Thursday, February 23, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.02.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

பொருள்:
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்

பழமொழி :

A closed mouth catches no flies

நுணலும் தன் வாயால் கெடும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

ஒழுக்கம் உள்ள மனிதன் பெருந்தன்மையும் மரியாதையும் கலந்த சொற்களையே பேசுவான். ஜேம்ஸ் ஆலன் 

பொது அறிவு :

1. உலகிலேயே மிகச் சிறிய நாடு எது? 

 வாடிக்கன்

 2. உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது எது?

 ஐ.நா. சபை.

English words & meanings :

ablate - remove. verb. நீக்குதல். வினைச் சொல். the tumour is removed surgically by a best doctor

ஆரோக்ய வாழ்வு :

இலந்தைப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. விட்டமின் ஏ, விட்டமின் சி ,கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை. அதோடு டயட்ரி ஃபைபர் என்னும் நார்ச்சத்து நிறைந்த பழம் இது. இதில் கிட்டத்தட்ட 18 அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் மன அமைதி பெறுவதோடு நரம்பு மண்டலமும் அமைதியாக இருக்கும்.

NMMS Q

கால்நடைகளுக்கு வாய் மற்றும் குளம்பு நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரி__________ 

விடை: ஆப்ரோவைரஸ்

பிப்ரவரி 24


ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்




ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 241955- அக்டோபர் 5, 2011ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.[12] 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் திங்கள் அதிகாலை அவர் உயிரிழந்தார்.[

நீதிக்கதை

ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்திவிட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுரு இந்த குற்றச் சாட்டை அரசவைக்குக் கொண்டுவந்து, மன்னனையும் தூண்டி விட்டார். 

ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இதற்கு மன்னிப்பே கிடையாது. எனவே மன்னர் ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார். உடனே ராஜகுரு தெனாலிராமனை மண்ணில் கழுத்து வரை புதைத்து விட்டு, யானையின் காலால் தலையை மிதித்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்புவழங்கினார். மன்னரும் அப்படியே செய்யுங்கள் என்றார். 

உடனே காவலர்கள் தெனாலிராமனை காட்டுக்குள் ஒற்றை அடிப்பாதை வழியாக இழுத்துச் சென்று. ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டனர். பின் யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்றனர். 

தெனாலிராமன் தப்பிச் செல்ல வழிதெரியாமல் மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது. அய்யா! என்று அழைத்தார். அந்த மனிதன் அச்சத்துடன் வந்தார். பயப்படாதீர்கள்... ! இங்கே வாருங்கள் என்றான். ராமனின் அருகே அமர்ந்தார். யாரைய்யா உம்மை மண்ணுக்குள் புதைத்தது? என்றார். 

இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் முதுகு வளைந்து கூனனாகியிருப்பதை அறிந்த இராமன், அவரிடம் சாமர்தியமாகப் பேசினான். அய்யா! நானும் கூனந்தான். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். அதன்படி நானும் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். 

என்னைத் தூக்கி விடுங்கள், என் கூன் நிமிர்ந்து விட்டதா என்று பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. என்றான். கூனனும் இராமனை வெளியே எடுத்தார். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தார். 

அதை உண்மையென நம்பிய கூனன், தன்னையும் மண்ணில் புதைக்கும்படி கேட்டார், தன் கூனல் நிமிர வழிசெய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். தெனாலிராமனும் மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடுக்குச் சென்றான். 

யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த கூனனை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.

இன்றைய செய்திகள்

24.02.2023

* இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாவிட்டால் கிராம உதவியாளர் நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

* உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெறவுள்ளன.

* சென்னை, புறநகரில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: ரூ.12 ஆயிரம் வரை பரிசோதனைக்காக செலவிடும் மக்கள்.

* இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல்களை தடுக்க ஸ்மார்ட் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்.

* பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தையை சேர்ப்பதற்கு 6 வயது இருக்க வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

* '3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை’ - வியப்பில் இஸ்ரேல் ஆய்வாளர்கள்.

* ஐ.நா. பொதுச் சபையில் இன்று கொண்டு வரப்படும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் - இந்தியாவுக்கு உக்ரைன் அரசு கோரிக்கை.

* 20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்.

Today's Headlines

Cancellation of appointment of village assistant if reservation system is not followed: High court warns.

* Tamil Nadu Government has decided to release the Tamil Nadu State Women's Policy on International Women's Day, March 8. It included various aspects related to women's development and security.

* Rapidly spreading viral fever in suburbs of Chennai: People spend up to Rs 12 thousand for testing.

* Intensification of construction of smart fence along India-Pakistan border to prevent infiltration.

* The child should completed 6 years to enroll  in the first standard  – Central Government order to the states.

* 'Brain surgery 3000 years ago' - amazed Israeli researchers.

* The decision against Russia should be supported by India in today's  UNO's General Assembly. Ukraine's request to India 

* 20 Over Cricket Batting Rankings - Suryakumar Yadav tops.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, February 22, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

பொருள்:
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

பழமொழி :

The only jewel which will not decay is knowledge

அறிவு மட்டுமே அழியா அணிகலம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

காலம் உனது உயிராகும். அதை வீணாக்குவது உன்னை நீயே இழப்பதற்குச் செய்வதற்கு ஒப்பாகும்.ஜேம்ஸ் ஆலன் 

பொது அறிவு :

1. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது? 

 அரேபியா .

 2. மிகப்பெரிய தேசியக்கொடி உள்ள நாடு எது?

 டென்மார்க்.

English words & meanings :

abduct - kidnap, take some one by force. verb. கடத்துதல். வினைச் சொல். The child was kidnapped for money. 

ஆரோக்ய வாழ்வு :

யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

NMMS Q

செயற்கை வகைப்பாட்டு முறை எப்பன்பினை அடிப்படையாகக் கொண்டு தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டது.

விடை :இனப்பெருக்கம், புறத்தோற்ற பண்பு , தாவரங்களின் வாழ்வு காலம்

பிப்ரவரி 23


சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்




சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது

நீதிக்கதை

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால், தெனாலிராமன் இருந்தால் நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விடுமோ, என எண்ணி தெனாலிராமனை மட்டும் உள்ளே விட வேண்டாமென்று வாயிற்காவலளியிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார். 

ஆனால் தெனாலிராமன் எப்படியாவது உள்ளே சென்று விடவேண்டும். என தீர்மானித்துக் கொண்டான். உள்ளே செல்ல முற்பட்ட தெனாலிராமனை, வாயிற்காவலளி தடுத்து நிறுத்தி விட்டான். இந்நிலையில் தெனாலிராமன் ஐயா, என்னை உள்ளே செல்ல அனுமதித்தால் என் திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன் என்றான். இதைக் காவலாளி முதலில் சம்மதிக்காவிட்டாலும், பிறகு சம்மதித்துவிட்டான். இதைப் போல் இன்னொரு வாயிற் காப்போனும் சம்மதித்துவிட்டான். 

பிறகு தெனாலிராமன் ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே சென்று ஓர் மூலையில் அமர்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

உடனே தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் அணிந்தவனை கொம்பால் அடித்தான். இதைப்பார்த்த மன்னர் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை ஏன் இவ்வாறு செய்தாய் என்றார். 

அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்றான். இதைக் கேட்ட மன்னர், தெனாலிராமன் மீது கடும்கோபம் கொண்டு 30 கசையடி தருமாறு உத்தரவிட்டார். 

இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு தர வேண்டாம். எனக்குக் தர வேண்டியப் பரிசை ஆளுக்குப் பாதியாக, தருகிறேன், என்று நம் இரண்டு வயிற்காப்போன்களிடம் வாக்கு கொடுத்துவிட்டேன் என்றான். 

அதனால் இந்த பரிசை, அவர்கள் இருவருக்கும் சமமாக பங்கிட்டுத் தாருங்கள் என்றான். உடனே மன்னர் அவ்விருவரையும் அழைத்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டாதால் அவர்கள் இருவருக்கும் தலா 15 கசையடி தருமாறு உத்தரவிட்டார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்.

இன்றைய செய்திகள்

23.02.2023

* சென்னையில் நில அதிர்வு நிகழ்ந்ததாக நில அதிர்வு ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.

* நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2 நாட்களில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில் சென்னையில் மேலும் 200 அதிநவீன தானியங்கி ஏஎன்பிஆர் கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.

* இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

* இந்தியாவுக்கு ரூ.2.07 லட்சம் கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஆர்வம்.

* மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் வட கொரிய மக்கள் தவித்துவரும் சூழலில், அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் "மக்கள் உணவுக்காக வெளிநாட்டு உதவியைப் பெற்றால், அது விஷம் தோய்ந்த மிட்டாயை உண்பதற்கு சமம்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் தங்கம் வென்றுள்ளார்.

* சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.

Today's Headlines

* The National Seismological Center and the India Meteorological Department said that no earthquake in Chennai was reported to the Seismological Center.

 * Minister M. Subramanian has said that an explanation will be given to the Ministry of AYUSH in 2 days regarding the exemption from NEET examination.

 * 200 more state-of-the-art automated ANPR cameras are to be installed in Chennai to accurately capture vehicle number plates and issue fines.

* 1.2 Lakh One-Teacher Schools in India - Shocking Information in Survey

 * Asian Development Bank keen to lend Rs 2.07 lakh crore to India

 * With the North Korean people suffering from severe food shortages, a message issued by the country's state media warned that "if people receive foreign aid for food, it is equivalent to eating poisoned candy."

* Shooting World Cup: India's Rudrangsh Patil wins gold

 * Indian tennis player Sania Mirza retires from international tennis.

 * ICC Test Rankings: England's James Anderson advances to No.1
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 21, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.02.2023

   திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அடக்கம் உடைமை

குறள் எண் : 130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

பொருள்:
;கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

பழமொழி :

Action speaks louder than words.
சொற்களை விட செயல்கள் வலிமை வாய்ந்தவை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

மனதை உற்சாகப்படுத்து. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படு; அதைரியமூட்டுபவர்களை அருகில் விடாதே. ஜேம்ஸ் ஆலன் 

பொது அறிவு :

1. இமயமலை எந்த நாடுகளைப் பிரிக்கிறது?

 இந்தியா -திபெத் . 

 2.தங்கப் போர்வை நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?

 ஆஸ்திரேலியா.

English words & meanings :

dirty ant - pollutant

ஆரோக்ய வாழ்வு :


பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.

- ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.

NMMS Q

வகைப்பாட்டியல் என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்


விடை :அகஸ்டின் பைரமிஸ் டி கேடண்டோல்


பிப்ரவரி 22


ராபர்ட் பேடன் பவல் பிரபு அவர்களின் பிறந்தநாள்




ராபர்ட் பேடன் பவல் பிரபு (Robert Baden-Powell) (பெப்ரவரி 221857 - ஜனவரி 81941சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.

இளைஞர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது. 1920 இல் முதலாவது உலக சாரணிய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது அவர்களின் நினைவுநாள்




மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmedஇந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்துமுசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

நீதிக்கதை

யார் ஏழை?

ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளை கிராமத்தை சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். இரண்டு நாள் ஒரு குடிசையில் ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க. திரும்ப வரும் போது, அப்பா கேட்டார்,

ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே? மகன் சொன்னான் ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு. ஆனால் அவங்க கிட்ட நாலு இருக்கு. 

நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல், கார்டன்ல நடுவிலே இருக்கு. ஆனால் அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது. நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம். ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது... நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது. ஆனால் அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.

நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம். ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க. நம்மை பாதுக்காக்குறதுக்கு நம்மை சுற்றி சுவர் மட்டும் தான் இருக்கு... ஆனால் இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க.. அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வைத்ததற்கு நன்றி அப்பானு சொன்னான். அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.

இன்றைய செய்திகள்

22.02.2023

* 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம்: மார்ச்.5, 6-ல் மதுரை மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.

* ‘பிட்ஸ் ஏர்’ நிறுவனம் சார்பில் புதிய சலுகைகளுடன் கொழும்பு-சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது.

* தமிழக மீனவர்கள் 6 பேரை தாக்கிய இலங்கை நாட்டினர் மீது எடுங்கள்:மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்.

* கேபிள் துருப்பிடித்திருந்ததால் மோர்பி பாலம் அறுந்தது - விசாரணை குழு அறிக்கையில் தகவல்.

* உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கிய செயல், இந்தியா குறித்த உலகின் பார்வையை மாற்றிவிட்டது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

* துருக்கி - சிரிய எல்லையில் 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் - இந்தியாவிலும் அதிர்வு.

* நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: மக்கள் கிளர்ச்சியால் பதற்றம்.

* பெண்கள் டி 20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி.

* முதல் டிவிசன் கால்பந்து போட்டி:எம்.ஆர்.சி. அணி சாதனை.

* அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 'சாம்பியன்'.

Today's Headlines

* 'Chief Minister in Field Survey' programme: Chief Minister Stalin's survey in Madurai region on 5th and 6th March.

 * Bits Air has launched a new flight service between Colombo and Chennai with new offers.

 * Take on the Sri Lankans who attacked 6 Tamil Nadu fishermen: Tamil Nadu Chief Minister's letter to the Union Minister of External Affairs.

 * Morbi Bridge collapses due to cable rusting - Information in inquiry committee report.

 * External Affairs Minister S. Jaishankar has said that the act of providing vaccine to the world has changed the world's view of India.

*  6.3-magnitude earthquake strikes again on Turkey-Syria border - Tremors also in India.

 * Demonetization in Nigeria: Tensions fueled by popular unrest.

 * Women's T20 World Cup: Indian team qualifies for semi-finals

 * First Division Football Tournament: MRC  Team record.

 * Argentina Open Tennis: Spain's Algarz 'Champion'
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்