🌸Pampan Vertical Suspension Bridge Completed: steps are taken to start train service in October.

🌸 Water is being released from Mettur Dam for irrigation of Cauvery Delta followed by   filling of Mettur Dam by 100ft

🌸Nirbhaya project work will be completed quickly for the safety of women, children: Tamil Nadu government informed the High Court.

🌸6 states including Gujarat have announced that retiring Agni veterans will be given reservation in government jobs in their states.

🌸India-US Cultural Property Treaty is signed to Prevent Smuggling of Ancient Artifacts

🌸Badminton — in women's singles category Indian player PV Sindhu won  the first  round  in Paris Olympic series.

🌸Paris Olympics: Indian men's hockey team defeated New Zealan
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, July 25, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2024

   

ஜார்ஜ் பெர்னாட் ஷா

  




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

அதிகாரம் : அறிவு உடைமை

குறள் எண்:427

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.

பொருள் : அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

பழமொழி :

அடாது செய்பவர் படாது படுவர்

Do evil and look for like.

இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன். 

 *மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

"வெற்றியாளர் ஒரு போதும் இழப்பதில்லை, ஒன்று வெல்கிறார்கள் அல்லது கற்கிறார்கள்" ----மகாத்மா காந்தி

பொது அறிவு : 

1.இருமுறை  நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானி யார்?

விடை: மேரிகியூரி

2. 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர் யார்?

விடை: 14-ம் லூயி

English words & meanings :

 prohibit-தடை,

 resist-தடுப்பு

வேளாண்மையும் வாழ்வும் : 

பூங்கார் கைகுத்தல் அரிசி:
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும்

ஜூலை 26

ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்களின் பிறந்தநாள்

ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஓர் அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60-இக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.

நீதிக்கதை

 மனிதர்கள் பலவிதம்


ஒரு இளைஞன் விரக்தியுடன் குருவின் முன்னால் போய்  நின்று "குருவே! இந்த உலகத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறினார்.

குரு "ஏன் என்ன ஆயிற்று?" என்று கேட்டார். 

"நான் எது செய்தாலும் அது மற்றவர்களுக்கு பிடிப்பதில்லை நான் நல்லதே செய்தாலும் மற்றவர்கள் என்னை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள்.

எனக்கு நேரமே சரியில்லை.  என்ன செய்வதென்றே தெரிய வில்லை. எனக்கு எப்பொழுது தான் நல்ல நேரம் வரும் என்று பார்த்து சொல்லுங்கள் குருவே", என்று அவரை வணங்கி நின்றான்.

பக்கத்தில் இருந்த தன் சிஷ்யனை அழைத்தார் குரு.பின்பு அந்த இளைஞனை பார்த்து உனக்கு "பிடித்த பழம் எது? பிடிக்காத பழம் எது?" என்று கேட்டார்.

"எனக்கு பிடித்த பழம் மாம்பழம்.

 தினமும் சாப்பிட கொடுத்தாலும் சாப்பிடுவேன். எனக்கு பிடிக்காத பழம் வாழைப்பழம்.கோடி ரூபாய் கொடுத்தால் கூட ஒரு பழத்தை கூட என்னால் சாப்பிட இயலாது", என்று கூறினார்

குரு சிஷ்யனிடம் "உனக்கு பிடித்த பழம் எது? பிடிக்காத பழம் எது?" என்று கேட்டார். அதற்கு சிஷ்யன் "எனக்கு பிடித்த பழம் வாழைப்பழம் எனக்கு பிடிக்காத பழம் மாம்பழம்" என்று கூறினார்.

 குரு இளைஞரை பார்த்து "இதிலிருந்து ஏதாவது உனக்கு புரிகிறதா?" என்று கேட்டார். இளைஞனோ, "எனக்கு எதுவும் புரியவில்லை"என்று கூறினார். குரு சிஷ்யனை பார்த்து "உனக்கு புரிந்ததை கூறு" என்று கூறினார் 

சிஷ்யனும் குருவைப் பார்த்து, "எனக்கு பிடித்த பழம் அவருக்கு  பிடிக்காது. அவருக்கு பிடித்த பழம் எனக்கு பிடிக்காது. அவர் என்னை மகிழ்விப்பதாக எண்ணிக் கொண்டு மாங்கனியை என்னிடம் கொடுத்தால் அது எனக்கு வெறுப்பாகவே தோன்றும்" என்று கூறினார்.

குரு இளைஞரை பார்த்து "இதுதான் உனது பிரச்சனை. உனக்குப் பிடித்த பொருளோ, முடிவோ,விஷயங்களோ மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விருப்பம் வெறுப்பும், நல்லதும் கெட்டதும் எல்லோருக்கும் ஒன்று போலவே இருப்பதில்லை".

"ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமான குணங்கள் உண்டு. நமது பிறருக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்கிறோம் நீ எதையும் உனது கோணத்திலிருந்து பார்க்கும் அறிவை மட்டுமே பெற்று இருக்கிறாய்". 

"எப்போதும் மற்றவர் கோணத்தில் இருந்து பார்த்து அதன்படி நடந்து கொண்டால் மட்டுமே நம்மை யாரும் வெறுக்க மாட்டார்கள்" என்று அறிவுரை கூறி இளைஞரை அனுப்பி வைத்தார் குரு.

இன்றைய செய்திகள்

26.07.2024

🧩தமிழகத்தில் புதிதாக 2.80 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: அடுத்த மாதம் விநியோகிக்க அரசு திட்டம்.

🧩தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

🧩புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

🧩மேகதாது திட்டத்துக்காக கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கவில்லை என்று மத்திய ஜல்சக்தித் துறை தெரிவித்துள்ளது.

🧩கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

🧩பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🧩பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று சென் நதியில் வித்தியாசமான முறையில் நடக்க உள்ளது.

🧩பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய ஸ்பெயின் அணி.

🧩டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ரோகித், பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய ஹாரி புரூக்.

Today's Headlines

🧩New Smart ration cards are issued to 2.80 lakh people in Tamil Nadu: Govt planned to distribute them next month.

🧩 Public Welfare Minister M. Subramanian has said that no one has been affected by the Nipah virus in Tamil Nadu.

 🧩Sudhu coral beads have been found in the 2nd phase of excavation at Porpanaikottai in Pudukottai district.

 🧩The Central Department of Hydropower has said that no permission has been given to the Karnataka government for the Meghadatu project.

 🧩The Supreme Court has ruled that state governments have the power to levy taxes on mineral resources.

 🧩A study conducted by Chinese and Belgian scientists has revealed that there is a possibility of diamonds in the nearest planet Mercury.

 🧩The opening ceremony of the Paris Olympics will take place today on the river Seine in a different way.

🧩 PARIS OLYMPIC FOOTBALL: Spain starts it's game with a win.

 🧩Test batsmen rankings: Rohit and Babar  Azam were  pushed behind by Harry Brook.
 Prepared by

Covai women ICT_போதிமரம்