Thursday, August 31, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2023

       




திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : புலால் மறுத்தல்

குறள் :251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

விளக்கம்:

தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.

பழமொழி :

Blood is thicker than water

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

உங்களை கையாள, உங்கள் மூளையை பயன்படுத்தவும்; மற்றவர்களைக் கையாள, உங்கள் இதயத்தைப் பயன்படுத்தவும்.” – எலினோர் ரூஸ்வெல்ட்

பொது அறிவு :

1. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?

விடை: கல்கத்தா பல்கலைக்கழகம்

2. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 1 லட்சத்து 55 ஆயிரம்

English words & meanings :

 Cho-ke - become unable to breathe when something stuck in the throat or you cannot breathe, verb. மூச்சடைக்கப்படுதல், வினைச் சொல். The flowers were choked by the weeds.

ஆரோக்ய வாழ்வு : 

 உளுத்தம் பருப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

நீதிக்கதை

ஒரு கிராமத்தில் மழை இன்மையால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் தண்ணீர் பஞ்சம் போக்க என்ன செய்யலாம் என்று யோசித்து ஊரின் வாலிபர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து இருக்கும் கிணறுகளை ஆழமாக வெட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் படியே நான்கு குழுவினரும் கிணறுகளை ஆழமாகத் தோண்டினர். எனினும், அவற்றில் நீர் சுரப்பதற்கான அறிகுறியே இல்லை. அவர்கள் அனைவரும் களைத்துப் போய் விட்டனர்; நீரைக் காணாது சோர்வும் அடைந்தனர். நேரம் ஆக ஆக அவர்களின் நம்பிக்கை குறையவே, மூன்று குழுவினர் கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டனர். ஆனால், ஆலன், ஆறுமுகம், முகமது, டேவிட் ஆகிய நால்வரும் முயற்சியைக் கைவிடவில்லை. அவர்கள் மனவுறுதியுடன் தொடர்ந்து தோண்டினர். ஊர்மக்களோ"நீர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

மேலே வந்துவிடுங்கள்; என்று வேண்டினர். அவர்கள்  நால்வரும்  தோண்டிய  கிணற்றில் திடீரென்று நீர் ஊற்று தென்பட்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அந்த நால்வருக்கும் மக்கள் நன்றி கூறினர். எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்கக் கூடாது என்ற மன உறுதிதான் வெற்றிக்கு வழிவகுத்தது.

இன்றைய செய்திகள்

01.09. 2023

*நிலவின் அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் - இஸ்ரோவின் புது அப்டேட். 

*இந்திய ரயில்வேயின் முதல் பெண் தலைமை நிர்வாகி ஆகிறார் ஜெயவர்மா.

* இனி அக்டோபர் "இந்து பாரம்பரிய" மாதமாக கொண்டாடப்படும்: அமெரிக்க மாநிலத்தில் தீர்மானம்.

* செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை அரசாணை வெளியீடு.

*இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு..5 ஆண்டுகளுக்கு அம்பானி கையில்...

* 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது - பாகிஸ்தான் அணி புதிய சாதனை.

Today's Headlines

* Vikram Lander recorded the vibrations of the Moon - ISRO's new update.

 *Jayavarma becomes the first woman Chief Executive of Indian Railways.

 * October to be observed as "Hindu heritage" month from now on: Resolution in US state.

 * Vinayagar Chaturthi Holiday Ordinance on 18th September GO released.

 * Broadcasting of Indian team's cricket matches..5 years in Ambani's hands...

 * Pakistan beat Nepal by 238 runs - a new record.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, August 30, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2023

      

மரியா மாண்ட்டிசோரி

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

விளக்கம்:

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

பழமொழி :

Blessings are not valued till they are gone

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள் உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை
நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்

– அன்னை தெரசா

பொது அறிவு :

1. நீல மலைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: நீலகிரி

2. தமிழ்நாட்டின் முக்கடல் சங்கமிக்கும் இடம் எது?

விடை: கன்னியாகுமரி

English words & meanings :

 Fahrenheit - a scale of temperature
வெப்பத்தை அளக்கும் கருவி, வெப்பமானி
டேனியல் காபிரியல் ஃபாரன்ஹீட் எனும் டச்சு நாட்டின் விஞ்ஞானி பெயரால் அழைக்கப் படுகிறது.

Fake - false one. பொய்யான

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.

ஆகஸ்ட்31

மரியா மாண்ட்டிசோரி  அவர்களின் பிறந்தநாள் 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 311870 – மே 61952இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 61907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். 

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

நீதிக்கதை

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக்கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.

நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

31.08. 2023

*ஒத்திகை ஓவர்: விண்ணில் பாய தயாராகிறது ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி. சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பாக ஆதித்யா- எல் இயங்கும். இந்தியாவிற்கே இது ஒரு புது முயற்சி ஆகும்.

*உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் 12 வருடங்களாக பூமிக்கடியில் 11 அறைகளுடன் இரண்டு மாடி வீட்டை கட்டியுள்ளார்.

*தண்டவாள சீரமைப்பு பணியால் அரக்கோணம் - சென்னை ரயில்கள் ரத்து.

*2030 ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்.

*உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு.

*யூ. எஸ். ஓபனில் மோசமான தோல்வியை சந்தித்தார் - வீனஸ் வில்லியம்ஸ்.

Today's Headlines

*Rehearsal over: Aditya L-1 ISRO is in action getting ready to fly.  Aditya-L will operate as an observatory to study the Sun.  This is a new initiative for India.

 *In Uttar Pradesh, a man spent 12 years building a two-storey house with 11 rooms underground.

 *Arakkonam-Chennai trains were canceled due to track maintenance work.

 *Air pollution in Chennai to increase by 27 percent by 2030- study informs.

 * World Cup chess tournament silver medalist
 Pragnananda received a grand welcome at the Chennai airport.

 *U.  S.  Worst loss in Open - Venus Williams.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, August 29, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2023

     

வாரன் எட்வர்ட் பஃபெட்


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :248

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

விளக்கம்:

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.


பழமொழி :

Bitter is patience but sweet is its fruit

பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு

இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

தயங்குகிறவன் கை தட்டுகிறான் துணிந்தவன்

கை தட்டல் பெறுகிறான்

ஜான் கென்னடி

பொது அறிவு :

1. தமிநாட்டின் எஃகு தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: சேலம்


2. கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: தஞ்சாவூர்

English words & meanings :

 bedraggled - wet or drenched and untidy. Adjective. மிகுதியான ஈரத்தோய்வுடன் மாசு படிந்த. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு: கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

ஆகஸ்ட்30

வாரன் எட்வர்ட் பஃபெட் அவர்களின் பிறந்தநாள் 

வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett, பிறப்பு: ஆகஸ்ட் 301930ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே"[4] என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது

நீதிக்கதை

பீர்பாலின் புத்திசாலித்தனம்

 காபூல் அரசருக்கு, பீர்பாலின்

அறிவாற்றலையும்,

புத்திசாலித்தனத்தையும் கேள்விப்பட்ட

அவர், பீர்பாலின் அறிவை ஆராய்ந்து

அறிய ஆவல் ஏற்பட்டது.

 அதனால், காபூல் அரசர், ஒரு கடிதம்

எழுதினார். அதில் மேன்மை தாங்கிய

அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு,

ஆண்டவன் தங்களுக்கு நலன்கள்

பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக.

தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம்

அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு

எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன்

மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல்

அரசர்.

 கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு

குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே

புரியவில்லையேன்னு குழம்பி,

பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு.பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு.

அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில்

அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதி

அனுப்புங்கள் என்றார். அக்பரும்

அதேபோல் தபால் எழுதி அனுப்பினார்.

 பிறகு அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம்

அதிசயம் எப்படி அனுப்புவீர்? என்று

கேட்டார்.

 அதற்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து

அந்த அதிசயத்தைப் பாருங்கள் மன்னா

என்றார்.

 பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்து

ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த

பூசணிப்பிஞ்சு ஒன்றைக் கொடியுடன்

மண் குடத்திற்குள் வைத்து

வைக்கோலால் குடத்ததை மூடினார்.

 சிறிது நாட்களான பிறகு பூசணிப் பிஞ்சு

குடம் நிறையுமளவிற்கு

குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து

பெருத்திருந்தது. குடத்துக்குள் இருக்கும்

பூசணிக்காயை மட்டும்

வைத்துக்கொண்டு மற்றதை நீக்கி

விட்டார் பீர்பால்.

பிறகு அந்தக் குடத்தை அக்பரிடம்

காட்டினார் பீர்பால். அக்பருக்கு

ஆச்சரியம். குடத்தின் வாய் பகுதி உள்ளே

இருக்கும் பூசணிக்காயைவிட மிக

சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய

பூசணிக்காயை எப்படி நுழைத்தீர்கள்

எனக் கேட்டார். 

 பீர்பால் அதைப்பற்றி மன்னருக்கு

விளக்கிக் கூறினார். அந்தப்

பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல்

அரசருக்கு அதிசயம் என்று அனுப்பி

வைக்குமாறு கூறினார்.

 குடத்திற்குள் இருக்கும் பூசணியைப்

பார்த்த காபூல் அரசர், பீர்பாலோட புத்திக்

கூர்மையை எண்ணி வியப்பில்

ஆழ்ந்தார்.


நீதி :

புத்திசாலியாக இருந்தால் முடியாது

என்பது கூட முடியும்.

இன்றைய செய்திகள்

30.08. 2023

*சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைப்பு- மத்திய அரசு அதிரடி.

*காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.

*சிறுநீரக செயல் இழப்பை கண்டுபிடிக்கும் 'ஸ்டிப்'  -சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் அறிமுகம்.

* வானில் இன்று நீல நிற முழு நிலவை பார்க்கலாம் - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு.

*உலக பேட்மிட்டன் தரவரிசை: ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் எச்.எஸ். பிரனாய்.

*ஆசிய கோப்பை தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாத இலங்கை அணி அறிவிப்பு.

Today's Headlines

*Cooking gas cylinder price reduced by Rs 200- central government action.

 * Cauvery Management Authority orders to release water at the rate of 5000 cubic feet per second for 15 days.

 * Chennai Government Hospitals
Introduce 'STIP' to detect kidney failure 

 * A blue full moon can be seen in the sky today - a rare event that only happens once in three years.

 *World Badminton Rankings: H.S.Pranai advances to sixth position.  

 *Sri Lankan team announced  the list without key players for Asia Cup series.
 Prepared by

Covai women ICT_போதிமரம்