திருக்குறள் :
அதிகாரம்:ஊழ்
திருக்குறள்:374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
விளக்கம்:
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
திருக்குறள்:374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
விளக்கம்:
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
பழமொழி :
Beauty comes not by forcing.
அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன்.
2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்
பொன்மொழி :
மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.
பொது அறிவு :
1. முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது?
மூன்று ஆண்டுகள் .
2.பாரதியார் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் என்ன?
ஷெல்லிதாசன்.
English words & meanings :
A very little ant - infant (குழந்தை)
ஆரோக்ய வாழ்வு :
இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.
தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.
NMMS Q
சீமா சச்சினின் சகோதரி. சச்சினும் ராகுலும் சகோதரர்கள் மற்றும் ராகுல் கமலாவின் மகன் ஆவார். கமலாவிற்கு சீமாவிடம் உள்ள தொடர்பு என்ன?
விடை: மகள்
பிப்ரவரி 07
தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்
தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.
நீதிக்கதை
குட்டி குரங்கின் செயல்
மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கூடம். அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர். குட்டிக் குரங்கு புஜ்ஜி. மலைமீது பல குரங்குகள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தன. அந்தக் கூட்டத்தில் புஜ்ஜி என்ற சிறிய குரங்கும் இருந்தது. அது மிகவும் புத்திசாலி. சரியாக பள்ளிக்கூட உணவு நேரத்தில் மலையை விட்டுக் கீழே இறங்கி வரும்.
மாணவர்கள் தருகின்ற உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். தாகம் தீர்த்துக் கொள்ள மாணவர்கள் குடிக்கும் குடிநீர்க் குழாயில், மாணவர்களைப் போலவே குழாயைத் திறந்து குடித்துவிட்டு, மீண்டும் குழாயைச் சரியாக மூடிவிட்டுச் செல்லும். இது அன்றாடம் நடக்கின்ற நிகழ்வு. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல புஜ்ஜி, மாணவர்கள் இல்லாததைக் கண்டு ஏமாந்து போகும். வெறும் நீரை மட்டும் குடித்துவிட்டு மலையேறும்.
முதலில் குரங்குக் குட்டியைக் கண்டு மாணவர்கள் அச்சம் கொண்டனர். நாளடைவில் அதன்மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டனர். பின்னர், அதற்குத் தாங்கள் உண்ணும் உணவிலிருந்து கொஞ்சம் கொடுத்து மகிழ்ந்தனர். ஒருநாள் வழக்கம்போல, உணவு இடைவேளைக்குச் சரியாக வந்த புஜ்ஜி, உணவுக்காகக் காத்திருந்தது. சில மாணவர்கள் மரத்தடியில் உண்டு கொண்டிருந்தனர். அவர்களின் அருகே குரங்குக் குட்டி வந்ததும் தங்களின் உணவில் கொஞ்சம் கொடுத்தனர்.
அதனை உண்டு முடித்தது. சிந்திய பருக்கைகளை, குரங்குக் குட்டியோடு, அணில் பிள்ளையும் உண்டு மகிழ்ந்தது. புஜ்ஜிக்குத் தாகம் எடுத்தது. அது குழாய் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது. அங்கே பல மாணவர்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் உள்ளே புகுந்த புஜ்ஜி திடுக்கிட்டது. குடிநீர்க் குழாய் உடைந்து, ஆறுபோல பெருக்கெடுத்து சீறிப் பாய்ந்தது. மாணவர்கள் செய்வதறியாது திகைத்தபடி நின்றிருந்தனர்.
புஜ்ஜி அங்கும் இங்கும் சென்று எதையோ தேடிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கையில் அகப்பட்ட துணி, கயிறு போன்றவற்றைக் கொண்டு வந்தது. கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை விலக்கிவிட்டு, குழாயிலிருந்து பாய்ந்து கொண்டிருந்த நீரை ஒரு கையால் அடைத்து மறுகையால் துணியைச் சுற்ற ஆரம்பித்தது. பலமுறை தோல்வியே கிடைத்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது புஜ்ஜி. இதனைக் கண்ட சில மாணவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தனர். குட்டிக் குரங்கோடு சேர்ந்து குழாயைத் துணியால் அடைத்து, கயிற்றால் கட்டினர். தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. மன நிறைவோடு அங்கிருந்து புறப்பட்டது குட்டிக் குரங்கு புஜ்ஜி.
இன்றைய செய்திகள்
07.02.2023
* சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
* ஹெக்டேருக்கு ரூ.20,000: பருவம் தவறிய கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகுப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
* புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
* எஸ்எஸ்எல்வி-டி2 சிறியரக ராக்கெட்டை பிப்ரவரி 10-ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.
* சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.
* துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: தோண்டத் தோண்ட சடலங்கள்; உயிரிழப்பு 1500-ஐ தாண்டியது.
* சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்.
* பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் 'டிரா'.
Today's Headlines
* The President has ordered the appointment of five additional judges to the Madras High Court.
* Rs 20,000 per hectare: Relief package for farmers affected by unseasonal heavy rains - Chief Minister Stalin orders.
* The Department of Primary Education has directed to send recommendations regarding opening and upgradation of new primary schools.
* ISRO plans to launch SSLV-T2 small rocket on February 10.
* Ban on 138 gambling apps of foreign countries including China: Central government action.
* Earthquake hits Turkey, Syria: Bodies unearthed; The death toll exceeded 1,500.
* International Wrestling Championships: Bronze medal for Indian athlete.
* Women's South Asian Football: India-Bangladesh made Draw.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment