டாக்டர். முத்துலட்சுமி |
திருக்குறள் :
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: புகழ்
குறள் :239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
விளக்கம்:
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.
பழமொழி :
Be friendly but not familiar
அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே
இரண்டொழுக்க பண்புகள் :
1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
சுயராஜ்ஜியம் என்பது எனது பிறப்பு உரிமை. அதை நான் பெறுவேன் - பால கங்காதர் திலக்
பொது அறிவு :
1. தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
2. கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி விதை : கொத்தமல்லி விதைகள் கெட்ட கொழுப்பை குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
மேலும் இவற்றில் செம்பு, துத்தநாகம், இரும்பு மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.
நீதிக்கதை
காட்டில் ஒரு சிங்கம்,
ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.
உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.
சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது
.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,
''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.
அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment