Wednesday, October 25, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.10.2023

   

சுறா மீன்

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

விளக்கம்:

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

பழமொழி :

Every ass loves his bray

காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.

2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம்.

பொது அறிவு :

1. நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்–

 சுறாமீன்.

2. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடு - 

ஜப்பான்

English words & meanings :

 kempt(adj)- கெம்ப்ட்- clean தூய்மையான. kudos(n)-குடூஸ்- praise பாராட்டு

ஆரோக்ய வாழ்வு : 

முருங்கைப் பூ: முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக்  கோளாறுகள் நீங்கும்.

நீதிக்கதை

 ஓர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர். இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, புதையலைத் தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றான்.. தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழும் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான். அதுவரை வியாபாரத்தின் மீது முழுக் கவனம் செலுத்திய அவன் புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான். புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது. அதனால் ஏமாற்றம் அடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் உன்னிடம்," இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதை விட்டு. இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் துயரம் தான்" ஏற்படும் என்றார். ஆம்... பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது. குடிசையில் வாழ்ந்து கூழைக் குடிப்பவர்கள் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அவர்கள் பொருளாதார நிறைவைப் பொருட்படுத்தாது மனநிறைவோடு வாழ்கிறார்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.

இன்றைய செய்திகள்

26.10.2023

*இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா வரும் 27ஆம் தேதி நடக்கிறது. குடியரசு தலைவரின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை- டிஜிபி அலுவலகம் 

*இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவருக்கும் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த விருதான தேசிய பதக்கம் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.

* தமிழகத்தில் வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.

*என்சிஇஆர்டி - இன் கீழ் தயாரிக்கப்படும் புத்தகங்களில் இனி "இந்தியா" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரத்" என்ற வார்த்தையே இடம் பெறும்.

*ஆப்கானிஸ்தானிடம் தோல்வி எதிரொலி கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாமை நீக்க வலியுறுத்தல்.

Today's Headlines

*The 8th Convocation of Indian Maritime University will be held on 27th.  No change in President's visit to Chennai - DGP office

 *Two people of Indian origin have received the National Medal of Science and Technology, America's highest award.  Presented by US President Joe Biden.

 * Northeast Monsoon strengthening in Tamil Nadu - Chennai Meteorological Centre.

 * In the books produced under NCERT, the word "India" will now be replaced by the word "Bharat".

 *Defeat echoes in Afghanistan, calls for removal of Babar Azam from captaincy.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, October 24, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2023

   

சிப்கோ இயக்கம்

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

விளக்கம்:

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.


பழமொழி :

Even homer nods

யானைக்கும் அடி சறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.


2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்.- இந்தியா

பொது அறிவு :

1. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்-

 பகுகுனா.

2. ஐரோப்பாவின் விளையாட்டு  மைதானம் -

 சுவிட்சர்லாந்து.

English words & meanings :

jumble –an untidy collection or pile of things.தாறுமாறாகக் கலைந்து இருப்பது.
jockey –a person who rides horses professionally in races.
குதிரைப் பந்தயத்தில் குதிரை ஓட்டுபவர்

ஆரோக்ய வாழ்வு : 

சங்கு பூ கூந்தலுக்கு சிறந்தது, இதில் உள்ள அந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

நீதிக்கதை

 ஒரு கிராமத்தில் அனில், சுனில் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு அவர்கள் ரயில் வண்டி மூலம் பயணித்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஓர் கைக் கடிகாரத்தை வாங்க திட்டமிட்டனர்.

ஓர் இளைஞன் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த கடிகாரங்கள்       என்று காண்பித்து கடிகாரங்கள் தங்கத்தினால் ஆனது என்றும் கூறினார்.

அனிலுக்கு அந்தக் கடிகாரம் மிகவும் பிடித்து விட்டது, அதை உடனடியாக வாங்க ஒப்புக்கொண்டான். அந்த கடிகாரத்தை வாங்க வேண்டாம் என சுனில் அனிலிடம் பல தடவை கூறினார். சுனிலின் மறுப்புறைக்கு அனில் கவனம் செலுத்தாமல் அனில் அந்த கடிகாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கினான். சில நாட்களுக்குப் பின்னர் அந்த கடிகாரத்தின் முள் நின்று விட்டது, அனில் அந்த கடிகாரத்தை பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் சென்ற போது அந்த கடிகாரம் தங்கத்தினால் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் ஏமாற்றப்பட்டார் என்றும் பழுது பார்ப்பவர் அது தங்கமல்ல என கூறினார்.அவனுடைய முட்டாள்தனமான செயலால் அவசர முடிவை டுத்ததை நினைத்து அவருடைய நண்பனின் பேச்சை கேட்காதது நினைத்தும் மிகவும் வெட்கப்பட்டார் அனில்.

நீதி:

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

இன்றைய செய்திகள்

25.10.2023

*14 வயதான ஹேமந்த் என்ற அமெரிக்க மாணவன் புற்றுநோயை குணப்படுத்தும் 'சோப்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இளம் விஞ்ஞானி என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

*ஆம்னி பஸ்கள் அறிவித்து இருந்த வேலை நிறுத்தம்
வாபஸ்.

* 414 வது ஆண்டு தசரா விழா: சாமுண்டீஸ்வரி ஊர்வலத்தை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

* புயல் அதிதீவிரமாக மாறியது. வங்கதேசத்தில் இன்று கரையை கடக்கும்.

*டி ஹாக் அதிரடி சதம்: 382 ரன்களை குவித்தது தென் ஆப்பிரிக்கா.

* முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பெடி மரணம்.

Today's Headlines

*A 14-year-old American student named Hemant has invented a 'soap' that cures cancer.  Everyone is praising him as a young scientist.

 * Omni Buses announced strike
 withdrawal

 * 414th Dussehra Festival: Lakhs flock to witness Chamundeshwari procession.

 * The storm became intense.  It will cross the shores today in Bangladesh.

 *De Kock action century: South Africa scored 382 runs.

 * Former spinner Bishan Singh Bedi passes away.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



Thursday, October 19, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.10.2023

       




திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :282

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

விளக்கம்:

அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.



பழமொழி :

Empty vessels make the greatest noise

குறை குடம் கூத்தாடும்

இரண்டொழுக்க பண்புகள் :


1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன். 

2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள். செல்வந்தர்கள் பசியைத் தேடுகிறார்கள்.-- கிரீஸ்

பொது அறிவு :

1. புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்? 

பல்லவர் கால கல்வெட்டுகள்

2. புற்று நோய் உட்பட எந்தநோயுமே வராத ஒரே உயிரினம் –  

சுறாமீன் .

English words & meanings :

 illustrious (இல்லஸ்ட்ரஇயஸ்) - widely known or esteemed புகழ்பெற்ற.imbibe(இம்பைப்)-take in liquids உள்வாங்குதல்

ஆரோக்ய வாழ்வு : 

சங்குப்பூ : சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். வாந்தி உண்டாக்கும். பேதியைத் தூண்டும். தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்

அக்டோபர் 20

ஆனி சலிவன் அவர்களின் நினைவுநாள்

ஆனி சலிவன் (Anne Sullivan) (1866 ஏப்ரல் 14 - 1936 அக்டோபர் 20 ) இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார்.    கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார். எலனை இவர் சந்தித்த கணத்தில் இருவருக்குமிடையே அற்புதப் பிணைப்பு மலர்ந்தது. 49 ஆண்டு காலம் நீடித்த இந்த மகத்தான உறவில் முதலில் எலனுக்கு இவர் ஆசிரியராகவும், பின்னர் நல்ல துணையாகவும் இறுதியில் நண்பராகவும் மாறினார். கண் பார்வையற்ற, காது கேளாத, பேசும் திறனும் அற்ற குழந்தையான ஹெலனுக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் w-a-t-e-r என்று மீண்டும் மீண்டும் எழுதி மனதில் அறியவைத்தார்.[5] அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது. ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் புடையெழுத்து (பிரைய்லி (Braille) முறையையும் கற்றுக்கொடுத்தார். ஹெலன் ரெட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரை அவருக்கு இவர் உறுதுணையாக நின்றார். எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்காட்லாந்து சலிவனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது. டெம்பிள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்கள் (Harvard University) கவுரவப் பட்டங்களை வழங்கின. இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் நாள் 70-வது வயதில் காலமானார்.

நீதிக்கதை

 ஒரு பெரியவரிடம் ஐயா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன். “ என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர். "மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான் "உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான்" என்றார் பெரியவர், "அப்படியா சொல்கிறீர்கள்?" "ஆமாம்!" "அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" "மனதைப் புரிந்து கொள்... அது போதும்," "எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன், "இந்தக் கதையைக் கேள் என்று அவர் சொன்னார் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது, இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிற போது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது

இன்பமுமில்லை... துன்பமுமில்லை...' - என்று அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். "மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்!!...

இன்றைய செய்திகள்

20.10.2023

*"ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 1200 பேர் இந்தியா வருகை- மத்திய அமைச்சகம் தகவல்.

*மகாத்மாவின் தொலைநோக்கு பார்வையே சமூக ஒற்றுமை மற்றும் சமத்துவம் முன்னோக்கி செல்வதற்கான வழி: ஜனாதிபதி முர்மு.

*ஆயுத பூஜை தொடர் விடுமுறை: பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை மற்றும் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்ல  1000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு.

*தென்மேற்கு பருவக்காற்று விலகி விட்டது.  இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை.

*உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா- வங்காளதேசம் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி.

Today's Headlines

* So far 1200 people from Israel have come to India through "Operation Ajay" - Union Ministry Information.

 * Mahatma's for seeing vision is for the forwardness of social unity and equality: President Murmu.

 *Ayudha Puja holiday: Metro train service and 1000 special buses from Chennai to outlying areas will be arranged for the convenience of passengers.

 * The southwest monsoon has departed.  The Northeast Monsoon starts within 3 days.

 *India won the  World Cup cricket  match between India-Bangladesh

 Prepared by

Covai women ICT_போதிமரம்