முத்தமிழ் காவலரின் நினைவு தபால்தலை |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள்:323
.ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
விளக்கம்:
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.
It is easier to destroy than to create
அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்
இரண்டொழுக்க பண்புகள் :1
1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.
2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்
பொன்மொழி :
ஒரு கதவு மூடப்படும்
போது இன்னொரு
கதவு திறக்கிறது.
ஆனால் பல நேரங்களில்
நாம் மூடிய கதவின்
நினைவிலேயே
இருப்பதனால்..
திறந்த கதவுகள் நம்
கண்களுக்கு தெரிவதில்லை.
பொது அறிவு :
1. உலகின் மிகச் சிறிய பறவை எது?
2. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
இலுப்பை பூ : தலைமுறைகளை கடந்தும் இலுப்பை மரங்கள் பயன்தரக்கூடியது. இலுப்பை எண்ணெய், பூக்கள் கொட்டைகள் மரபட்டைகள் என இம்மரத்தின் ஒவ்வொரு பாகமுமே, பெறும் பயன் தரக்கூடியது.
டிசம்பர் 19
கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நினைவுநாள்
கி. ஆ. பெ. விசுவநாதம் (10 நவம்பர் 1899 - 19 திசம்பர் 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, என அழைக்கப்படுபவர், தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
- 2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது.[6]
- 1997ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது
நீதிக்கதை
கரடி சொன்ன ரகசியம்
இரண்டு நண்பர்கள் காட்டு வழியே சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே ஒரு கரடி வந்தது. இரண்டு நண்பர்களில் ஒருவனுக்கு மரம் ஏறத் தெரியும். மற்றவனுக்குத் தெரியாது.
கரடியைப் பார்த்தவுடன் மரம் ஏறத் தெரிந்தவன் மரத்தில் வேகமாக ஏறி ஒளிந்து கொண்டான். ஏறத் தெரியாதவன் கரடி தன்னைக் கொன்று விடும் என்று பயந்து தரையில் விழுந்து விட்டான்.
கரடி அவனருகே வந்து அவனை முகர்ந்து பார்த்தது. அவன் தன் சுவாசத்தை நிறுத்தி விட்டு பிணம் போல கிடந்தான். பிணத்தைத் தின்னும் பழக்கமில்லாத கரடி அவனை விட்டு விட்டு வேறு பக்கம் திரும்பிப் போனது.
கண் பார்வையில் இருந்து கரடி மறைந்ததும் மரத்தில் இருந்தவன் இறங்கிக் கீழே வந்தான். நண்பனிடம் சென்று "அந்தக் கரடி உன் காதில் என்னவோ சொன்னதே, என்ன சொன்னது ?" என்று கேட்டான்.
அதற்குக் கீழே கிடந்தவன், 'ஆபத்து வரும் போது , தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று உன்னை விட்டு விட்டு ஓடிப் போகும் நண்பனோடு ஒரு போதும் பயணம் செய்யாதே!' என்று அந்தக் கரடி எனக்குப் புத்தி சொன்னது என்றான்.
நீதி : ஆபத்தில் உதவும் நண்பனே நல்ல நண்பன். அப்படி இல்லாத சுய நலமான நட்பை, நாம் விட்டு விட வேண்டும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment