Sunday, January 29, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

பொருள்:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்

பழமொழி :

இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.

To say today; tomorrow, indicates refusal.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.

பொன்மொழி :

மனிதன் செல்வம் ஈட்டும் இயந்திரமாக அன்றி, சமுதாய முன்னேற்றத்தின் கருவியாகவும் இருக்க வேண்டும்.

பொது அறிவு :

1. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்? 

 தாம்சன்

 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது ?

 இந்தியா.

English words & meanings :

stair – step. noun. படிக்கட்டு. stare - to look at steadily. verb. உற்று நோக்கு. வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

100 கிராம் நறுக்கிய வெங்காயத்தில்
கலோரிகள் - 75
புரதம் - 2.5 கிராம்
கொழுப்பு - 0கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் - 17 கிராம்
நார்ச்சத்துக்கள் - 3 கிராம்
கால்சியம் - 3%DV
இரும்புச் சத்து - 7%DV
மக்னீசியம் - 5%
பாஸ்பரஸ் - 5% DV
பொட்டாசியம் - 7% Dv
துத்தநாகம் - 4% DV
ஃபோலேட் - 9% DV
இதில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க், காப்பர், போலேட், வைட்டமின் பி, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

NMMS Q

6 இன் வர்க்கத்துடன் எந்த எண்ணின் கனத்தைக் கூட்டினால் 10,000 இன் வர்க்கமூலம் கிடைக்கும்?

 விடை : 4

ஜனவரி 30


மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள் 



மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்Mohandas Karamchand Gandhiகுசராத்திમોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. (ஆங்கிலம்Mohandas Karamchand Gandhiகுசராத்திમોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

நீதிக்கதை

ராமன் மற்றும் பேசும் கிளி

யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன். ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள். கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். இந்தக் கிளி பேசும் கிளி என்றான்.

ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான். ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை. அதை அவன் எடுத்துக்கொண்டு. தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.

அந்த வியாபாரியோ, அந்தக் கிளியை வாங்கி பரிசோதிப்பது போல பாசங்கு செய்து இந்த கிளிக்கு காது கேட்காது. அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டும் அந்த கிளியால் பேச இயலவில்லை என்று சொல்லி வேறு ஒரு கிளியைக் காட்டி இதை வாங்கிக் கொள்ளுங்கள் இது பேசும் என்றான்.

ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான். அதுவும் பேசவில்லை. அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.

உடனே அந்த நண்பர் அடடா! என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே! அந்த வியாபாரி ஒரு பொய்யன். பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு என்றான்.

ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து அது சாத்தியமா. என யோசித்து செயல்படவேண்டும்.

இன்றைய செய்திகள்

30.01.2023

* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பின் போது 14 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் வரித்தலை வாத்து தென்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் பிப்ரவரி 1-ம் தேதி வருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு.

* பிப்ரவரி 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.4 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும், உள்நாட்டு ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா  சோதனை செய்துள்ளது.

* நியூசிலாந்தில் வெள்ளம்: 3 பேர் பலி; ஆக்லாந்து நகரில் அவசரநிலை பிரகடனம்.

* உலக கோப்பை ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

Today's Headlines

* According to the officials, during the bird survey conducted in Pallikaranai marshland, a flying Mallard duck was seen at a height of 14 thousand feet.

 * A team of officials inspected Mamallapuram ahead of the arrival of G20 conference delegates on February 1.

 * Chance of heavy rain in delta districts on February 1: Chennai Meteorological Department information.

* According to the Union Ministry of Health and Family Welfare, a total of 220.4 crore corona vaccine doses have been administered so far under the nationwide vaccination drive.

* India has test-fired an indigenous hypersonic missile that can travel 5 times the speed of sound.

* Floods in New Zealand: 3 dead;  Emergency declared in Auckland city.

* Hockey World Cup: India beat South Africa to finish 9th

 * Australian Open Tennis: Djokovic wins the title.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, January 26, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் எண்: 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

பொருள்:
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்

பழமொழி :

Don’t measure the worth of a person by their size.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 

2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.

பொன்மொழி :

ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால், ஓயாமல் மனதோடு போராட வேண்டும்.

பொது அறிவு :

1. குங்கும பூவில் அதிகமாக காணப்படுவது எது? 

ரிபோபுளோவின். 



2. தவளையின் தோல் எத்தனை அடுக்குகளை கொண்டது? 

இரண்டு அடுக்குகள்.

English words & meanings :

rap - a sharp knock. noun. verb. தட்டுதல். பெயர்ச் சொல். வினைச் சொல். wrap- enclose with paper or soft material. verb. noun. சுற்றி கட்டுதல். பெயர்ச் சொல். வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் உள்ள மற்றொரு சத்து மாங்கனீசு ஆகும். மாங்கனீசு எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. எனவே ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோயை தடுக்க மொச்சை பயிறு உதவுகிறது. கால்சியம் குறைப்பாட்டை போக்கி எலும்பின் வலிமைக்கு உதவுகிறது.

NMMS Q

200 மற்றும் 300 ஆகிய எண்களின் வர்க்கங்களின் கூடுதலில் உள்ள பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை---------- 

விடை: 4

நீதிக்கதை

கடவுள் கொடுத்த வரம்

அருண் ஆறாம் வகுப்பு மாணவன். அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர். பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார். எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.

ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான். தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான். கடவுள் அவன் முன்னால் தோன்றி அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன். ஆனால் யோசித்துக் கேள் என்றார்.

அருண் உடனே இறைவா. நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும் என்றான். அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார். உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது. அப்பா, அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.

அருணுக்கு பசி எடுக்க. அம்மா உணவு எடுத்து வந்தார். அருண் உணவில் கை வைக்க அது பணமானது. தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அதுவும் பணமானது. பசியால் வாடிய அருண். அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான். மீண்டும் இறைவனை வேண்டினான்.

இறைவன் தோன்ற, அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படியும் தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான். உடன் இறைவன் அருணைப்பார்த்து அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும் நோயற்ற வாழ்வும் தான் செல்வம். அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது என்று கூறி அவனுக்கு அவ்விரண்டையும் அருளினார்.

இன்றைய செய்திகள்

27.01.2023

* அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் (CRZ) அனுமதி அளித்துள்ளது.

* அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் 15 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கல் கருவி படிமம் கண்டெடுப்பு: மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை பேராசிரியர் தகவல்.

* மாநிலக் கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கொள்கைவடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

* இருதரப்பு உறவை பலப்படுத்த உறுதியான நடவடிக்கை: இந்தியா-எகிப்து 5 ஒப்பந்தம் கையெழுத்து.

* உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.

* மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

* சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* The Coastal Regulatory Zone (CRZ) has given its go-ahead to the Public Works Department's plan to widen and dredge the Adyar river estuary.

*  Discovery of 15 lakh-year-old stone tools at Varanavasi message by Ariyalur district Professor of Department of Epigraphy, Central University.

* Justice Murugesan, chairman of the policy formulation committee, said that a draft report containing recommendations for the state education policy would be submitted to the Tamil Nadu government by April.

 * A concrete step to strengthen bilateral relations: India-Egypt signed in 5 agreements.

* Chief Justice DY Chandrachud has announced that the Supreme Court judgments will be translated into 4 regional languages ​​including Tamil and uploaded on the court website from August 15.

 *A five-day curfew has been announced in the North Korean capital following the rise in respiratory-related illnesses.

 * Indian player Manika Patra has moved up to the 33rd position in the international table tennis rankings.

* Australian Open tennis: Djokovic, Sabalenka advance to semi-finals

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 25, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 

பொருள்:
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.


பழமொழி :

It is better to plough deep than wide.

அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 

2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.

பொன்மொழி :

வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்றுப் பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான். 

பொது அறிவு :

1.அடகாமா பாலைவனம் எங்கு உள்ளது ? 

தென் அமெரிக்காவில். 

2. டில்லி நகரை வடிவமைத்தவர் யார்? 

எல் லுட்யன்ஸ்.

English words & meanings :

pray - addressing a prayer to God. verb. வழிபடு. வினைச் சொல். prey - an animal that is killed for food. noun. இரையாகும் விலங்கு. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

உடலுக்கு தேவையான ஆற்றலுக்கு வைட்டமின் பி அவசியமானது. மொச்சை பயிறில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.

இரத்த சோகை போன்ற இரும்புச் சத்து குறைப்பாட்டை போக்குகிறது. எனவே உடல் எப்பொழுதும் சோர்வாக இருப்பவர்கள் மொச்சை பயிறை தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம். இந்த மொச்சை பயிறில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

NMMS Q

√75 + √12 - √27 - இன் மதிப்பு கீழ்கண்ட எதற்கு சமமானது? 

a) √60. b) √114. c) √32. d) √48.

 விடை : √48

ஜனவரி 26


இந்தியக் குடியரசு நாள் 





1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்[3]:

"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."

12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.[3][4]

1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

நேர்மையான பிச்சைக்காரர்

ஒரு மன்னனுக்கு ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். அதை சோதிப்பதற்கு ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும், மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான். 

நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக்கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப்பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர். உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன். 

அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர். சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாகவும், தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான். ஆனால், அந்தப் பிச்சைக்காரன், இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக்கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர். 

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், கடவுளின் அருளால் வைரக்கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன், பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து, மேலும் பல பரிசுகளும் வழங்கினான். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்தப் பணத்தில் வியாபாரம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார்.

இன்றைய செய்திகள்

26.01.2023

* உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* வட சென்னையில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான வருவாயை இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

* டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, சாலை, தெருக்களில் திரண்டனர்.

* ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐநா வலியுறுத்தியுள்ளது.

* நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா - சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்.

* முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்:  வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி  இந்திய அணி 2-வது வெற்றி. 

* உலகக் கோப்பை ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்.

Today's Headlines

* The Madras High Court has quashed the order issued by the Commissioner of Food Safety banning Gutka, Pan Masala, and other tobacco products under the Food Safety and Quality Act.

 * Chief Minister M. K. Stalin has ordered the allocation of funds to construct a sports complex in North Chennai at an estimated cost of Rs. 9.70 crores.

 * Minister P. Murthy has said that the revenue of the commercial tax and registration department has increased to Rs.1.17 lakh crore, surpassing the revenue till March of last year in January of this year itself.

*  The earthquake occurred in Delhi, Uttar Pradesh, Uttarakhand, Bihar, Haryana, and Rajasthan.  As the vibrations were felt in the houses and buildings, panicked people came out and gathered on the roads and streets.

 * The United Nations has urged the Taliban, the country's rulers, to lift the ban on girls' education in Afghanistan.

 * India beat New Zealand to clinch the series and climb to the top spot in the ODI rankings.

*  Trilateral Women's 20 Over Cricket: India beat West Indies for 2nd win.

 * Hockey World Cup: Belgium beats New Zealand to enter semi-finals
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்