திருக்குறள் :
பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் : 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
பொருள்:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
பழமொழி :
A picture is a poem without words
சொல்லாமல் சொல்வதே ஓவியம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது.
2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது .
பொன்மொழி :
மனிதராகப் பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்.
பொது அறிவு :
1.இந்தியாவில் சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
மேற்கு வங்காளம்.
2. தமிழ்நாட்டில் அதிக அளவில் முட்டை தயாரிக்கும் மாவட்டம் எது?
நாமக்கல்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
உப்பு மட்டும் சேர்த்து வறுத்த கொண்டைக்கடலையில் மாங்கனீசு, ஃபோலேட் சத்து, பாஸ்பரஸ் மற்றும் செம்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை நம்முடைய இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
வறுத்த கொண்டைக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்க்க உதவும்.
NMMS Q 71:
பனியாறுகள் இல்லாத கண்டம் எது?
விடை : ஆஸ்திரேலியா
செப்டம்பர் 30
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day)
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) ஆண்டுதோறும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும்.[1] ஜெரோம் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார். 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.
நீதிக்கதை
ராக்ஃபெல்லருக்கு வழங்கிய அறிவுரை
சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரை ராக்ஃபெல்லர் என்பவர் சந்தித்தார். ராக்ஃபெல்லர், பிற்காலத்தில் உலகில் புகழ் பெற்ற பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். விவேகானந்தரைச் சந்தித்தபோது, ராக்ஃபெல்லர் அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை. ராக்ஃபெல்லரின் நண்பர்கள் பலர், விவேகானந்தரைப் பற்றி அவ்வப்போது ராக்ஃபெல்லரிடம் கூறியிருந்தார்கள். எனவே விவேகானந்தரைப் பற்றி ராக்ஃபெல்லர் நிறையவே கேள்விப்பட்டிருந்தார் என்றாலும் ஏனோ அவர், விவேகானந்தரைச் சந்திப்பதற்குத் தயங்கினார்.
விவேகானந்தர் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகள் செய்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் திடீரென்று, விவேகானந்தரைச் சந்திக்க வேண்டும்! என்ற தீவிர எண்ணம் ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது.
அந்த வேகத்தில் அவர் விவேகானந்தர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அவருக்காக வீட்டின் கதவை வேலைக்காரன் திறந்தான். அந்த வேலைக்காரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ராக்ஃபெல்லர் முன் அனுமதிகூடப் பெறாமல் விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார். விவேகானந்தர் அப்போது அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.
அவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர் சென்றும் விவேகானந்தர் தன் முகத்தைத் தூக்கி, வந்தது யார்? என்று பார்க்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் கழிந்தது. தலை கவிழ்ந்திருந்த நிலையில் விவேகானந்தர் தலை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் திடீரென்று ராக்ஃபெல்லர் மட்டுமே அறிந்திருந்த அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். இறுதியில் அவர், உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லை. உலகிற்கு நன்மை செய்வதற்காக இறைவன் உங்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்.
அதனால் உலகிற்கு நன்மை செய்வதற்கு உரிய ஒரு வாய்ப்பை இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான்! எனவே நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை உலக நன்மைக்காகச் செலவு செய்யுங்கள் என்று கூறினார். இவ்விதம் விவேகானந்தர் கூறியது ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் எனக்குச் சொல்வதா? என்று அவருக்குத் தோன்றியது. எனவே அவர், நன்றி, வணக்கம், சென்று வருகிறேன் என்றுகூட எதுவும் சொல்லாமல், வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார்.
ஆனால் விவேகானந்தரின் ஆன்மிக சக்தி ராக்ஃபெல்லரிடமும் வேலை செய்தது. ஒரு வாரம் கழிந்திருக்கும். ராக்ஃபெல்லர், பொதுத்தொண்டு நிறுவனம் ஒன்றுக்குப் பெரிய ஒரு தொகையை நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே அவர் அதற்கான திட்டங்களை விரிவாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை எடுத்துக்கொண்டு விவேகானந்தரைச் சந்திப்பதற்குச் சென்றார். முன்பு போலவே அதே வேகத்தில் அவர் மீண்டும் முன் அனுமதியின்றி, விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.
அன்றைய தினமும் விவேகானந்தர் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர், தாம் கொண்டு சென்றிருந்த காகிதத்தை விவேகானந்தர் முன்பு வேகமாக வீசி இதோ, இதைப் படித்துப் பாருங்கள்! இப்போது உங்களுக்குத் திருப்தி தானே! நீங்கள் இப்போது எனக்கு நன்றி சொல்ல வேண்டும்! என்று கூறினார். விவேகானந்தர் அசையவும் இல்லை, ராக்ஃபெல்லரைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. அவர் அமைதியாக ராக்ஃபெல்லர் காகிதத்தில் எழுதியிருந்த அனைத்தையும் படித்தார்.
படித்து முடித்ததும் அவர், நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் தாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். அதுதான் ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல் பெரிய நன்கொடை ஆகும். ராக்ஃபெல்லர் தன்னிடமிருந்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில், நல்ல விதத்தில் செலவு செய்வதற்கு விவேகானந்தர் வழிகாட்டினார். எனவே அவர்தாம் விவேகானந்தருக்கு, நன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.
இன்றைய செய்திகள்
30.09.22
* குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
* பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது
* உரிகம் காப்புக் காட்டில் 2 குட்டிகளுடன் 7 யானைகள் முகாமிட்டுள் ளன. எனவே, இப்பகுதி கிராம மக்கள் இரவு நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
* காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.
* ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட `பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
* பயணிகள் கார்களில் அடுத்த ஆண்டு முதல் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு.
* இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
* வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
* முதல் டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.
* கொரியா ஓபன் டென்னிஸ்: ராடு ஆல்பட், டெனிஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.
* சர்வதேச செஸ் கூட்டமைப்பின் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய சிறுமிகளான ஷுபி குப்தா, ஏ.ஷார்வி ஆகியோர் பட்டம் வென்றனர்.
Today's Headlines
* TNPSC has announced that the Group-2 exam results will be published in October.
* Ahead of the festive season, platform ticket prices have been increased at major railway stations in Chennai
* 7 elephants with 2 cubs camped in Urikam reserve forest. Therefore, the forest department has warned the villagers of the area to avoid going into the forest area at night.
* Heavy rain is likely in 10 districts including Kanchipuram and Thiruvallur.
* The central government has announced the extension of ``Pradhan Mantri Garib Kalyan Anna Yojana'' for another 3 months to provide free food grains to the poor.
* 6 Airbags Mandatory in Passenger Cars from Next Year: Central Govt.
* In Sri Lanka, public servants are banned from posting comments on social media.
* South Korea has accused North Korea of conducting another missile test.
* First T20I: India beat South Africa
* Korea Open Tennis: Radu Albat advances to tennis quarterfinals
* Indian girls Shubi Gupta and A. Sharvi won titles in International Chess Federation's World Cadet Chess Championship.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment