Monday, July 25, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2022

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண் : 994

குறள்:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

பொருள்:
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.

பழமொழி :

A crafty fellow never has any peace.
குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 

2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்

பொன்மொழி :

இளமைக் காலத்தில்
கல்வியை புறக்கணித்தவன்
எதிர்கால வாழ்வை இழந்தவன்
ஆகிறான்.

பொது அறிவு :

1.விஷக்கொசுக்கள் எங்கே விருத்தியாகின்றன ?

புதர் செடி, சதுப்பு நிலம் . 

2.மாட்டின் வயதை அறிவது எப்படி ?

 பற்களைக் கொண்டு.

English words & meanings :

endosymbiosis - en·do·sym·bi·o·sis - symbiotic association of one living organism living inside another one, noun. உள்ளுறை கூட்டுயிராதல். பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு

NMMS Q 32:

3 மற்றும் 5 ஆகிய எண்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஈரிலக்க எண்களின் எண்ணிக்கை : 

விடை: 4. விளக்கம்: 35 ,53, 33, 55

ஜூலை 26

ஜார்ஜ் பெர்னாட் ஷா 




ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஓர் அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60-இக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.

நீதிக்கதை

அன்புக்கு அடிமை

ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக்கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே, அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து திரும்பி வந்து விட்டாள். மறுநாள் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைந்தது. ஆனாலும் திரும்பிவிட்டாள். அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப்பெண் மனம் குழம்பிப் போனாள். முனிவர் கூறினார். இனி உனக்கு மூலிகை தேவையில்லை. புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய் அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா? என்ன?

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள். நம் பயங்களும், சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத்தடையாக இருக்கக்கூடாது

இன்றைய செய்திகள்

26.07.22

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு உருமாறிய ஒமைக்ரான் தொற்று பாதிப்பு .

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில் ஏழைகளின் கனவு நிறைவேறும்; அதற்கு நானே சாட்சி' - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் முதல் உரை.

கலிபோர்னியாவை வதைக்கும் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்.

குரங்கு அம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில். இதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்நாவெக்ஸ் (Imnavex) என்று பெயரிடப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் பயிற்சி போட்டி: இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததில் சாதனை.

ஐ.எஸ்.எல். கால்பந்து : ஆஸ்திரேலிய வீரரை ஒப்பந்தம் செய்தது பெங்களூரு அணி.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் வெற்றி: 34 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய அணி.

Today's Headlines

 Tamil Nadu has the highest incidence of Omicron infection in India.

 Bicycles Scheme for 11th Class Students: Launched by Chief Minister Stalin.

 More than a thousand people participated in a remarkable run in Chennai to raise awareness of the 44th Chess Olympiad in Mamallapuram.

 The dream of the poor in India will come true;  I am witness to that' - President Draupadi Murmu's first speech.

 California wildfires: Thousands evacuated

 The World Health Organization has declared monkey measles as an international medical emergency.  A Danish pharmaceutical company has produced the first vaccine against this.  It is named Imnavex.

 Chess Olympiad Practice Tournament: Achievement in Webcast Live

 ISL  Football: Bengaluru team signed an Australian player.

 Winning against West Indies: Team India breaks 34-year-old record

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, July 24, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2022

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண் : 991

குறள்:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்:
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

பழமொழி :

A bad day never hath a good night.


முதல் கோணல். முற்றும் கோணல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 

2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்

பொன்மொழி :

கல்வி என்பது
பல மூட்டை நூல்களை
வாசிப்பது இல்லை..
அடக்கம்.. ஒழுங்கு.. அறம்..
மற்றும் நீதி இவற்றின்
முன்மாதிரி ஆகும்.!

பொது அறிவு :

1.மனிதனின் கைவிரல் அடையாளத்தை போன்று இருப்பது எந்த விலங்கில்? 

உராங் உட்டான்.

 2. பனிச்சிறுத்தை எங்கு வசிக்கின்றது? 

இமயமலை பிரதேசத்தில்.

English words & meanings :

Dwarf - a person of unusually short stature, Adjective, சித்திரகுள்ளன். பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

பச்சை தங்கம் என்று கூறப்படும் கொத்தமல்லி சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. உடல் நலத்திற்கு பல அறிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை கொத்தமல்லி இலை.

NMMS Q 31:

RATION என்ற சொல்லைக் கொண்டு எழுத்துக்களின் வரிசை மாறாமலும் ஓர் எழுத்தை ஒரே முறை பயன்படுத்தி உருவாக்கப்படும் சொற்களின் எண்ணிக்கை : 

விடை: 5. விளக்கம்: RAT, AT, ON ,ION, RATIO

ஜூலை 25


ஜிம் கார்பெட் 




புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 251875ஏப்ரல் 191955இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர். குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார். 1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.

நீதிக்கதை

புத்திசாலி அம்மா

ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தான். 

பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து, நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள், என்ற கடிதம் வந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள், போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது, ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. 

நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவள் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள். 

சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்த அவள் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள், இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன். 

நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக்கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள். 

இதைக்கேட்ட புலி நடுங்கி, ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது. 

நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது. 

இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்கேயாவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள், அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம் என்றது நரி. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி. 

அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது. 

மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும், புலியின் வாலும் ஒன்றாகக் கட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய் எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள். 

புலி பயந்துபோனது, நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே, என்னை ஏமாற்றி கூட்டிவந்து விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது. 

வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ, ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள். 

நீதி :
எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.

இன்றைய செய்திகள்

25.07.22

◆ தமிழகம் முழுவதும் நாளை போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்.

◆ சேலம் அருகே கொளத்தூரில் மின் வேலியில் சிக்கி  யானை உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை.

◆ டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி: இந்தியாவில் 4 பேருக்கு பாதிப்பு.

◆ 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை - மக்களவையில் மத்திய அரசு தகவல்.

◆ உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

◆ உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்க உக்ரைன் - ரஷ்யா இடையே ஒப்பந்தம்.

◆ உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

◆ தேசிய சீனியர் கபடி: கால்இறுதியில் தமிழகம்.

◆ 2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது இங்கிலாந்து.

Today's Headlines

 ◆ Tamilnadu Transport Corporation workers will protest across Tamil Nadu tomorrow.

 ◆ Elephant dies after getting caught in the electric fence at Kolathur near Salem: Forest department officials investigate.

 One person was confirmed with monkeypox in Delhi: 4 people were affected in India.

 ◆ 4 crore people have not received even a single dose of the vaccine - the Union government informs Lok Sabha.

 The World Health Organization (WHO) has declared the spread of monkey measles an international public health emergency.

 Agreement between Ukraine - Russia to eliminate the shortage of food products.

 India's Neeraj Chopra won the silver medal in the javelin event at the World Athletics Championships.

 National Senior Kabaddi: Tamil Nadu in quarter-finals.

 England bowled out South Africa in the 2nd ODI.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, July 21, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2022

 திருக்குறள் :

குறள் எண் – 989

பால் – பொருட்பால்

இயல் – குடியியல்

அதிகாரம் – சான்றாண்மை

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.


விளக்கம்:

சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.


பழமொழி :

He that blows in the dust falls on his own eyes
சேற்றிலே கல்லெறிந்தால் நம்மேல் தான் தெறிக்கும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய் 

2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்

பொன்மொழி :

உன்னிடம் பணம் இருந்தால் நீ ஒரு நாயை வாங்கி விட முடியும் ஆனால் அதன் வாலை நீ அசைக்க வைக்க வேண்டுமென்றால் நீ அதனிடம் அன்பை செலுத்தினால்தான் முடியும்.....ரமண மகரிஷி

பொது அறிவு :

1.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும்? 

200 லிட்டர்

2.பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? 

தும்பி.

English words & meanings :

cal·cu·lus - a method of calculation. Noun. நுண் கணிதம். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சோயா துண்டுகள் நன்மை பயக்கும்.

சோயா துண்டுகளில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

NMMS Q 30:

டாஸ்மேனியா ________ தீவு என்று அழைக்கப்படுகிறது? 

விடை: ஆப்பிள்

ஜூலை 22


பை நாள்

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன  என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக  ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).

பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் ( யின் பரவலாக அறிந்த அண்ணளவு ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

 நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது[1]லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.[2]

பை நாள் கொண்டாடப்படும் நாட்கள்[தொகு]

நீதிக்கதை

சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்

அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். 

கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி. 

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. 

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம். 

குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுதிரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி. 

மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி. 

நீதி :
நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

இன்றைய செய்திகள்

22.07.22

🌸44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி:சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்க உள்ளது

🌸 கோவையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக தங்கள் சொந்த பயணத்தில் விமானத்தில் பயணம் செய்த 41 மலைவாழ் பழங்குடியினர்

🌸 சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌸 ஊட்டியில் கனமழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

🌸 குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவரானார்  திரெளபதி மர்மு.

🌸 சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 'காவல் உதவி' செயலியின் பயன்பாடு குறித்து ஒரு நாள் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

🌸ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் கோலிக்கு 4வது இடம்.


🌸ஆசியக் கோப்பை 2022 கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடிய சூழ்நிலை என இலங்கை அரசு அறிவிப்பு.

Today's Headlines

🌸44th Chess Olympiad: Tamil Nadu Tourism Development Corporation to run free bus from Chennai to Mamallapuram

 🌸 41 hill tribes who flew from Coimbatore to Chennai for the first time on their own journey

 🌸Chennai: The Chennai Meteorological Center has said that there is a possibility of widespread rain and heavy rain at a few places in Tamil Nadu for 2 days.

 🌸 Heavy rains in Ooty affect the normal life of people.

 🌸 Tirelapathi Marmu became the 15th President of the country by getting the most votes in the presidential election.

 🌸 CHENNAI: A day-long special awareness program was held in Chennai on the use of the 'Police Help' app in schools, colleges and public gathering places.
 
  🌸I.C.C.  Kohli is ranked 4th in the ranking list.


 🌸Sri Lankan government has announced that they  couldn't host the Asia Cup 2022 cricket tournament due to situation
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்