திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
விளக்கம்:
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
பழமொழி :
A good face needs no paints
அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது. --சார்லி சாப்ளின்
பொது அறிவு :
1. பூமியின் இயற்கை செயற்கைக்கோளின் பெயர் என்ன?
விடை: சந்திரன்
2. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?
விடை: செவ்வாய்
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
நீதிக்கதை
ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். அந்த ஓநாயை ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை. அதனை இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய். ஏன், இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்? என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்தது ஆட்டுக்குட்டி. பார்த்த உடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது. நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? நாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும் என்று மெல்லிய குரலில் கேட்டது. பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிட்டால் யார் கலக்கியிருப்பார்கள்? உங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது!" என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது. துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மௌனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment