Thursday, December 21, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.12.2023

    

தேசிய கணித தினம்

திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள்:326

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

விளக்கம்:

 கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

பழமொழி :

Knowledge is power

அறிவே ஆற்றல்.

இரண்டொழுக்க பண்புகள் :1

.1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்

பொன்மொழி :

பொறாமை என்பது
அடிமைகளின் குணம்..
வாழ்வில் உயர
வேண்டுமானால்
அந்த குணத்தை
முதலில் அழித்துவிடு.

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் பெயர் என்ன?

திரு.சுப்பராயலு 

2. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் பெயர்

திருமதி.ஜானகி ராமச்சந்திரன்

English words & meanings :

 find - to discover something. verb. கண்டுபிடிக்க. வினைச் சொல். fined- charged a penalty. verb. அபராதம் விதித்தல். வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு : 

கருஞ்சீரகம் ஒரு அருமருந்தாகும். இதில் இருக்கும் ஆண்டி பாக்டீரியல் தன்மை கல்லீரல், இரப்பையில் ஏற்படும் தொற்றை குணப் படுத்தும் 

டிசம்பர் 22

தேசிய கணித தினம் 

தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.[1]

இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்






சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும்செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 குறை இல்லாதவர் இல்லை


ஒருநாள் மயில் ஒன்று கடவுளை வேண்டித் தவம் செய்தது. மயிலின் கடுமையான தவம் கண்டு மெச்சிய கடவுள். அதற்கு முன் தோன்றி காட்சி தந்தார்.

"அழகிய மயிலே, உன் தவத்தைக் கண்டு உள்ளம் குளிர்ந்தோம். உன் தவத்தின் நோக்கம் என்ன சொல்," எனக் கேட்டார் கடவுள்.

"கடவுளே தங்களை வணங்குகிறேன். எனக்கு நீண்ட நாள் ஒரு கவலை மனதுக்குள் இருந்து வாட்டுகிறது.'"

"சொல் கேட்கிறேன்" ஆதரவாகப் பேசினார் கடவுள், "என் குரலே எனக்குப் பிடிக்கவில்லை. கருப்பாய் பிறந்துள்ள குயிலுக்கு மட்டும் குரல் இனிமையாக இருக்கிறதே" என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.

"அழகு மயிலே உனக்கென்ன குறைச்சல். நீ தான் பறவைகளில் அழகானவன். உன் கழுத்து அழகும், தோகையின் அழகும் வேறு எந்த பறவைகளுக்காவது படைக்கப்பட்டுள்ளதா?  நீ தோகை விரித்து ஆடும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா!" என கடவுள் சொன்னாலும், மயில் சமாதானம் அடையவில்லை.

"நீங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான். இருப்பினும் என் குரல் இன்னும் அழகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பறவைகளில் எல்லாவற்றிலும் நானே முதன்மையாய் இருந்திருப்பேன் அல்லவா" என்றது."எல்லா குணங்களும் ஒருவருக்கே அமைந்து விடாது. குறை நிறை இருக்கத்தான் செய்யும். நிறையை கண்டு மனம் மகிழ வேண்டியதுதானே. கழுகு வலிமையானது. குயில் பாடும் திறன் பெற்றது. கிளி பேசும் ஆற்றல் கொண்டது. உனக்குத் தான் அதிகம் தகுதிகள் உள்ளன. எனவே அதை எண்ணிப் பெருமைப்படு" என்று மறைந்தார் கடவுள்.

நீதி : குறைகளையே காலம் முழுவதும் நினைத்துக் கொண்டு இருக்காமல், தன் நிறைகளை அறிந்து, அதை மேலும் நன்கு வளர்த்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே இனிய வாழ்க்கை ஆகும்.

இன்றைய செய்திகள்

22.12.2023

*மதம், இனத்தை கடந்து வாழும் மனித நேயம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள்.

*சென்னையில் எண்ணெய் கழிவில் மூழ்கி 50க்கும் மேற்பட்ட பறவைகள் உயிருக்கு போராடும் பரிதாபம்.

*திருத்தணி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம் அமைச்சர், கலெக்டர் ஆய்வு.

*கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குறைதீர்ப்பு whatsapp எண் அறிவிப்பு; தூத்துக்குடி மாவட்ட  கலெக்டர் லட்சுமிபதி தகவல்.

*ஜிம்பாவே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து டேவ் ஹூட்டன் ராஜினாமா....!

Today's Headlines

* Volunteers Helping Flood Affected People with humanity Transcending Religion and Race

 *It is a pity that more than 50 birds are drowning in oil waste in Chennai and fighting for their lives.

 *Renovation work is intensified at the place of land slide on Tiruthani mountain road Minister, Collector inspection.

 * Whatsapp number for the public who are affected by heavy rain is released;  Thoothukudi District Collector Lakshmipathi information.

 *Dave Hutton has resigned as the head coach of the Zimbabwe cricket team....!
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, December 20, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.12.2023

   

திரு. ஜெகன் மோகன் ரெட்டி

திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள்:325

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

விளக்கம்:

 தனது நிலைக்கு பயந்து துறவுக் கொள்பவர்களை காட்டிலும் கொலைக்கு பயந்து கொல்லாமை மேற்கொள்பவரே தலைச் சிறந்தவர்.

பழமொழி :

Justice delayed is justice denied

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்

இரண்டொழுக்க பண்புகள் :1

.1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்

பொன்மொழி :

ஆயிரம் அறிவுரைகளை
விட ஒரு அனுபவம்
சிறந்த பாடத்தை
கற்றுத்தரும்.

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?


மரகதப்புறா

2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?

தந்தை பெரியார் (ஈ. வெ. இராமசாமி)

English words & meanings :

 osprey (n)- the sea eagle கடல் பருந்து. outbreak (n)- a beginning தொடக்கம், திடீர் எழுச்சி

ஆரோக்ய வாழ்வு : 

இலுப்பை பூ : சங்க காலம் முதல் இன்றுவரை மருத்துவத்திறகாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாம்புக்கடி, வாத நோய், சர்க்கரை வியாதி, சளி இருமல், வயிற்றுப்புண், மூலநோய்கள் சுவாசக்கோளாறு, காயங்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பை பூ ஊறு காய், காசநோய்க்கு அரிய மருந்தாகும். 

டிசம்பர் 21

ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்

எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு:  பிறப்பு: :திசம்பர் 211972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

நீதிக்கதை

 மனம் இருந்தால் இடம் உண்டு


பெரியவர் ஒருவர், ஒரு ஊரிலிருந்து, அடுத்த ஊரில் இருந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டுத் திரும்பினார். களைப்பு மேலிட்டது. நடக்க முடியவில்லை . அருகில் ஒரு குடிசை காலியாக இருந்தது. அங்கே சென்று படுத்தார்.


சிறிது நேரத்தில், மற்றொரு பெரியவர் வந்தார். “இந்த ஊரில் ஒருவர் பணம் தர வேண்டும். அவர் வீட்டில் இல்லை, வீடு பூட்டிக் கிடக்கிறது. காலையில் அவரைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இரவு இங்கே தங்குவதற்கு இடம் கிடைக்குமா?” என்றார்.


“நிச்சயம் இடம் உண்டு. இங்கே ஒருவர் படுக்கலாம்; இருவர் உட்கார்ந்து கொள்ளலாம்; வருக” என்று அவரை வரவேற்றார்.


இருவரும் தரையில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது, மற்றொரு பெரியவர் வந்தார். “ஐயா, மழை பெய்கிறது.” இரவு இங்கே தங்கிக் கொள்ள இடம் கிடைக்குமா?” என்றார்.

“தாராளமாக இடம் உண்டு. “ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம். அவ்வளவுதான் இங்கே இடம் உள்ளது.” என்று அவரை வரவேற்றனர் இருவரும்.

மூவரும் இரவு முழுவதும் பேசிக் கொண்டே நின்றனர்.

விடிந்தது, மழையும் நின்றது

மூவரும் விடைபெற்று, அவரவர் ஊருக்குத் திரும்பிச் சென்றனர்.

இன்றைய செய்திகள்

21.12.2023

*மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

*தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

*கேரள மாநிலத்தின் நதிகளில் ஒன்றான பம்பை நதியில் தொடர்ந்து கலக்கும் கழிவு நீரால் தூய்மையை இழக்கிறது.

*அதிகரிக்கும் புதிய வகை கொரோனா.... மத்திய மந்திரி எச்சரிக்கை தகவல்.

*எம்பிக்கள் கண்ணியத்தை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்; ஜனாதிபதி வலியுறுத்தல்.

*முகமது ஷமி,  வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது.

Today's Headlines

*Former Union Minister Narendra Singh Tomar has been elected as the Speaker of the Madhya Pradesh Assembly.

 *Schools and colleges in Tuticorin and Nellai have a holiday today.

 *One of the rivers of Kerala State, Pumbai River loses its purity due to continuous mixing of waste water.

 *Increasing new type of Corona.... Union Minister's warning information.

 *MPs should conduct themselves in a dignified manner;  President's  Assertion.

 *Arjuna Award to 26 people including Mohammad Shami and Vaishali.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, December 19, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.12.2023

   

சவுதி அரேபியா எண்ணெய் வயல்

திருக்குறள்

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை

குறள்:324

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

விளக்கம்:

 நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.


பழமொழி :

Jack of all trade is master of none

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.

இரண்டொழுக்க பண்புகள் :

1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.

பொன்மொழி :

நாம் எதை தொடர்ந்து
செய்கிறமோ அதுவாகவே
மாறுகின்றோம்.. எனவே
திறமை என்பது
ஒரு செயல் அல்ல
அது ஒரு பழக்கம்.

பொது அறிவு :

1. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?

விடை: சவுதி அரேபியா

2. செவாலியர் என்ற விருதை வழங்கும் நாடு எது?

விடை: பிரான்ஸ்

English words & meanings :

 fair - just, impartial, adjective and adverb, நியாயமான, பெயரடை, வினையுறிச் சொல். fair - money for journey. noun. பயணக் கட்டணம். பெயர்ச் சொல்.

ஆரோக்ய வாழ்வு : 

இலுப்பை பூ : எண்ணெய் வலி நிவாரண மருந்தாகவும் பயன்படுகிறது. சவர்க்காரம் தயாரிக்கவும், கோவில்களில் விளக்கு எரிக்கவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 துரோகியின் நட்பு வேண்டாம்.

காட்டு ராஜா சிங்கம் இரை தேடிக் கொண்டிருந்தது. சிங்கம் நல்ல பசியுடன் இருந்தது. அவ்வழியே வந்த ஓநாய் ஒன்று சிங்கத்தின் கண்களில் பட்டுவிட்டது.

ஓநாயைப் பார்த்ததும் சிங்கம் கர்ஜித்தது. "ஏய் நில் அப்படியே” என மிரட்டியது. ஓநாய் பயந்து நடுங்கி நின்றபடி "மகாராஜா வணக்கம்" என்றது.

"உன்னிடம் நான் வணக்கத்தைக் கேட்கவில்லை என்றது சிங்கம். மீண்டும் கர்ஜித்தது.

"வேறு என்ன ராஜா வேண்டும்" என்றது ஓநாய்.

"எனக்குப் பசியாக இருக்கிறது. அதனால் உன்னைக் கொன்று சாப்பிடப் போகிறேன்" என்றதும், ஓநாய் அலறியது.

"அய்யோ, மகாராஜா, நான் மிகவும் சிறியவன். உங்கள் பசிக்குப் போதாது. நான் வரும் வழியில் முரட்டுக்குதிரை மேய்ந்து கொண்டு இருக்கிறது. அதை எப்படியாவது அழைத்து வருகிறேன். அதைக் கொன்று சாப்பிடுங்கள். தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள்" எனக் கெஞ்சியது ஓநாய்.

"சரி அப்படியே செய். என்னை ஏமாற்றி விட்டு ஓட மட்டும் முயலாதே" என கர்ஜித்து. ஓநாயை விரட்டிவிட்டது சிங்கம்.

தப்பித்தோம் பிழைத்தோம் என தலை தெறிக்க ஓடியது ஓநாய். முரட்டுக் குதிரை இருந்த இடத்தை அடைந்தது. அதனிடம் ஓநாய், "குதிரையே ஒரு அழகான மேய்ச்சல் நிலம் பார்த்து வந்தேன். என்னுடன் வந்தால் உனக்குக் காட்டுகிறேன். பசும் புல்வெளி உள்ள இடம்" என ஆசை வார்த்தை காட்டியது.

ஓநாயின் பேச்சை உண்மை என நம்பிய குதிரை அதன் பின்னால் ஓடி வந்தது. ஓநாயின் திட்டப்படி, குதிரை

ஒரு பள்ளத்தில் விழுந்து மாட்டிக் கொண்டது. குதிரையினால் மேலே வரமுடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. எனவே அதனால் தப்பித்துச் செல்லவும் முடியாது.

ஒநாய் நேரே சென்று சிங்கத்தை, குதிரை இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தது. குதிரை எங்கும் இனி தப்பிச் செல்ல முடியாது, பிறகு பார்த்துக் கொள்வோம் என எண்ணிய சிங்கம், "ஓநாயே, நீ உயிர் பிழைக்க, மற்றொரு மிருகத்தைக் கொல்லச் சொல்லிக் காட்டிக் கொடுக்கிறாயே, நீ ஒரு நம்பிக்கைத் துரோகி. உனக்காக எதையும் நீ செய்வாய். உன்னைப் போன்றவர். உயிருடன் இருக்கக் கூடாது." என்றவாறே ஓநாய் மீது பாய்ந்து கொன்றது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

நீதி: நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். தீமையை நினைத்தால் தீமை தான் நடக்கும்.

இன்றைய செய்திகள்

20.12.2023

*தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்- கர்நாடகாவிற்கு பரிந்துரைத்த காவிரி ஒழுங்காற்று குழு.

*நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து; தீ விபத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை -  என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

*ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவிக்கும் 500 பயணிகளை சென்னைக்கு அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு.

*சீனாவில் கடும் நிலநடுக்கம் 111 பேர் பலி; 6.2 
ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் இடிந்து சேதம்.

*ஐபிஎல் ஏலம் மிக்செல் 
ஸ்டார்கை ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி.

Today's Headlines

*Water should be released to Tamil from Karnataka recommended by the Cauvery Regulation Committee.

 *Terrific fire accident at Neyveli NLC mine;  No one is in danger - NLC management said.

 *Special train is arranged to bring 500 stranded passengers to Chennai who are in Sentur Express train at Srivaikundam railway station.

 * 111 dead in severe earthquake in China;  6.2
 Buildings collapsed due to Richter magnitude earthquake.

 *IPL Auction Mixel
 Kolkata bought Star for Rs 24.75 crore.
 Prepared by

Covai women ICT_போதிமரம்