Thursday, June 27, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2024

  

திரு.பிவி.நரசிம்ம ராவ்




திருக்குறள்: 

பால் :பொருட்பால் 

அதிகாரம்:கல்லாமை

குறள் எண் :405

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

பொருள்: கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக்கொள்ளும் மதிப்பு
( கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.

பழமொழி :

Every tide has its ebb. 

 ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :


*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

"உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது!"----- ஜாக்கிசான்

பொது அறிவு : 

1. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?

விடை: லாலா லஜபதிராய்

2. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?

விடை: ஆரியபட்டா

English words & meanings :

 candor- கள்ளங்கபடமின்மை,

frankness-வெளிப்படையாக

வேளாண்மையும் வாழ்வும் : 

உற்பத்தியினை பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற முக்கிய பணிகளை இத்துறை செய்து வருகிறது

ஜூன் 28


பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்நாள்

பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 281921 -டிசம்பர் 232004இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.

நீதிக்கதை

 யார் பொறுப்பு


ஒரு குருவும் ஒரு சீடனும் ஒட்டகத்தின் மேல் பயணம் செய்து ஒரு பாலைவனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒட்டகத்தை பராமரிப்பது சீடரின் பொறுப்பு.

 அன்று இரவு  படுக்கைக்கு சென்ற பின் தான் ஒட்டகத்தை கட்டவில்லை என்று ஞாபகம் வந்தது மிகவும் களைப்பாக இருந்ததால்  கடவுளிடம் எனது ஒட்டகத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வது தங்களின் பொறுப்பு என்று வேண்டினான்.

 மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஒட்டகத்தை காணவில்லை. குரு ஒட்டகத்தை காணவில்லை என்று சீடனை திட்டினார்.  

அதற்கு சீடன்,  "நீங்கள் கோபப்படுவதாக இருந்தால் கடவுளிடம் தான் கோபப்பட வேண்டும் ஏனென்றால் நீங்கள் தானே கடவுளை முழுமையாக நம்ப வேண்டும் என்று கூறினீர்கள்,நான் கடவுளை முழுமையாக நம்பி ஒட்டகத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை  ஒப்படைத்தேன்" என்றார்.

அதற்கு குரு கடவுள் உனக்கு உணவை கொடுக்கிறார் அதை எடுத்து உண்பது உன் பொறுப்புதானே! கடவுள் வந்து ஊட்டி விடட்டும் என்று நீ காத்துக் கொண்டிருக்கிறாயா? இல்லைதானே அதுபோல ஒட்டகத்தை கட்டி வைக்க வேண்டியது உனது பொறுப்பு. நமது கடமையை நாம் தான் செய்ய வேண்டும் அதற்கு உதவுவதை மட்டுமே கடவுள் செய்வார் என்றார் குரு.

 நமது முயற்சியை  நூறு சதவிகிதம்  கொடுத்தால் அந்த முயற்சி பலனளிக்க கடவுள் நிச்சயம் உதவுவார்.

இன்றைய செய்திகள்

28.06.2024

$ மின்னழுத்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ரூ.200 கோடி மதிப்பில் 2,500 மின்மாற்றிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் அறிவித்தார்.

$ கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க இடத்தேர்வு பணி தொடக்கம் - பேரவையில் அமைச்சர் உதயநிதி தகவல்.

$ வெளி மாநில பதிவு எண் கொண்டஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க கூடாது என்ற தமிழகஅரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

$ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு , புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் நடுத்தர தூர-நுண்ணலை மறைப்பு ராக்கெட்டை இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்தது.

$ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஜார்ஜியா அசத்தல் வெற்றி.

 $ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு: இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு.

Today's Headlines

$ Minister Thangam Thennarasu announced in the  Legislative Assembly that 2,500 transformers will be set up across Tamil Nadu at a cost of Rs 200 crore to solve the power problem.

 $ Site selection for cricket stadium in Coimbatore begins - Minister Udayanidhi informed in assembly.

$ The Supreme Court has placed an interim stay on the Tamil Nadu government's order not to operate  Omni buses with out-of-state registration numbers in Tamil Nadu.

 $ The Defense Research and Development Organization handed over the medium-range-microwave cloaking missile to the Indian Navy at a ceremony held in New Delhi yesterday.

 $ European Football Championship: Georgia thrashes Portugal in today's match

 $ Increase in prize money for Olympic medal winners: Indian Olympic Association decision.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

 

Wednesday, June 26, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2024

 

ஹெலன் கெல்லர்

 




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம் :கல்லாமை

குறள் எண்:404

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்
கொள்ளார் அறிவுஉடை யார்.

பொருள்: கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும்
அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.

பழமொழி :

Hitch your wagon to a star. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

இரண்டொழுக்க பண்புகள் :

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

" கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது!"---- காமராஜர். 

பொது அறிவு : 

1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது

2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

விடை: ஐரோப்பா

English words & meanings :

 accusation-குற்றச்சாட்டு,

reproach-கண்டித்தல்

வேளாண்மையும் வாழ்வும் : 

நமது அரசாங்கம் உழவையும் உழவர்களையும் மேம்படுத்த அதற்கென்று ஒரு தனி துறையை உருவாக்கி வேளாண்மையை பல வழிகளில் ஊக்குவித்து வருகிறது.

ஜூன் 27

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்

ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 271880 - ஜூன் 11968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.  

பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்




பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கதை

 அன்பை விதையுங்கள்


ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்கி செல்வார். பழங்களை எடை போட்டு அதற்குரிய தொகையை செலுத்திய பின்பு அதிலிருந்து ஒரு பழத்தை எடுத்து பிரித்து வாயில் வைத்துவிட்டு  "என்ன பழங்கள் புளிப்பாக இருக்கிறது"  என்று புகார் கூறி அந்த பழத்தை பாட்டியிடம் கொடுத்து சாப்பிடக் கூறுவார்.

உடனே பாட்டி ஒரு  சுளையை எடுத்து வாயில் போட்டுவிட்டு  "இல்லை தம்பி சுவையாக தானே இருக்கிறது" என்பார். உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த  அவரது மனைவி அவரிடம்  "ஏங்க! பழம் இனிப்பாக தானே இருக்கிறது ஏன்? அந்தப் பாட்டியிடம் தினமும் குறை கூறுகிறீர்கள்"? என்று கேட்டார் 

அதற்கு அந்த இளைஞன்  சிரித்துக் கொண்டே மனைவியிடம் அந்தப் பாட்டி சுவையான பழங்களை தான் விற்கிறார்கள் ஆனால் ஒரு பழத்தைக் கூட அவர்கள் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் தற்போது  நான் குறை கூறுவதால் அதை வாங்கி  காசு இழப்பின்றி  சாப்பிடுகிறார்கள் என்று கூறினார்.

 அருகில் இருந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்த காய்கறி வியாபாரி அந்த இளைஞன் தினமும் உங்கள்  பழத்தைக் குறை கூறுகிறார்  இருந்தும் நீங்கள் ஏன் எடை அதிகமாக போட்டு அவருக்கு பழத்தை கொடுக்கிறீர்கள் என்றார்.

  அதற்கு அந்தப் பாட்டி புன்னகையுடன், "அவன் என்னை ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காக தினமும் குறை கூறுகிறான்.  மேலும் நான் எடையை அதிகமாக போடவில்லை அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்து விடுகிறது அவ்வளவுதான்"  என்றார் அன்போடு.

அன்பை விதையுங்கள் அன்பையே அறுவடை செய்யுங்கள் .

இன்றைய செய்திகள்

27.06.2024

# அரசுப் பள்ளிகளுக்கான வங்கிக் கணக்குகள் பராமரிப்பு தொடர்பாக தொடக்கக் கல்வித் துறையின் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

# டிஎன்பிஎஸ்சி குரூப் 1-ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

# தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

# ஜம்மு காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகர், ‘உலக கைவினை நகரம்’ என்று அங்கீகரிக்கப்படுவதாக உலக கைவினை கழகம் அறிவித் துள்ளது. 

# தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு: காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதில் தாமதம்.

# கென்யாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள வன்முறை போராட்டம் காரணமாக இந்த அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

# பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு.

# கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி.

# டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்.

Today's Headlines

# The instructions of the Department of Elementary Education regarding the maintenance of bank accounts for government schools have been published.

 # Chief Minister Stalin issued appointment orders to 95 candidates selected for various posts including Deputy Collector, Deputy Superintendent of Police in TNPSC Group 1.

 # Chance of heavy rain in 6 districts of Tamil Nadu today: Chennai Meteorological Center Information.

 # Srinagar, the capital of Jammu and Kashmir, has been recognized as the 'World Handicraft City' by the World Handicrafts Association. 

#  Karnataka refuses to release water to Tamil Nadu: Cauvery Management Authority delay in taking decision.

 # The Indian Embassy in Kenya has advised Indians in Kenya to be cautious.  This alert has been given due to the violent protest there.

 # Paris Olympics: Indian Men's Hockey Team Announced

 # Copa America: Argentina beat Chile and won

 # T20 rankings: Australian player Travis Head overtakes Suryakumar Yadav to the top .
 Prepared by

Covai women ICT_போதிமரம்