Thursday, June 29, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2023





  திருக்குறள் :


பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

விளக்கம்:

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் அறக்கடவுளே எண்ணியவர்க்கு தீமையைத் தர எண்ணும்.


பழமொழி :

  A little stream will run a light mill

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.. தந்தை பெரியார்

பொது அறிவு :

1. மிகப் பெரிய மலர் எது? 

விடை: ரஃப்லேசியா அர்னால்டி 

2. மின் விளக்கின் உலோக இழை எதனால் ஆனது? 

விடை: டங்ஸ்டன்

English words & meanings :

 highway - a public road நெடுஞ்சாலை; impress - fix deeply in the mind மனத்தில் பதிய வை

ஆரோக்ய வாழ்வு :

பேரிச்சை பழத்தில் இருக்கும் மெக்னீசியம் கை, கால் பகுதிகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உடையது

ஜூன் 30


மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 301985பால்ட்டிமோர்மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.

நீதிக்கதை

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது..!!"

காற்றை கண்டதும்...

'அமைதி' என்ற முதல் மெழுகுவர்த்தி ஐயோ காற்று வீசுகின்றது. நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

 "அன்பு '' என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது' என்று அணைந்துவிட்டது. 

''அறிவு '' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான். "அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே' என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது, 'வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்' என்றது.

சிறுவன் உடனே  நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்.. 'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது...!

இன்றைய செய்திகள்

30.06. 2023

*தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா நியமனம். தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெறுவதை அடுத்து அறிவிப்பு.

*தமிழக டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்.

*சென்னையில் ட்ரோன்கள் மூலம் முக்கிய இடங்களை கண்காணிக்கும் காவல்துறையின் டிரோன் யூனிட் பிரிவை துவங்கி வைத்தார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.  

*கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் சாலையில் அரை நூற்றாண்டை கடந்த நூலகம் மூடப்படுவதையொட்டி சலுகை விலையில் விற்கப்படும் புத்தகங்கள்.

*குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்துத் தர தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு கடிதம் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவன். இறையன்பு, மாணவனை நேரில் அழைத்து திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா பரிசளித்து வாழ்த்தினார்.

*ஸ்டீவ் ஸ்மித் சதம்: 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவிப்பு.

Today's Headlines

* Shiv Das Meena was appointed as the new Chief Secretary of Tamil Nadu.  The announcement follows the retirement of Iraiyanbu, Chief Secretary.

 * Shankar Jiwal was appointed as Tamilnadu DGP.

 *DGP Shailendrababu started the drone unit of the police to monitor important places through drones in Chennai.

 *Books sold at concessional prices due to the closure of the half-century-old library on Thadakam Road next to RS Puram, Coimbatore.

 *Sixth standard student who wrote a letter to the Chief Secretary Iraiyanbu to repair the damaged road.  He called the student in person and congratulated him by gifting him a Thirukural book and a pen.

 *Steve Smith's century:
 Australia scored 416 runs in the first innings.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, June 27, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2023

  



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :203

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

விளக்கம்:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.



பழமொழி :

A little learning is a dangerous thing

அரை குறை படிப்பு ஆபத்தானது.

இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. தந்தை பெரியார்.

பொது அறிவு :

1. வெள்ளை யானைகளின் நாடு” என்று அழைக்கப்படும் நாடு எது?

விடை: தாய்லாந்து

2. உலகின் மிகப்பெரிய சூடான பாலைவனம் எது?


விடை: சஹாரா பாலைவனம்

English words & meanings :

 fragrance – a pleasant, sweet smell. noun. நறுமணம். பெயர்ச் சொல். gather - come together, bring together. noun. ஒன்றுச் சேர். திரட்டு. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

பழங்கள்: தினம் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயநோய் ,இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

ஜூன் 28


பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்நாள்

பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 281921 -டிசம்பர் 232004இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.

நீதிக்கதை

நீதி - துஷ்டருக்கு அறிவுரை கூறக் கூடாது


ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல் · குரங்காரே..என்னைப்பாரும் வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?...

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது அறிவுரைகளைக்கூட அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது. நாமும் ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று

புரித்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

இன்றைய செய்திகள்

28.06. 2023

*ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. 

*தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை- முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. 

*தமிழ்நாட்டிற்கு மூலதன முதலீட்டிற்காக ₹4079 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மத்திய அரசு.

*உலகக்கோப்பை தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

*ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்: இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Today's Headlines

* Prime Minister Modi inaugurated 5 Vande Bharat trains in one day.

 *Action to create 6 new industrial estates in Tamilnadu- Chief Minister announced.

 *Allocation of ₹4079 crore for capital investment in Tamil Nadu - Central Govt.

 * The India-Pakistan match, which is considered to be the most important match in the World Cup series, is scheduled to be held on October 15 at the Narendra Modi Stadium in Gujarat.

 *ICC 50 Over World Cup Series: India's first match is scheduled to take place on October 8 against Australia at Chennai's Chepauk Stadium.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, June 26, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2023

  


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :202

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

விளக்கம்:

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.



பழமொழி :

A lie has no legs

கதைக்கு காலில்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி. தந்தை பெரியார்.

பொது அறிவு :

1. புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?


விடை: சர் ஐசக் நியூட்டன்

2. பையின் மதிப்பை கண்டுபிடித்தவர் யார்?


விடை: ஆர்க்கிமிடிஸ்

English words & meanings :

 Extrodinary - wonderful,அசாதாரணமான. diffusion - the spreading of something so widely,பரவல்

ஆரோக்ய வாழ்வு :

யோகா செய்ய வேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவு (Fast food) போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது.

ஜூன் 27


பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்



ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 271880 - ஜூன் 11968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.  

பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்




பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கதை

சிங்கம்  இறைச்சிகளைச்  சேர்த்து வைப்பதில்லை. குகையினுள் பல நாள் படுத்து உறங்கும். இனி பசி தாங்காது என்றதும் மெல்ல எழுந்து குகையின் வாயிற்படிக்கு வந்து உடலை அசைத்து தலையை ஆட்டி—ஆ என்று கர்ச்சிக்கும்.

அந்த ஒலி எதிர்மலையிலே தாக்கித் திரும்பவரும். அங்கே காடு முழுதும் பரவியுள்ள மானும் முயலும் இதோ சிங்கம்—அதோ சிங்கம் என்று பயந்து நடுங்கிக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிவரும். அப்போது, தன் குகை வாயிலண்டையிலே வருகிற ஒரு விலங்கை அடித்துத் தின்று, மீதியை அங்கேயே போட்டுவிட்டு. உள்ளே போய்ப் படுத்துக்கொள்ளும்.

எந்தக் கணம் தேவைப்படுகிறதோ அந்தக் கணமே தனக்கு உணவு தன் வாயண்டை வரும் என்ற திடமான நம்பிக்கை அதற்கு உண்டு. அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு!

பகுத்தறிவில்லாத வனவிலங்குகளுக்குள்ள இந்தத் தன்னம்பிக்கை—பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் பலரிடத்திலே இருப்பதில்லை.

தன் அறிவை நம்புவது; தன் பலத்தை நம்புவது; தன் பொருளை, தன் சமுதாயத்தை நம்பி வாழ்வது; இதுதான் தன் நம்பிக்கை!

 இனியாவது தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்துவோமாக.

இன்றைய செய்திகள்

27.06. 2023

*  பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம். 102 பேர் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

*மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு.

*கிரீஸ் நாட்டில் புதிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார் மிட்சோடாகிஸ்.

*பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யாரும் அர்ச்சகர் ஆகலாம். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

*TNPL கிரிக்கெட் : டாஸ் வென்று வந்து வீச்சை தேர்வு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

Today's Headlines

* Engineering rank list published Tiruchendur student Nethra topper.  102 people scored 200 out of 200.

 * Increase in water release in Mettur Dam.

 *The New Democratic Party is back in power in Greece.  Mitsotakis became Prime Minister for the second time.

 *Anyone can become a priest if he has mastered the methods of worship ordered Madras High Court.

 *TNPL Cricket: Chepak Super Gillies won the toss and chose to bowl.
 Prepared by

Covai women ICT_போதிமரம்