The river cuts rock not by the power, but by persistence.
ஆறு கல்லை உடைப்பது வலிமையால் அல்ல, தொடர்ச்சியால் தான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.
2 இயற்கை சமநிலை காப்பேன்.
பொன்மொழி :
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். உங்கள் கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது ,உங்கள் வாழ்க்கையை அழகாக்கி விடும்- டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்
பொது அறிவு :
"01.திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது?
'ஒள'
02. இந்தியாவின் முதல் பெண் ரயில்வே அமைச்சர் யார்?
மம்தா பானர்ஜி
Mamata Banerjee
"
English words :
Set off - start a journey
பயணம் தொடங்குதல்
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
உலகில் கடந்த 30 ஆண்டுகளில் சராசரி கடல் நீர்மட்டம் 2.5 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்டிகோ உள்ளிட்ட கடலோர நகரங்கள், கடல் நீர்மட்ட உயர்வால் பாதிப்பை சந்திக்கும். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர் என 'நாசா' ஆய்வு எச்சரித்துள்ளது. 2015 - 2023ல் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது.
நீதிக்கதை
இரண்டு தேவதைகள்!
நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர்.
அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர்.
அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.
அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர்.
அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.
இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.
தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது.
அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.
நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment