Thursday, November 17, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2022

திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்: இல்வாழ்க்கை

குறள் : 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருள்:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

பழமொழி :

Do well and have well.

நல்லதைச் செய்து நல்லதைப் பெறு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.

2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன். 

பொன்மொழி :

தவறவிட்ட நேரத்தை திரும்பப் பெறமுடியாது. --பெஞ்சமின் பிராங்க்ளின்

பொது அறிவு :

1. உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா எது ? 

ஹட்சன் விரிகுடா.( பரப்பு 317, 500 ச.மைல்). 

 2. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது?

 ரஷியா.

English words & meanings :

Aisle -a passage between seats, noun. இடையில் அமைந்துள்ள பாதை. பெயர்சொல். isle -island. noun. தீவு. பெயர் சொல். both homonyms 

ஆரோக்ய வாழ்வு :

உடலில் நார்ச்சத்து நன்றாக இருப்பதால் வயிறு எளிதில் சுத்தம் செய்யப்படுகிறது. நாவல் விதை பொடியை சாலட், பால் மற்றும் சாறுகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

NMMS Q

ஹரிஹரர் , புக்கர் ஆகிய இரு சகோதரர்களால்___________ தென்பகுதியில் நிறுவப்பட்டது. 

 விடை: கர்நாடகா

நவம்பர் 18


வ. உ. சி அவர்களின் நினைவுநாள்




வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

நீதிக்கதை

குறையா? நிறையா?

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது. 

பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது. 

நீதி :
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.

இன்றைய செய்திகள்

18.11.22

‘தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் மனநல ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ - மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்.

* பயங்கரவாதிகள் ஊடுருவினால் தடுப்பது எப்படி என பிரம்மாண்டமான பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

* இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக பெண் நீதிபதிகள்: அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம்.

* இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ ஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

* மின்னணு சாதனங்களை பழுதுபார்க்க இணையதளம் - மத்திய அரசு விரைவில் அறிமுகம்.

* ரஷ்ய ஏவுகணையை தகர்ப்பதற்காக உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணை போலந்தை தாக்கியதால் பதற்றம்.

* முதல் ஒருநாள் போட்டி: வார்னர், ஸ்மித் அதிரடி- இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.

* இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் இந்த ஆண்டுக்கான தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக் போட்டி: தொடக்க ஆட்டத்தில் மின்வாரியம் அணி வெற்றி.

Today's Headlines

* The High Court has directed the Tamil Nadu government to set up a mobile mental health counseling center in all schools in Tamil Nadu.

*   'Madras Eye' is spreading Rapidly in Chennai - Patients thronging hospitals.

* A grand security exercise was held across Tamil Nadu based on how to prevent terrorists from infiltrating.  10 thousand people participated in it.

 * Tamil Nadu has the  most women judges in India: Minister S. Raghupathi informed with pride.

*  India's first private rocket 'Vikram S' will be launched today from Sri Harikota.

* Central Government is going to Launch a Website platform for Repair of Electronic Devices Soon

* Tensions rise after missile fired by Ukrainian military to shoot down Russian missile hits Poland

 * First ODI: Warner, Smith wonderful play- Australia beat England

 * Indian table tennis player Sarath Kamal has been selected for this year's Dayanchand Gelratna Award.

 * 1st Division Hockey League Match: Minwariyam wins the opening match.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment