கலிலியோ கலிலி |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்
குறள்:357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
விளக்கம்:
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.
Never cross a bridge till you come to it
வரும் முன் செலவு செய்யாதே.
இரண்டொழுக்க பண்புகள் :
1 . மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும்.2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.
பொன்மொழி :
சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பு மற்றும் அக்கறையே போதுமானது. --ஜாக்கி சான்
பொது அறிவு :
1.நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?
2.உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
பசலை கீரை : வெள்ளை பசலைக் கீரையை நம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் மூத உடல் சூட்டை குறைக்கின்றது.வாயில் ஏற்படக்கூடிய புண், கடுப்பு, எரிச்சல் போன்றவையும் மிக விரைவில் குணமாகின்றது.
பிப்ரவரி 15
நீதிக்கதை
மரமும் கிளியும்
வேடன் ஒருவன் மான் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். அவன் தன்னுடைய அம்பில் விஷம் தடவியிருந்தான். காட்டில் புகுந்து மானைத் தேடிக் கண்டுபிடித்து அம்பை எய்தினான். ஆனால் வேடனின் குறி தவறியது. மான் தப்பி ஓடியது. வேடனின் விஷம் தோய்ந்த அம்பு, அடர்ந்த பெரிய மரத்தில் பாய்ந்ததும், அதன் இலைகளும் காய்களும் உதிர்ந்தன. ஒரு சில நாட்களிலேயே மரம் பட்ட மரமாயிற்று.
மரப் பொந்துகளில் வசித்து வந்த பறவைகள் பறந்து போய்விட்டன. ஆனால் ஒரே ஒரு கிளி மட்டும் மரத்தின் மீதே அமர்ந்திருந்தது. அது உணவு தேடிப் பறந்து செல்லவில்லை. வருத்தமும் பசியும்
அதனை வாட்டிய போதும் அந்தக் கிளி, பட்ட மரத்தினைப் பிரிந்து செல்லவில்லை.
கிளியின் நிலையை அறிந்த,கடவுள் அதன்மீது இரக்கம் கொண்டார். நல்ல அறிவுரைகள் கூற நினைத்து, பூவுலகம் வந்தார். பட்ட மரத்தினருகே சென்றார்.
"கிளியே, இந்த மரத்தில் இலைகளோ காய்களோ இல்லை. இது எவ்விதத்திலும் உனக்குப் பயன் தராது. இந்தக் காட்டில் எத்தனையோ பெரிய மரங்கள் அடர்ந்து செழித்து இருக்கின்றன. அங்கே போய் இருப்பதை விட்டு விட்டு, நீ ஏன் இந்தப் பட்ட மரத்திலேயே அமர்ந்திருக்கிறாய்?" என்று கடவுள் கிளியிடம் கேட்டார்.
கிளி கடவுளைப் பார்த்துக் கூறலாயிற்று.
"இந்த மரத்தினைப் பிரிந்து செல்லுமாறு என்னிடம் தயவு செய்து கூறவேண்டாம் கடவுளே. நான் பிறந்தது இம்மரத்திலேதான். வளர்ந்ததும் விளையாடி மகிழ்ந்ததும் இங்குதான். இந்த மரம்தான் என்னை வெய்யில், மழை இவற்றிலிருந்து காத்து வந்தது. உயிர் பயமின்றி இங்கே இருந்து வந்தேன். இன்று இந்த மரம் உலர்ந்து பயனற்றுப் போயிருக்கலாம். ஆயினும் இதுநாள் வரை எனக்களித்தவற்றை நான் மறக்கலாமா? இதனை விட்டு விட்டுச் செல்ல மாட்டேன்.
கிளியின் உயர்ந்த உள்ளத்தை கடவுள் உணர்ந்தார். மகிழ்ந்தார்.
"கிளியே, உன் நற்குணத்தை மெச்சுகிறேன். நீ விரும்பிய வரத்தைக் கேள்" என்றார்.
கிளி உடனே. "நான் விரும்புவதெல்லாம், இந்த மரம் மீண்டும் தழைத்துச் செழிக்க வேண்டும் என்பதுதான்" என்று வேண்டியது.
கடவுள் கிளியின் விருப்பத்தைக் கேட்டு மனம் நெகிழ்ந்தார். மரத்தின் மீது அமிர்தத்தைத் தெளித்தார். உடனே அந்த மரத்தில் முன்பு போல இலைகளும் காய்களும் தோன்றி, பசுமையாகத்
தோற்றமளித்தது. இதைக் கண்டதும் கிளி மகிழ்ச்சியுடன் சிறகையடித்துக் கிளை கிளையாகத்
தாவியது.
துன்பம் வரும் காலத்திலும் தொடர்ந்து வந்து துணை செய்பவர்களே உண்மையான உறவினர் ஆவார்.
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு" என்பது ஒளவையார் அருளிய மூதுரையாகும்.
துன்பம் வந்த காலத்திலும் விலகிச் செல்லாமல் சேர்ந்து இருப்பவர்களே நல்ல உறவினர்களாவார்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment