![]() |
மகாத்மா ஜோதிபா புலே |
இயல்: குடியியல்
குறள் எண்:1009
அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
பொருள்:
அன்பின்றி அறம் செய்யாது சேர்த்த பொருளை எடுத்துக் கொள்வார் யாரோ?
No sweet without sweat
வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை.
இரண்டொழுக்க பண்புகள் :
* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன்.
* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல் எழுதுவேன்.
பொன்மொழி :
நேற்றிலிருந்து கற்றுக்கொள் ,இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை மட்டும் நிறுத்தாதே.---ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
பொது அறிவு :
1. காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
விடை: தமிழ்நாடு.
2. இந்தியாவில் அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
விடை : குஜராத்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
நீர் சேமிப்பு உத்திகளில் ஒன்று மழைநீர் சேகரிப்பு ஆகும்.குளங்கள், ஏரிகள், கால்வாய்களை துார்வாருதல், நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்துதல், மழைநீர் பிடிக்கும் குழாய்கள் மற்றும் வடிகட்டும் அமைப்புகளை வீடுகளில் நிறுவுதல் ஆகியவை மழைநீரை சேகரிக்கும் வெவ்வேறு முறைகளாகும்.
ஏப்ரல் 11
நீதிக்கதை
குரங்கு அறிஞர்
ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.
”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.
”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.
”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.
அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.
அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
”குரங்கை வெளியே அனுப்புங்கள்" என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும்
அது தொந்தரவு தராதவாறு
நான் பார்த்துக் கொள்கிறேன்!”
அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது.
பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். ”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.
அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.
“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.
அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.
அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment